வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Tanjore Thanjavur District News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Tanjore Thanjavur District News. Show all posts
Showing posts with label Tanjore Thanjavur District News. Show all posts

Monday, December 13, 2021

நடு ரோட்டில் சரக்கு பார்ட்டி!! லாரி ஏறி நண்பர்கள் மூவர் பலி!! | Drinking Wine in Road | Lorry Accident| 3 Persons Died | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

தேசிய நெடுஞ்சாலையில், செண்டர்மீடியன் நடுவில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்கள் மூன்று பேர் மீதும் வேகமாக வந்துக் கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில், மோதியதில் 3 நண்பர்களும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டம் நாட்டாணி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (41). ஒப்பந்தகாரராக பணியாற்றி வந்த இவருக்கு மருங்கை பகுதியைச் சேர்ந்த சுதாகர் (27), அசூரமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் (32) ஆகியோர் நண்பர்கள் ஆவார்.
இவர்கள் மூவரும் சேர்ந்து கும்பகோணம் நோக்கி சென்றுள்ளனர். அங்குள்ள நெடுஞ்சாலையோரமாக வாகனங்களை பார்க் செய்து விட்டு, செண்டர்மீடியனில் அமர்ந்து மது அருந்த தொடங்கியுள்ளனர்.


அந்நேரத்தில் தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது செண்டர் மீடியனில் இருந்த மூவர் மீது ஏறி, அவர்கள் சாலையோரமாக நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள் மீது மோதி நின்றது.
நொடிப் பொழுதில் நடந்து விட்ட இந்த கோர விபத்தில் நண்பர்கள் பிரசாந்த், சுதாகர், சந்திரசேகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். லாரியை ஓட்டி வந்த நபர் தப்பித்து ஓடிவிட்டார்.

இதுகுறித்து அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து அவசர ஊர்திகளை வரவழைத்து மூவரின் உடல்களையும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

Wednesday, December 01, 2021

புதிய அவைதலைவர் நியமனம் | அய்யம்பேட்டையில் அதிமுகவினர் வெடி வெடித்துக் கொண்டாட்டம் | ADMK Persons Celebrate at Ayyampettai


அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமித்ததை வரவேறக்கும் விதமாக தஞ்சை மாவட்ட(வ) பாபநாசம் ஒன்றிய(மே) அய்யம்பேட்டையில்  எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். 

மேலும் இந்த நிகழ்வில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். இதில் கழக மாவட்ட, ஓன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் உடனிருந்தனர்.