வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Mumbai News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Mumbai News. Show all posts
Showing posts with label Mumbai News. Show all posts

Tuesday, September 17, 2024

ஆண்டிற்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு...! Increase in the number of Indians earning more than Rs.10 crore per year...! Vil Ambu Seithigal

ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 63 சதவீதம் அதிகரித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த சென்ட்ரம் ஆராய்ச்சி நிறுவனம் என்ற நிதி சார்ந்த அமைப்பு கோடீஸ்வரர்கள் சம்பளம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது.



அதன் முடிவுகளில் கூறப்பட்டு உள்ளதாவது:ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 63 சதவீதம் அதிகரித்து உள்ளது. தற்போது 31,800 பேர் ஆண்டுக்கு ரூ.10 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகின்றனர். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.38 லட்சம் கோடி சம்பாதித்து உள்ளனர்.

ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு மேல் 58,200 பேர் சம்பாதிக்கின்றனர். இது 49 சதவீதம் அதிகம் ஆகும். இந்த வகையினர் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டி உள்ளனர்.

அதேபோல், 10 கோடி பேர் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் சம்பாதிக்கின்றனர். இது கடந்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த வகையினர், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.49 லட்சம் கோடி சம்பாதித்து உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய தமிழ் செய்திகள் 


தமிழ்நாடு முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Friday, December 31, 2021

சென்செக்ஸ் குறியீடுகள் உயர்வு: 2021 இறுதிநாளில் 22 சதவீத முன்னேற்றம்.!

2021 இன் கடைசி நாளில் பங்கு குறியீடுகள் உயர்ந்தன. ஆட்டோ, வங்கி, உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் அதிக லாபம் ஈட்டின. ஜவுளி மீதான ஜிஎஸ்டியை தற்போதைக்கு உயர்த்துவதில்லை என்ற முடிவால் ஜவுளிப் பங்குகள் லாபம் அடைந்தன.


சென்செக்ஸ் 459.50 புள்ளிகள் உயர்ந்து 58,253.82 ஆகவும், நிஃப்டி 150 புள்ளிகள் உயர்ந்து 17,354 ஆகவும் உள்ளன. இதன் மூலம், 2021ல் சென்செக்ஸ் லாபம் 22 சதவீதமாக உள்ளது. நிஃப்டி 24.1 சதவீதம் உயர்ந்தது.

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, அல்ட்ராடெக்ஸ் சிமென்ட், டாடா மோட்டார்ஸ் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின. என்டிபிசி, சிப்லா, டெக் மஹிந்திரா, பவர்கிரிட் கார்ப் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை நஷ்டமடைந்தன.

ஆட்டோ, வங்கி, எஃப்எம்சிஜி, உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடுகள் 1-2 சதவீதம் வரை அதிகரித்தன. பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் தலா ஒரு சதவீதம் உயர்ந்தன.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய செய்திகள் 


முந்தைய தேசிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, December 14, 2021

பாதாளத்தில் 17 ஆபாச நடன அழகிகள்.!! போலீஸ் அதிர்ச்சி | 17 Sexual Dancers in Black Room | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்கள் ஆபாச உடைகளுடன் மதுபான விடுதிகளில் நடனமாடும் 'டான்ஸ் பார்களுக்கு' தடை அமலில் உள்ளது. எனினும் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக டான்ஸ் பார்கள் நடந்து வருகின்றன.


இந்நிலையில் அந்தேரி பகுதியில் உள்ள தீபா என்ற பாரில் சட்டவிரோதமாக பல செயல்கள் நடந்து வருவதாக சமூக குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.


இதையடுத்து கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் அந்த பாரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பாரில் பெண்கள் யாரும் இல்லை. நடன அழகிகள் குறித்து போலீசார் அங்குள்ள ஊழியர்களிடம் பல மணி நேரம் விசாரித்தனர். அவர்களும் பாரில் நடன அழகிகள் கிடையாது என விடாப்பிடியாக கூறினர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை சமூக குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் அங்கு சென்றார். பாரில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பாரில் ஒரு அறையில் சந்தேகத்துக்கு இடமாக பொிய அளவில் கண்ணாடி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த கண்ணாடியை உடைத்து பார்த்தனர்.

அப்போது கண்ணாடிக்கு பின்புறம் சிறிய கதவு இருந்தது. மேலும் அந்த கதவை திறந்த போது உள்ளே குறுகிய பாதாள அறை இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பாதாள அறைக்குள் அறைகுறை ஆடைகளுடன் நடன அழகிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். மேலும் அவர்கள் நீண்ட நேரம் அறைக்குள்ளே இருக்கும் வகையில், அழகிகளுக்கு தேவையான குடிநீர், குளிர்பானம், உணவு வகைகளும் உள்ளே இருந்து உள்ளது. இதையடுத்து போலீசார் பாதாள அறையில் இருந்த 17 நடன அழகிகளையும் மீட்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பார் மேலாளர், காசாளர், 3 ஊழியர்களை கைது செய்தனர்..

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள்