வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: History of Bipin Rawat
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label History of Bipin Rawat. Show all posts
Showing posts with label History of Bipin Rawat. Show all posts

Friday, December 10, 2021

பல்வேறு நாட்டு ராணுவ அதிகாரிகள் வருகை | பிபின் ராவத் உடலுக்கு இறுதி மரியாதை | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதி மரியாதை நடைபெறுகிறது. 


இதில் பங்கேற்க முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இலங்கை, பூடான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் வருகை புரிந்தனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறுதி ஊர்வலம்..! | Bipin Rawat Funeral Convoy | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் இன்று மாலை முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்படுகிறது.


முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் இல்லத்தில் இருந்து ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக கிளம்பியது. தொடர்ந்து 4 மணி அளவில் அவரது உடல் புதுடெல்லியில் உள்ள தௌலக்கான் பகுதியில் உள்ள ப்ரார் சதுக்கத்தில் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.

முன்னதாக ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி ஜென்ரல் பிபின் ராவத் உடலுக்கு மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிடோர் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Wednesday, December 08, 2021

2015-லேயே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி தப்பிய பிபின் ராவத் | Bipin Rawat 2015 Life Save from Air Accident | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், 11 ராணுவ வீரர்கள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை சூளூர் விமானப்படைத் தளத்தில் இருந்து எம்.ஐ.17வி-5 ரக ஹெலிகாப்டர் மூலம்வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி மறைவுக்கு தேசிய அளவில் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்த சூழலில் பிபின் ராவத் ஏற்கெனவே 2015 ஆம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் தற்போது பலரால் நினைவுகூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவர் லெப்டினென்ட் ஜெனரலாக பணியாற்றி வந்தார். கடந்த 2015 பிப்ரவரி 3 ஆம் தேதி பிபின் ராவத் உள்பட 3 ராணுவ உயரதிகாரிகள் நாகாலாந்து மாநிலம் திமாபூரில் உள்ள விமானப்படைத் தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.

அந்த ஹெலிகாப்டர் தரையில் இருந்து சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பறந்த போது, திடீரென எஞ்சின் செயல்பாடு நின்று போனது. இதனால் ஹெலிகாப்டர் வேகமாக தரையில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் அதில் இருந்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவாமாக உயிர் தப்பினர். இந்த விபத்து நடந்து சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி அதில் இருந்த 13 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்