வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Lockdown
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Lockdown. Show all posts
Showing posts with label Lockdown. Show all posts

Wednesday, January 05, 2022

🔴[வழிகாட்டி நெறிமுறைகள் ] தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு..! என்னென்ன வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்..?

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்காக நாளை (06.01.2022) முதல் இரவு நேர ஊரடங்கு  அமல்படுத்தப்படவுள்ளது.


இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

மேலும், கொரோனா பரவல் எதிரொளி காரணமாக ஜனவரி 20 வரை மருத்துவம் தவிர அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கின்போது பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ இரயில் ஆகியவை இயங்காது. உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 07.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அனுமதிக்கப்படும். இதர மின் வணிகங்களுக்கு அனுமதி இல்லை.

இரவு நேர ஊரடங்கின்போது, மாநிலத்திற்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் பொது, தனியார் பேருந்து போக்குவரத்து சேவை அனுமதிக்கப்படும். தமிழகத்திற்குள் செல்லும் பேருந்துகள் மற்றும் ரயில்களில் 50% பயனிகள் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதி. பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருத்தல் அவசியம். கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவும் அறிவுறுத்தல்.

இருந்தபோதிலும், இரவு நேர ஊடங்கின்போது, ரயில், விமானம் மற்றும் பேருந்தில் பயனிப்பவர்களுக்கு சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

1 முதல் 9 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து. 10,11 மற்றும 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.

பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தடையில்லாமல் செயல்படும். இது தவிர கடந்த ஆண்டு ஊரடங்கின்போது அறிவிக்கப்பட்ட மிக முக்கியமான அத்தியவாசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி என வழிகாட்டி நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தமிழக செய்திகள் 


முந்தைய தமிழக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பு.!

தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பு. தமிழகத்தில் ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.


"வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது"

முழுவதும் படிக்க இங்கு கிளிக் செய்யவும்..! தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர முழு ஊரடங்கு..! என்னென்ன வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்..?

 

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தமிழக செய்திகள் 


முந்தைய தமிழக செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, December 19, 2021

சென்னையில் மீண்டும் லாக்டவுனா..? தலைநகரில் தலைகாட்டிய ஒமைக்ரான்...! வெளியான அறிவிப்பு.!!!

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுகொண்டதால் பெரும்பாலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. 


தற்போது தான்மக்கள் மெல்ல மெல்ல தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இது போன்ற சூழ்நிலையில் டெல்டா வைரஸ் என்ற உருமாறி கொரோனா தற்போது ஓமைக்ரானாக மீண்டும் உருமாற்றம் பெற்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதி கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் "தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மீதி உள்ள 28 பேருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் அடைந்துள்ளது. இதில் 4 பேர் மட்டுமே பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து வந்துள்ளனர். மீதி 24 பேர் மற்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

இதனால் இனி அனைத்து நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் பரிசோதனை கட்டாயமாக்கப் வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ஒமைக்ரான் பரவலை கட்டுபடுத்த முடியும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் வீட்டில் அல்லது அரச அமைந்துள்ள மையங்களில் கட்டாயம் ஏழுநாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுப்பதோடு, எட்டாவது நாளில் பரிசோதனை மேற்கொள்ளும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" தெரிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் கொரோனா மூன்றாவது அலை எனப்படும் ஒமைக்ரான் பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Sunday, April 18, 2021

ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு | Lockdown Tamilnadu News | Vil Ambu News | Tamil Latest News

 *கொரோனா ஊடரங்கில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு*

*தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு*


*இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை, இரவு நேர ஊரடங்கு அமல்*


*தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிப்பு*


*பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி*


*12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு*


*12ஆம் வகுப்பு செயல்முறை தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும்*


*ஆலோசனை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு*

Saturday, August 01, 2020

30 மணி நேரத் தளர்வில்லா முழு ஊரடங்கு | விவரம் உள்ளே | 30 hours full Lock down Sunday | Vil Ambu News

இன்றிரவு 12 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை 30 மணி நேரத் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலாகிறது.




மருத்துவம் சார்ந்த காரணங்கள் தவிர வேறு எதற்கும் பொதுமக்கள் வெளியில் வரக்கூடாது எனப் போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இன்று வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு:

''சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆகஸ்டு 01 (இன்று) இரவு 12 மணி முதல் ஆகஸ்டு 03 (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை தமிழக அரசு எந்தவிதத் தளர்வும் இன்றி முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.


அதன்படி ஆகஸ்டு 02 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது.

அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வருவதையும், தெருக்களில் சமூக இடைவெளியின்றி கூட்டமாகக் கூடி நிற்பதையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.


இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை.
மீறிவரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறைப் பிரிவு 144-ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதற்காக நகரம் முழுவதும் 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இது தொடர்பாக சந்தேகங்கள் இருப்பின் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330/ 044-23452362 அல்லது 90031 30103 எனும் எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்'.
இவ்வாறு சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.