வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Maharashtra News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Maharashtra News. Show all posts
Showing posts with label Maharashtra News. Show all posts

Sunday, January 16, 2022

சிங்கப்பெண்ணாக உருமாறிய இல்லத்தரசி..! டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டபோது மக்களை காப்பாற்றிய பெண்.!

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகேயுள்ள சிரூர் பகுதிக்கு கடந்த 7ம் தேதி மினி பஸ் ஒன்றில் வகோலி பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என சிலர் சுற்றுலா சென்றனர்.

 அந்த பஸ்சை 40 வயது ஆண் டிரைவர் ஒருவர் ஓட்டிச் சென்றார். மறுநாள் அங்கிருந்து திரும்பும் வழியில் பஸ் டிரைவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு ஸ்டீயரிங்கிலேயே சாய்ந்தார். இதையறிந்த பிக்னிக் ஏற்பாட்டாளர் ஆஷா வக்மரே என்ற பெண், பாய்ந்து சென்று டிரைவரிடம் இருந்து ஸ்டீயரிங்கை பிடித்து தான் இயக்க ஆரம்பித்தார்.

இதை பார்த்து பஸ்சில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சியடைந்தனர். காரை மட்டும் இயக்க தெரிந்த ஆஷா முதல்முறையாக பஸ்சை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு இயக்கி சென்றார். கனேகான் கல்சா பகுதியை அடைந்ததும் வலிப்பு நோய் பாதித்த டிரைவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து வேறு பஸ் டிரைவர் வந்து சிக்ராபூர் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட டிரைவரை கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து சுற்றுலா சென்ற பெண்கள் மற்றும் குழந்தைகளை மாற்று டிரைவர் வகோலிக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றார். பஸ்சை சாமர்த்தியமாக இயக்கிய ஆஷாவை பொதுமக்கள் வாழ்த்தியும் பாராட்டியும் வருகின்றனர். ஆஷா பஸ்சை இயக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய செய்திகள் 


முந்தைய தேசிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, December 22, 2021

மீண்டும் இரவு நேர ஊரடங்கு- மத்திய அரசு உத்தரவு...? எங்கெங்கு வாய்ப்பு..?


நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் கடந்த 4 நாட்களில் மட்டும் இரட்டிப்பாகியுள்ளது. இதனையடுத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஒமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு போட வாய்ப்பு உள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தேசிய செய்திகள் 


முந்தைய தேசிய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, December 14, 2021

பாதாளத்தில் 17 ஆபாச நடன அழகிகள்.!! போலீஸ் அதிர்ச்சி | 17 Sexual Dancers in Black Room | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்கள் ஆபாச உடைகளுடன் மதுபான விடுதிகளில் நடனமாடும் 'டான்ஸ் பார்களுக்கு' தடை அமலில் உள்ளது. எனினும் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக டான்ஸ் பார்கள் நடந்து வருகின்றன.


இந்நிலையில் அந்தேரி பகுதியில் உள்ள தீபா என்ற பாரில் சட்டவிரோதமாக பல செயல்கள் நடந்து வருவதாக சமூக குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.


இதையடுத்து கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் அந்த பாரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பாரில் பெண்கள் யாரும் இல்லை. நடன அழகிகள் குறித்து போலீசார் அங்குள்ள ஊழியர்களிடம் பல மணி நேரம் விசாரித்தனர். அவர்களும் பாரில் நடன அழகிகள் கிடையாது என விடாப்பிடியாக கூறினர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை சமூக குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் அங்கு சென்றார். பாரில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பாரில் ஒரு அறையில் சந்தேகத்துக்கு இடமாக பொிய அளவில் கண்ணாடி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த கண்ணாடியை உடைத்து பார்த்தனர்.

அப்போது கண்ணாடிக்கு பின்புறம் சிறிய கதவு இருந்தது. மேலும் அந்த கதவை திறந்த போது உள்ளே குறுகிய பாதாள அறை இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பாதாள அறைக்குள் அறைகுறை ஆடைகளுடன் நடன அழகிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். மேலும் அவர்கள் நீண்ட நேரம் அறைக்குள்ளே இருக்கும் வகையில், அழகிகளுக்கு தேவையான குடிநீர், குளிர்பானம், உணவு வகைகளும் உள்ளே இருந்து உள்ளது. இதையடுத்து போலீசார் பாதாள அறையில் இருந்த 17 நடன அழகிகளையும் மீட்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பார் மேலாளர், காசாளர், 3 ஊழியர்களை கைது செய்தனர்..

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள்