வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Nilgiri Kunnur Helicopter Accident Today
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Nilgiri Kunnur Helicopter Accident Today. Show all posts
Showing posts with label Nilgiri Kunnur Helicopter Accident Today. Show all posts

Friday, December 10, 2021

பல்வேறு நாட்டு ராணுவ அதிகாரிகள் வருகை | பிபின் ராவத் உடலுக்கு இறுதி மரியாதை | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் மற்றும் இறுதி மரியாதை நடைபெறுகிறது. 


இதில் பங்கேற்க முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இலங்கை, பூடான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் வருகை புரிந்தனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

ஹெலிகாப்டர் விபத்தை வீடியோ எடுத்தது ஏன்? - வீடியோ எடுத்த போட்டோகிராபர் அளித்த பேட்டி | Why Video Taken that Helicopter.? | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

கடந்த 8 ம் தேதி முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்திற்கு சென்றனர் . மோசமான வானிலை மற்றும் மேக மூட்டம் காரணமாக குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது .


இதில் முப்படைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர் . மேலும் படுகாயமடைந்த வருண் சிங் என்ற அதிகாரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இதனிடையே முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி மைய வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது . முப்படை தளபதிகள் , இராணுவ அதிகாரிகள் தமிழக முதல்வர் மு . க . ஸ்டாலின் , தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி மரியாதை செலுத்தினர்.


இதனையடுத்து 13 உடல்களும் தனித்தனியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது . அங்கிருந்து உடல்கள் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டன . படுகாயமடைந்த வருண் சிங் உயர் சிகிச்சைக்காக பெங்களூரூ அழைத்துச் செல்லப்பட்டார் . இதனிடையே உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேட்டுப்பாளையம் , கருமத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வழி நெடுக காத்திருந்த உடல்களை எடுத்துச் சென்ற வாகனங்கள் மீது மலர் தூவி ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர் . இதேபோல பல்வேறு இடங்களில் இராணுவ வீரர்களுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து நடக்கும் முன்னர் சுற்றுலா பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது . இந்த காட்சிகளை கோவையை சேர்ந்த போட்டோகிராபர் ஜோபால் அவரது நண்பர் நாசரின் குடும்பத்தினர் உடன் மலை இரயில் பாதையில் போட்டோ எடுக்கச் சென்ற போது படம் பிடித்துள்ளார் . இது குறித்து பேசிய ஜோபால் , ' இரயில்வே டிராக்கில் நிறைய பேர் போட்டோ எடுப்பதை பார்த்துள்ளேன்.

அதனால் நாங்களும் சென்று போட்டோ எடுத்தோம் . அப்போது ஹெலிகாப்டர் சத்தம் கேட்டது . என்ன இந்த நேரத்தில் ஹெலிகாப்டர் வருதே , சவுண்ட் கொஞ்சம் வித்தியாசமா இருக்கிறதே என வீடியோ எடுத்தேன் . ஹெலிகாப்டர் மேகத்திற்குள் சென்றதும் 5 செகண்டில் டமார் என சத்தம் கேட்டது . என் நண்பர் ஓடி வந்து ஒடைச்சிடுச்சா எனக் கேட்ட போது , நானும் ஆமாம் என சொன்னேன் . மேலே வரும் போது பத்து நிமிடத்திற்குள் போலீஸ் ஜீப் வந்து விட்டது . அவர்களிடம் கேட்கும் போது , விபத்து எனக்கூறினர் .

நாங்கள் சென்ற போது பயர் சர்வீஸ் , ஜீப் , ஆம்புலன்ஸ் எல்லாம் வந்து விட்டது . பின்னர் அங்கிருந்து கிளம்பிவிட்டோம் . இரவு சேனலில் செய்தி பார்க்கும் போது , எந்த எவிடன்ஸ் இல்லை என்பதை அறிந்தோம் . அதனால் இந்த விடீயோவை கொடுக்கலாம் என ஆட்சியர் அலுவலகம் வந்தோம் . ஆனால் அங்கு யாரும் இல்லை . காவல் நிலையத்திற்கு சென்ற போது , நிகழ்விடத்திற்கு செல்லுமாறு கூறினர் . அதன்படி அங்கு சென்று ஒருவரிடம் விடீயோவை கொடுத்து விட்டு வந்து விட்டோம் . பின்னர் அனைத்து சேனல்களிலும் வந்து விட்டது .' என அவர் தெரிவித்தார்.

Related News:

🔴Shocking: ஹெலிகாப்டர் விபத்துக்கு முன் எடுக்கப்பட்ட கடைசி நிமிட வீடியோ.. வெளியான பரபரப்பு காட்சி | Last Minute Photo About Coonoor Helicopter Crash 

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Thursday, December 09, 2021

நாளை முழு கடையடைப்பு | முப்படைகளின் தளபதி இறப்பால் மாவட்டம் முழுவதும் துக்கம் அனுசரிப்பு | 1 Day Shops Closed over District for Bipin Rawat Death | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

நீலகிரியில் நிகழ்ந்த கோர விபத்து ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனசாட்சியையும் உலுக்கி எடுத்துவிட்டது.


குன்னூரில் நஞ்சப்ப சத்திரம் குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று நண்பகல் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. மரத்தில் மோதி அதிலிருந்து எரிபொருள் சிந்தியதால் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகிய நிலையில் 11 பேர் உயிரிழந்தனர். உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட மூவரில் இருவர் உயிரிழந்தனர். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டுவரப்பட்டன. இது முடிந்தபின் அங்குள்ள மைதானத்தில் உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.


அவர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்.

இதன்பின் இவர்களின் உடல்கள் 13 ஆம்புலன்ஸ்கள் மூலம் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டன. அங்கிருந்து டெல்லி கொண்டுசெல்லப்பட்டு முழு ராணுவ மரியாதையுடன் நாளை உடல்கள் அடக்கம் செய்யப்படவுள்ளன. இச்சூழலில் இவ்விபத்தால் பெரிதும் வேதனைக்குள்ளான உதகை மக்கள் வீரர்கள் உயிரிழந்ததற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் நாளை முழு கடையடைப்பை கடைப்பிடிக்கவுள்ளனர். நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவகங்கள் உட்பட அனைத்து வகையான கடைகள் அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

மனைவியிடம் வீடியோ கால் பேசி புறப்பட்டவர்... 27 வயதில் வீர மரணம்: விவசாயி மகன் யார் இந்த சாய் தேஜா? | Chooloor Helicopter Crash | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது.


ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் உயிரிழந்தனர்.

அதில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி முதுலிகா ராவத், ராணுவ வீரர்கள் லிட்டெர், ஹர்ஜிந்தர் சிங், குருசேவாக் சிங், ஜிதேந்தர் குமார், விவேக் குமார், சாய் தேஜா, சாத்பால், சவுஹான், குல்தீப், பிரதீப், தாஸ் ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் மட்டும் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.


மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணையும் கருப்பு பெட்டியை தேடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வீரர்களின் உயிரிழப்புக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று டில்லியில் அவர்களின் இறுதிச்சடங்கு நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், பிபின் ராவத்தோடு ஆந்திர மாநிலம் ரெகாடா கிராமத்தைச் சேர்ந்த சாய் தேஜா என்ற ராணுவ வீரரும் ஹெலிகாப்டரில் பயணித்தார். அவரும் இந்த விபத்தின் மூலம் உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த அவரது குடும்பத்தினரும் சொந்த கிராமத்தினரும் மிகுந்த துரத்தில் ஆழ்ந்துள்ளனர். சித்தூர் மாவட்டம் குரபாலகோட்டா ஈகுவா ரெகாடா கிராமத்தைச் சேர்ந்தவர் சாய் தேஜா, 2013-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். 27 வயதான சாய் தேஜாவுக்கு சர்மிளா என்ற மனைவியும் 4 வயதில் ஆண்குழந்தையும் 2 வயதில் பெண் குழந்தைகளும் உள்ளனர்.


சாய் தேஜா இறுதியாக அவரது மனைவியிடமும் அவரது குழந்தைகளிடமும் வீடியோ கால் மூலம் புதன்கிழமை காலை பேசியுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். சாய் தேஜா ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை மோகன் விவசாயி. தாய் புவனேஸ்வரி குடும்பத் தலைவியாக இருந்துள்ளார். அவரது சகோதரர் மகேஷும் ராணுவத்தில் ஜவானாக பணிபுரிந்து தற்போது சிக்கிமில் பணியாற்றி வருகிறார்.

சாய் தேஜா ஒரு வருடத்திற்கு முன்பு தனது குழந்தைகளின் கல்விக்காக தனது குடும்பத்தை மதனப்பள்ளி நகரில் உள்ள எஸ்பிஐ காலனிக்கு மாற்றினார்.

 அவரது திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டதும், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று இரவு குன்னூருக்கு கிளம்பினர்.

ஜெனரல் பிபின் ராவத்தின் அனைத்து சுற்றுப்பயணங்களிலும் சாய் தேஜா உடன் சென்றுள்ளார். ஏழு மாதங்களுக்கு முன்புதான் ஜெனரல் பிபின் ராவத்தின் எஸ்பிஓவாக சாய் தேஜா சேர்ந்தார். ஜெனரலுடன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார் சாய் தேஜா.

மூன்று மாதங்களுக்கு முன்பு விநாயக சதுர்த்தி பண்டிகையின் போது சாய் தேஜா தனது வீட்டிற்கு கடைசியாக வருகை தந்தார் என்றும் ஒரு மாதம் தனது குடும்பத்துடன் இருந்தார் என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். விடுப்புக்கு விண்ணப்பித்துவிட்டு ஜனவரி மாதம் வீடு திரும்புவதாக உறுதியளித்த சாய் தேஜா கடைசி வரை வரவில்லை என கண்ணீர் கலங்க கூறுகின்றனர் குடும்பத்தினர்.

உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத், ராணுவ வீரர் சாய் தேஜா உள்ளிட்ட 13 பேரின் உயிரிழப்புக்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மொகன் ரெட்டி இரக்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிசந்திரனும் 13 பேரின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தன் இரங்கலை பதிவு செய்துள்ளார்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

சூலுார் விமானப்படை தளத்தில் 13 பேரின் உடலுக்கு மரியாதை செலுத்த ஏற்பாடு! | Sulur Air Force | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

சூலுார் விமானப்படை தளத்திலும் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


பின்பு சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானம் மூலம் 13 பேரின் உடல்களும் டெல்லிக்கு கொண்டுச் செல்லப்படுகின்றன. இன்று மாலை டெல்லியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறும் என கூறப்படுகிறது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

🔴Shocking: ஹெலிகாப்டர் விபத்துக்கு முன் எடுக்கப்பட்ட கடைசி நிமிட வீடியோ.. வெளியான பரபரப்பு காட்சி | Last Minute Photo About Coonoor Helicopter Crash வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் குன்னூர் அருகே நேற்று விபத்துக்குள்ளானதில் முப்படை தளபதி, பிபின் ராவத், அவரின் மனைவி மிதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணமடைந்தனர்.


அவரின் மறைவு நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. அவரின் இறுதிசடங்கு நாளை டெல்லியில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விழுவதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி நிமிட வீடியோ வெளியாகி உள்ளது.. இந்த வீடியோவை சுற்றுலா பயணிகள் சிலர் தங்களின் செல்போனில் படம்பிடித்ததாக கூறப்படுகிறது.. 


அந்த வீடியோவில் பனிமூட்டத்திற்குள் மறையும் காட்சி இடம்பெற்றுள்ளது.. ஹெலிகாப்டர் கீழே விழுந்துருச்சா என்று பேசுவதும் காட்சியில் உள்ளது.. எனினும் இந்த வீடியோவை இந்திய விமானப்படை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இதனிடையே விபத்து நடந்த இடம் முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.. மேலும் அந்த இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. தடங்களை பாதுகாக்கும் நோக்கில், விபத்து நடந்த இடத்தில் காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட 600 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.. மேலும் தடங்களை சேகரிக்கும் பணியை ராணுவ நுண்ணறிவு பிரிவினர் வீடியோ பதிவு செய்து வருகின்றனர்.. 

விபத்து நடந்த நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.. மேலும் இதர உதிரி பாகங்களை சேகரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.


சமீபத்திய செய்திகள் 

சிக்கியது ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டி..! தொடரும் ஆய்வு | Black Box of Helicopter is Saved | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

தமிழகத்தின் குன்னூர் அருகே விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.


விபத்து நடந்த இடத்தில், விமானப்படை தளபதி இன்று நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்துகிறார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


சூலூர் விமானப் படைத் தளத்திலிருந்து வந்த அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் நேற்றிரவு ஆய்வ மேற்கொண்டனர். அப்போது, காட்டேரி நச்சப்புராசத்திரம் மலைப்பகுதியில் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட கருப்புப் பெட்டியை டெல்லி அல்லது பெங்களூருவுக்கு கொண்டுசென்று ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


சமீபத்திய செய்திகள் 

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் | Motcha Deepam in Kanchi Kamatchi Temple for Helicopter Crash | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

குன்னூரில் நடந்த விபத்தில் ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் ராஜகோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.


இது குறித்து காஞ்சிபுரம் சங்கர மடம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணம் அடைந்திருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது. அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள், வீரர்களும் உயிரிழந்திருப்பது தேசத்திற்கும் பெரும் பேரிழப்பாகும்.


பிபின் ராவத் ராணுவத்தில் பல்வேறு பதவிகளில் இருந்து சிறப்பாக பணியாற்றிய பெருமைக்குரியவர். அவர் தேசத்திற்காக செய்த தியாகத்தையும், சேவையையும் வருங்கால சந்ததிகள் உணர்வார்கள்.

அவருடைய ஆன்மா சாந்தி அடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மோட்சதீபம் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்திய செய்திகள் 

Wednesday, December 08, 2021

2015-லேயே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி தப்பிய பிபின் ராவத் | Bipin Rawat 2015 Life Save from Air Accident | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், 11 ராணுவ வீரர்கள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த கேப்டன் வருண் சிங், 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை சூளூர் விமானப்படைத் தளத்தில் இருந்து எம்.ஐ.17வி-5 ரக ஹெலிகாப்டர் மூலம்வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி மறைவுக்கு தேசிய அளவில் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்த சூழலில் பிபின் ராவத் ஏற்கெனவே 2015 ஆம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் தற்போது பலரால் நினைவுகூறப்படுகிறது. அந்த நேரத்தில் அவர் லெப்டினென்ட் ஜெனரலாக பணியாற்றி வந்தார். கடந்த 2015 பிப்ரவரி 3 ஆம் தேதி பிபின் ராவத் உள்பட 3 ராணுவ உயரதிகாரிகள் நாகாலாந்து மாநிலம் திமாபூரில் உள்ள விமானப்படைத் தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.

அந்த ஹெலிகாப்டர் தரையில் இருந்து சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பறந்த போது, திடீரென எஞ்சின் செயல்பாடு நின்று போனது. இதனால் ஹெலிகாப்டர் வேகமாக தரையில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் அதில் இருந்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவாமாக உயிர் தப்பினர். இந்த விபத்து நடந்து சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி அதில் இருந்த 13 பேர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்