வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Latest Cinema News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Latest Cinema News. Show all posts
Showing posts with label Latest Cinema News. Show all posts

Saturday, January 22, 2022

21 ஆண்டுகளுக்குப் பிறகு.! அஜித் உடன் ஜோடி சேரும் பிரபல நடிகை.!

எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் முதலாவதாக வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து எச்.வினோத் மற்றும் அஜித் கூட்டணி இரண்டாவது முறையாக 'வலிமை' படத்தில் இணைந்துள்ளனர். இந்த இரண்டு படங்களையும் போனி கபூர் தயாரித்துள்ளார்.


இந்நிலையில் அஜித் தனது அடுத்த படத்திலும் எச். வினோத் உடன் கூட்டணி அமைக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே கூறப்பட்டு வந்தது. இந்தப் படத்திற்காக செட் அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது நடிகை தபு இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

அஜித் தபு ஜோடி ஏற்கனவே 2000-ம் ஆண்டு ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியான கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி இணைய வாய்ப்பு அமைந்துள்ளது. தல 61 படத்திற்கு ஜிப்ரான் தான் இசையமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சினிமா செய்திகள் 


முந்தைய சினிமா செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, January 18, 2022

ஆசைக்கு இணங்கினால் மட்டுமே வாய்ப்பு - பிரபல நடிகை பளீச் பேச்சு.!

தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் இளம் நடிகை அங்கீதா மஹாராணா. அங்கிதா என்ற பெயரை அப்சரா ராணியாக மாற்றிக்கொண்டார். தற்போது சினிமாவில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை அப்சரா பகிர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில்,


"என்னை கன்னட சினிமா துறையில் ஒரு படத்துக்கு கதாநாயகியாக தேர்ந்தெடுத்தார்கள். கதை விவாதம் என்ற பெயரில் ஓட்டல் அறைக்கு தனியாக வரச் சொன்னார்கள். தங்கள் ஆசைக்கு இணங்கினால் மட்டுமே வாய்ப்பு கொடுப்போம் என்று நிபந்தனை விதித்தனர். அப்போது நான் என் அப்பாவை துணைக்கு அழைத்துச் சென்றேன்.


ஆனால் அங்கு சென்ற பிறகு நிலைமை புரிந்து நாங்கள் அங்கிருந்து நகர்ந்து விட்டோம். இதுவரை தெலுங்கில் இதுபோன்ற தொல்லைகளை சந்தித்ததில்லை. 


தெலுங்கில் திறமை உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் தெலுங்கு ரசிகர்கள் மிகவும் மதிப்பார்கள்" என்று கூறியுள்ளார்.


 

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சினிமா செய்திகள் 


முந்தைய சினிமா செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, January 16, 2022

வில்லி கதாப்பாத்திரத்தை விரும்பும் வனிதா விஜயகுமார்.!

‘தில்லு இருந்தா போராடு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில் வனிதா விஜயகுமார் கலந்துகொண்டார்.


விழாவில் அவர் பேசுகையில், ‘‘சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தை நான் கோட்டை விட்டுவிட்டேன். முட்டாள்தனம் பண்ணி விட்டேன். இதை மிக தாமதமாக உணர்ந்தேன்.

இந்த படத்தின் டைரக்டர் முரளிதரன் என்னிடம் வந்து கதை சொன்னபோது, ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’ என்ற வில்லி வேடத்தில் நடிக்க முடியுமா? என்று தயங்கி தயங்கி கேட்டார். நடிக்கிறேன் என்று நான் சொன்னதும், அவர் முகம் மலர்ந்தது. வில்லி வேடத்தில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தொடர்ந்து வில்லியாக நடிக்க முடிவு செய்து இருக்கிறேன்.

எனக்கு கார் ஓட்ட தெரியும். வேகமாக ஓட்டுவேன். ஆனால், ‘பைக்’ ஓட்ட தெரியாது. படத்துக்காக புல்லட் ஓட்ட கற்றுக்கொண்டேன். படத்தில் நான் புல்லட் ஓட்டி வரும் காட்சி, ‘பந்தா’வாக இருக்கும். உலக மகா வில்லியாக தெரிவேன்.’’ இவ்வாறு வனிதா விஜயகுமார் பேசினார்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

சினிமா செய்திகள் 


முந்தைய சினிமா செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Monday, December 06, 2021

மீண்டும் நடிக்கவரும் விஜயகாந்த்.!!! ரசிகர்கள் ஹேப்பி.! | Vijayakanth Return to Acting | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

அரசியலில் கவனம் செலுத்த துவங்கிய விஜயகாந்த், கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இருந்து விலகினார். ஆனாலும் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு தான் இருந்தார்.


ஆனால் அதன்பின் உடல்நிலை சரியில்லாமல் போனதன் காரணமாக சினிமாவில் நடிப்பதை இருத்திவிட்டார். நடிகர் விஜய் ஆன்டனி தற்போது விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, நடிகர் விஜயகாந்த் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.

Saturday, October 05, 2019

நடிகை ரேவதி மீது இப்படிப்பட்ட வழக்கா...? அதிர்ச்சியில் தமிழ் மக்கள் | Tamil Actress Revathi News Case

நடிகை ரேவதி மற்றும் மணிரத்தினம் ஆகியோர் கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதினர். அக்கடிதத்தில் குறிப்பிட்டது என்னவெனில் நாட்டில் சிறுபான்மையினர் அதிகம் தாக்கப்படுவதாகவும், சிறுபான்மையினர் இந்தியாவில் வாழவே மிகவும் அச்சப்படுவதாகவும் எழுதப்பட்டது.


அக்கடிதத்தில் மேற்கண்ட விவகாரம் சம்மந்தமாக நடிகை ரேவதி, இயக்குனர் மணிரத்தினம் உட்பட 50 நடிகர் மற்றும் நடிகைகள் இணைந்து நீண்ட கோரிக்கையினை முன்வைத்தனர். அந்த கடிதத்தில்



  • நாட்டின் மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதனாலேயே ஒருவர் தேசதுரோகி, தேசவிரோதி என்றெல்லாம் முத்திரை குத்தப்படுவதை ஏற்க முடியாது. 
  • எந்த ஒரு குடிமகனும் தனது சொந்த நாட்டிலேயே உயர்பயத்துடன் பய உணர்வோடு வாழக்கூடாது.

என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறிப்பிட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 03/10/2019 அன்று பீகார் நீதிமன்றத்தில் 50 நடிகை நடிகர்கள் மீதும் FIR போடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், நடிகை ரேவதி மீது தற்போது தேச துரோகி வழக்கு பாய்ந்துள்ளது.