எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
டிக்-டாக் செயலிக்கான வீடியோ பதிவின்போது துப்பாக்கி வெடித்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியின் ஜப்ராபாத் பகுதியை சேர்ந்த சல்மான் (வயது 19) என்ற கல்லூரி
மாணவர், தனது நண்பர்களான அமிர், சொகைல் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு
காரில் இந்தியா கேட் பகுதிக்கு சென்றார்.
பின்னர் வீடு திரும்பும் வழியில்
அவர்கள் துப்பாக்கியை உடலில் குறிவைப்பது போன்று டிக்-டாக் வீடியோ ஒன்றை
பதிவு செய்ய முடிவு செய்தனர்.
இதற்காக காரின் டிரைவர் இருக்கையில் இருந்த சல்மானின் கன்னத்தில்,
நாட்டுத்துப்பாக்கி ஒன்றின் முனையை வைத்தவாறு சொகைல் போஸ் கொடுத்தார்.
அப்போது திடீரென அந்த துப்பாக்கி வெடித்தது. இதில் குண்டுபாய்ந்ததால்
படுகாயமடைந்த சல்மான், காரிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதனால் பதறிப்போன நண்பர்கள், உடனே அவரை தங்கள் உறவினர் ஒருவருடன் சேர்ந்து
மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சல்மான்
ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சல்மானின் நண்பர்கள்
அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில்,
சல்மானின் 2 நண்பர்கள் மற்றும் அவர்களின் உறவினரை போலீசார் கைது செய்தனர்.
டிக்-டாக் செயலிக்கான வீடியோ பதிவின்போது துப்பாக்கி வெடித்து வாலிபர்
உயிரிழந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிக் டாக்கில் ஆபாசமாக வீடியோ வெளியிடும் பெண்களை குறித்து வைத்து
விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக பாலியல் புரோக்கர் ஒருவர் பகீர் தகவலை
வாக்குமூலமாக வெளியிட்டார்.
டப்ஸ்மாஷ் என்ற ஆப் ஒன்று பிரபலம் ஆனது. அதில் வரும் சினிமா
பாடல்களுக்கும், வசனங்களுக்கும் அனைத்து தரப்பினரும் வாயசைத்து தங்கள்
நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்தனர்.

எனினும் இவை சம்பந்தப்பட்டவரின்
செல்போனில் மட்டுமே இருக்கும்.
அவராக பார்த்து யாருக்காவது வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்
பார்வார்டு செய்தால் உண்டு. ஆனால் தற்போது அறிமுகமாகியுள்ள டிக் டாக்
செயலியில் உலகம் முழுக்க பார்க்கும் படி இணையத்தில் பதிவேற்றம்
செய்யப்படுகிறது.
ஆபாச ஆடை
இதில் பெண்கள், கல்லூரி மாணவிகள் என மிகவும் ஆபாசமாக ஆடை அணிந்து கொண்டு
செக்ஸியாக நடனம் ஆடுகின்றனர். இது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால்
இதை அனைவரும் பார்க்கின்றனர்.

பரபரப்பு தகவல்
இது போன்ற பெண்களை குறி வைத்து அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக
பாலியல் புரோக்கர் ஒருவர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சென்னையில் ஐடி
நிறுவன ஊழியர்களை குறிவைத்தும், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக
வலைத்தளங்கள் மூலம் மசாஜ் சென்டரில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில்
நடத்தி வந்த புரோக்கர் பூங்கா வெங்கடேசன் (43).
குண்டர் சட்டம்
இவர் மீது சென்னை முழுவதும் 60க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலம் தப்ப முயன்ற பூங்கா வெங்கடேசனை விபச்சார
தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 6ம் தேதி கைது செய்தனர். விசாரணையில் அவர்
மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது
போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டிக் டாக் செயலி
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில் பாலியல்
தொழிலை விரிவுப்படுத்த நவீன முறையை பயன்படுத்தலாம் என நினைத்த போதுதான்
டிக் டாக் செயலி நினைவுக்கு வந்தது. இதில் பல பெண்கள் வீடியோக்களை
வெளியிடுகின்றனர்.
சாட்டிங்
அவர்களுள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அரைகுறை ஆடைகளோடு
ஆபாசமாக நடனமாடி பெண்கள் வீடியோக்களை பதிவு செய்கின்றனர். இவர்களுள்
யாருக்கு அதிக லைக்ஸ் கிடைக்கிறது என்பதை வைத்து அவர்களிடம் சாட்டிங்கில்
நட்பாக பேசுவோம்.
தொழில் நடத்த
பின்னர் அவர்களிடம் நைஸாக பேசி பாலியல் தொழிலுக்குள் கொண்டு வருவோம். அதோடு
இந்த வீடியோக்களுக்கு மயங்கி ஆபாசமாக கமெண்ட் போடும் ஆண்களையும் விடாமல்
சாட் செய்து அவர்களை அந்த பெண்களுடன் உறவு கொள்ள வைப்போம். இப்படித்தான்
பாலியல் தொழிலை நடத்தி வந்ததாக வெங்கடேசன் வாக்குமூலம் அளித்தார்.