வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Tiruvarur District News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Tiruvarur District News. Show all posts
Showing posts with label Tiruvarur District News. Show all posts

Wednesday, January 26, 2022

காதல் மனைவியை அடித்துக் கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவன்.!

திருவாரூர் மாவட்டம், ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கேசவமூர்த்தி, பிரியதர்ஷினி தம்பதி. இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.


இந்நிலையில் நேற்று பிரியதர்ஷினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பரிசோதனை முடிவில், பிரியதர்ஷினி உடலில் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பிரியதர்ஷினி உறவினர்கள் அவரது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரை அடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் மனைவியைக் கணவனே அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

திருவாரூர் மாவட்ட செய்திகள் 


திருவாரூர் மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

சொ

Monday, December 06, 2021

இனி தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே ரேஷன்? - உணவுத்துறை அமைச்சர் விளக்கம்! | Is Vaccinated Persons only Allowed at Ration.? | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுமா என்பது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் ரேஷன் கடைகள், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர்கள் தடைவிதித்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகின.

இது குறித்து திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலளித்து பேசுகையில், கொரோனா தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் வதந்தி மட்டுமே. அரசு அதுப்போன்ற எந்த உத்தரவும் விதிக்கவில்லை என்றார்.

சமீபத்திய செய்திகள் 

Saturday, December 04, 2021

விபத்தில் சிக்கிய மாணவனின் உயிரைக் காப்பாற்றிய செவிலியர்! குவியும் பாராட்டு..! | Nurse Emergency Treatment to Student at Road Accident | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News


மன்னார்குடியில் நேர்ந்த சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவருக்கு CPR எனும் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய செவிலியர் வனஜாவை பொதுமக்கள் பாராட்டினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர்தோட்டத்தை சேர்ந்த செவிலியர் வனஜா. மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நேற்று அவர் மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தனது குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். 

செவிலியர் வனஜா வந்த கார் மன்னார்குடி அருகே 6-நம்பர் வாய்க்கால் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது இவரது காருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த இளைஞர் சென்ற இருசக்கர வாகனத்தின் குறுக்கே ஆடு ஒன்று வந்ததால் ஆட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்ததில் இளைஞர் பலத்த காயமடைந்தார்.

இதை பார்த்த செவிலியர் வனஜா உடனடியாக காரை நிறுத்தி அருகில் சென்று இளைஞரை பரிசோதனை செய்தார். அப்போது அவர் நாடித் துடிப்பு நின்று ஆபத்தான நிலையில் இருந்தது தெரிந்தது. உடனடியாக செவிலியர் வனஜா சி.பி.ஆர் என சொல்லப்படக்கூடிய இதயத்துடிப்பை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரும் மார்பின் மீது அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார். இதனால் மீண்டும் அந்த இளைஞரின் இதயத்துடிப்பு பழைய நிலைமைக்கு திரும்பி நாடித்துடிப்பும் சீரானது.

இளைஞருக்கும் சுயநினைவு திரும்பியது. இதற்கிடையில் வனஜாவின் கணவர் ஆனந்தன் 108 ஆம்புலன்ஸக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்சும் வந்து சேர்ந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அந்த இளைஞர மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இளைஞர் குறித்து விசாரனை செய்ததில் அவர் மன்னார்குடி அடுத்த கருவாகுறிச்சியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் வசந்த் என்பதும் அவர் மல்லிப்பட்டிணம அடுத்த மனோராவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. பின்னர் கல்லூரி மாணவர் வசந்த் மேல் சிசிக்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். வசந்த் ஆபத்து நிலையிலிருந்து மீண்டது குறித்து அறிந்த பின்னரே செவிலியர் வனஜா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்க்கு கிளம்பி சென்றுள்ளார். 

விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்த இளைஞருக்கு சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செவிலியர் வனஜாவின் செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

Recent Posts Widget