எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை நடைபெற்றது.
மதுரையில் காமராஜர் சாலை, அரசு மருத்துவமனை, ரிசர்வ் லைன், ஊமச்சிகுளம் உள்ளிட்ட பல இடங்களில் அம்மன் என்ற பெயரில் நடிகர் சூரிக்கு சொந்தமாக உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில் காமராஜர் சாலையில் இயங்கி வரும் உணவகத்தில், உணவு பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறையாக வணிக வரி செலுத்தப்படவில்லை என்ற புகார் எழுந்தது.
அதன்அடிப்படையில் மதுரை வணிக வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு சோதனை நடத்தினர். சோதனையின் போது சில ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், ஓட்டல் நிர்வாகத்தினரை வணிக வரித்துறை அலுவலகத்தில் வந்து இன்று விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
ரவீந்தர் - மகாலட்சுமி திருமணம் குறித்த விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் இன்னும் ஓய்ந்த பாடில்லை. திருமணம் முடிந்து 2 வாரம் ஆகியும் தொடர்ந்து இவர்கள் குறித்த செய்திகள் இணையத்தில் உலா வருவதை பார்க்க முடிகிறது.
மகாலட்சுமியின் முன்னாள் கணவர் பற்றியும். ரவீந்தரின் மனைவி ,இவர்களின் விவாகரத்துக்கான காரணம் என இணையவாசிகளுக்கு தினமும் தீனி போடும் செய்திகள் இணையத்தில் வெளியாகுகின்றன.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ரவீந்தர் - மகாலட்சுமி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மகாலட்சுமி செம்ம போல்ட்டாக தனது சம்பளம் மற்றும் குடும்பம் பற்றி பேசி இருந்தார். அந்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
அழகு, தோற்றம், உருவம் இவற்றை பார்க்காமல் மகாலட்சுமி , ரவீந்தரை 2வது திருமணம் செய்ய முக்கியமான காரணம் பணம் தான் என்று இணையவாசிகள் இவர்கள் திருமணத்தை விமர்சித்து இருந்தனர். இதுக் குறித்து மகாலட்சுமியிடம் ஆங்கர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய மகாலட்சுமி, "இந்த விஷயம் பலருக்கும் தெரியாது போல, என் அப்பாவும் சினிமாவில் தான் இருக்கிறார். பாகுபலி, ஆர்ஆர்ஆர், பொன்னியின் செல்வன் என பல படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
தெலுங்கில் சங்கர் ஐயா என்றால் எல்லோருக்கும் தெரியும்" "அதே போல் நானும் 3 சீரியல், 2 படங்களில் நடித்து வருகிறேன். ஆக வசதியான வாழ்க்கை வாழ எங்களிடம் இருக்கும் பணமே போதும். என் சம்பளம் 3 லட்சம், இது எல்லாம் போதாது என்றா நான் பணத்திற்காக இவரை திருமணம் செய்தேன். நிச்சயம் கிடையாது. அதே போல் இவர் தயாரிப்பாளர் என்பதால் தான் எல்லோரும் இப்படி சொல்கிறார்கள்" என்று விளக்கம் அளித்துள்ளார். மகாலட்சுமியின் இந்த பேட்டி மூலம் அவரின் சம்பளம் ரூ. 3 லட்சம் என்ற ரகசியம் இப்போது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.
எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் முதலாவதாக வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணி இரண்டாவது முறையாக 'வலிமை' படத்தில் இணைந்துள்ளனர். இந்த இரண்டு படங்களையும் போனி கபூர் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் அஜித் தனது அடுத்த படத்திலும் எச். வினோத் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே கூறப்பட்டு வந்தது. இந்தப் படத்திற்காக செட் அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது நடிகை தபு இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
அஜித் தபு ஜோடி ஏற்கனவே 2000-ம் ஆண்டு ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியான கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி இணைய வாய்ப்பு அமைந்துள்ளது. தல 61 படத்திற்கு ஜிப்ரான் தான் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் இளம் நடிகை அங்கீதா மஹாராணா. அங்கிதா என்ற பெயரை அப்சரா ராணியாக மாற்றிக்கொண்டார். தற்போது சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை அப்சரா பகிர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில்,
"என்னை கன்னட சினிமா துறையில் ஒரு படத்துக்கு கதாநாயகியாக தேர்ந்தெடுத்தார்கள். கதை விவாதம் என்ற பெயரில் ஓட்டல் அறைக்கு தனியாக வரச் சொன்னார்கள். தங்கள் ஆசைக்கு இணங்கினால் மட்டுமே வாய்ப்பு கொடுப்போம் என்று நிபந்தனை விதித்தனர். அப்போது நான் என் அப்பாவை துணைக்கு அழைத்துச் சென்றேன்.
ஆனால் அங்கு சென்ற பிறகு நிலைமை புரிந்து நாங்கள் அங்கிருந்து நகர்ந்து விட்டோம். இதுவரை தெலுங்கில் இதுபோன்ற தொல்லைகளை சந்தித்ததில்லை.
தெலுங்கில் திறமை உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் தெலுங்கு ரசிகர்கள் மிகவும் மதிப்பார்கள்" என்று கூறியுள்ளார்.