வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 06, 2018

H2O தெரியாமல் பேந்த பேந்த முழித்த மாடல் அழகி


அழகிப் போட்டிகளில் கட்டாயம் கடைசி ரவுண்டில் ஏதாவது கேள்வி கேட்பார்கள். அந்த பதில் கூட அவர்களுக்குப் பட்டத்தைப் பெற்றுத் தரலாம்.நான் இறந்த பின்னரும் இந்த உலகை பார்க்க விரும்புகிறேன். அதனால் கண் தானம் செய்வேன் என்று கூறிய ஐஸ்வர்யா ராய் ஆகட்டும்.

நான் விரும்பும் உன்னதமான வேலை தாயாக இருப்பதே எனக் கூறிய மனுஷி சிலாராக இருக்கட்டும் அற்புதமான பதில்களால் பரிசை வென்றவர்களாவர். அண்மையில் நடந்த மிஸ் வங்கதேசம் அழகிப் போட்டியில் ஒரு போட்டியாளரிடம் H2O என்றால் என்னவென்று கேட்கப்பட்டது. 3-ம் வகுப்பு குழந்தைகூட இது தண்ணீர் எனக் கூறிவிடும். ஆனால், அந்த அழகியோ பேந்த பேந்த முழித்தார். அதில், அதி பயங்கரமான கேள்வியைக் கேட்டதுபோல் இன்னொரு முறை கேள்வியை சொல்லுங்கள் என்று கேட்டார்.

Popular Posts


தினம் ஒரு திரிகடுகம் அர்த்தத்துடன் - Daily one Thirukadugam with meaning - 1 - 06/10/2018

தினம் ஒரு திரிகடுகம் :


திரிகடுகம் - 1:
கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த்
தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம், - இம் மூன்றும்
பூவைப் பூ வண்ணன் அடி.
 

 அர்த்தம் :

உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும் நிகழ்த்திய திருமாலின் அடிகளை வணங்கினால் அனைத்து தீமைகளும் போகுமே.

Popular Posts


தினம் ஒரு திரிகடுகம் அர்த்தத்துடன் - கடவுள் வாழ்த்து - 06/10/2018



திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருளை குறிக்கும். மூன்று மருந்துப் பண்டங்களால் ஆகிய திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலம் பேணுவதைப் போன்று, இந்நூற் செய்யுட்களில் மும்மூன்றாக உரைக்கப் பெற்ற அறங்களும் உயிர் நலம் பேணுவனவாம். இதனாலேயே இந்நூல் திரிகடுகம் எனப் பெயர் பெற்றது. இதன் ஆசிரியர் நல்லாதனார்.
கடவுள் வாழ்த்து


கண் அகல் ஞாலம் அளந்ததூஉம், காமரு சீர்த்
தண் நறும் பூங் குருந்தம் சாய்த்ததூஉம், நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம், - இம் மூன்றும்
பூவைப் பூ வண்ணன் அடி.



உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும் நிகழ்த்திய திருமாலின் அடிகளை வணங்கினால் அனைத்து தீமைகளும் போகுமே.


Popular Posts

தினம் ஒரு நாலடியார் அர்த்தத்துடன் - Daily one Naaladiyar with meaning - 11 - 06/10/2018

தினம் ஒரு நாலடியார்


பாடல் - 11.
நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார்; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்தீருப் பார்.

அர்த்தம் :
நல்லறிவாளர், மூப்பு நிச்சயமாக வரும் என்று கருதி இளமையிலேயே துறவு பூண்டனர்; குற்றம் நீங்காத, நிலையற்ற இளமைப் பருவத்தில் மகிழ்ந்து வாழ்ந்தவர், முதுமைக் காலத்தில் கோலை ஊன்றிக் கொண்டு வருத்தத்துடன் எழுந்திருப்பர்!


Popular Posts


தினம் ஒரு திருக்குறள் அர்த்தத்துடன் - Daily one Thirukkural with meaning -11 - 06/10/2018

 தினம் ஒரு குறள் :



குறள் - 11:
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

 அர்த்தம் :

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.



Popular Posts