வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Keezhkadhirpur Madhura Gundukulam Kancheepuram
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Keezhkadhirpur Madhura Gundukulam Kancheepuram. Show all posts
Showing posts with label Keezhkadhirpur Madhura Gundukulam Kancheepuram. Show all posts

Saturday, January 15, 2022

கரும்பிலான காங்கேயம் காளையை உருவாக்கி விழிப்புணர்வு.!

காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்கதிர்பூர் மதுரா குண்டுகுளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆ. செந்தில்குமார். இவர் பாமக கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.


இந்நிலையில் தனது விவசாய நிலத்தில் தைப்பொங்கல் திருநாளை சிறப்பு செய்யும் நாளாக அமையவும், விவசாயிகளின் உற்ற நண்பனாகவும், பசுமாடுகள் பசிக்கு பால் தரும் தாயாக விளங்கும் நாட்டு மாடுகளின் சிறப்பிக்கும் வகையிலும் பொங்கலை கொண்டாட தீர்மானித்தார். மேலும் தமிழர்களின் வீரத்தின் அடையாளமான ஒன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியாகும். பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் மற்றும் நாட்டு மாடு வகைகள் பெருமளவில் அழிந்து வருகிறது என்பது வருத்தமானது ஒன்றாகும்.

இந்தியாவில் சுமார் 87 வகையான நாட்டு மாடுகள் இருந்தன. தற்போது 35 வரையறுக்கப்பட்ட மாடுகள் மட்டுமே உள்ளது. ஜல்லிக்கட்டு உம்பளச்சேரி, காங்கேயம், புலிக்குளம்ஆலம்பாடி, பர்கூர் ஆகிய காளைகள் மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது. இவை நான்கும் பழம் பெருமை வாய்ந்தவை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நம் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப பரிமாண வளர்ச்சி அடைந்தவை ஆகும்.

நாட்டு மாடுகளின் சிறப்பை இளைய தலைமுறைகள் அறிந்து கொள்ளவும், விவசாயிகளிடையே நாட்டு மாடுகள் இனத்தை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நமது தமிழரின் வீர விளையாட்டில் பங்கு கொள்ளும் காங்கேயம் காளைகளை சிறப்பிக்கும் வகையில் இரண்டு காங்கேயம் காளைகளை சுமார் 1000 கரும்புகளை கொண்டு காளையின் இயற்கையான தோற்ற அளவுகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கரும்பிலான காளைகளை ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஏழு நாட்களாக வடிவமைத்தனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் 


முந்தைய காஞ்சிபுரம் மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்