வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, April 06, 2020

மளிகை பொருட்களை இருளர்களுக்கு வழங்கிய இராஜஸ்தான் மார்வாடிகள் சங்கத்தினர் | அச்சிறுபாக்கம் | Rajasthan Marvadies giving Corona Relief Products to ST People in Acharapakkam


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் மலை நகர் பகுதியில் உள்ள இருளர்களுக்கு இராஜஸ்தான் மார்வாடிகள் சங்கம் சார்பாக மளிகை பொருட்கள் கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டது.  
இதில் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ். சரவணன், தன்னார்வலர் லயன் கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளாராக கலந்துகொண்டார்.


கொரோனா தடுப்பு பணி செய்பவர்களுக்கு மதிய உணவு செய்வதை ஆய்வு செய்த மதுராந்தகம் கோட்டாட்சியர் | Madurantakam RDO Inspecting in Karunguzhi Town Panchayat


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களுக்கு மதிய உணவு தயாரகி வருவதை மதுராந்தகம் கோட்டச்சியர் லட்சுமி பிரியா பார்வையிட்டார்.


இந்த பணிகளின்போது முறையாக கையுறை மற்றும் முகக்கவசத்தின் பணியாளர்கள் அணிந்திருந்தனர். இந்த ஆய்வின்போது கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் உடனிருந்தார்.



கருங்குழி பேரூராட்சியில் ரூ.100/-க்கு 4.5 கிலோ காய்கறிகள் மதுராந்தகம் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு | Low Price Vegitable bags Karunguzhi


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், கருங்குழி பேரூராட்சியில் தோட்டகலை துறை மூலம் விவாசாயிகளிடமிருந்து பெறப்பட்ட காய்கள் மதுராந்தகம் நகராட்சி மற்றும்  கருங்குழி பேரூராட்சி பகுதியில் மலிவு விலையில் விற்பனை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
இதற்காக காய்களை 100 ரூபாய்க்கு 4.5 கிலோ என தனித்தனி பைகளில் வழங்குவதற்காக காய்கள் பையில் போடும் பணிகளில் விவசாயிகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டபோது மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமிபிரியா நேரில் பார்வையிட்டார். 
இந்த பணிகளின்போது முறையாக கையுறை மற்றும் முகக்கவசத்தின் பணியாளர்கள் அணிந்திருந்தனர். இந்த ஆய்வின்போது கருங்குழி பேரூராட்சி செயல் அலுவலர் ம.கேசவன் உடனிருந்தார்.

Sunday, April 05, 2020

சோத்துப்பாக்கத்தில் Go COVID 19 என கோலமிட்டு விளக்கேற்றிய மக்கள்

சோத்துப்பாக்கத்தில் Go COVID 19 என கோலமிட்டு விளக்கேற்றிய மக்கள்

அச்சிறுபாக்கத்தில் இந்திய வரைபட கோலமிட்டு ஏற்றப்பட்ட தீபம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் அச்சிறுபாக்கத்தில் இந்திய வரைபட கோலமிட்டு  ஏற்றப்பட்ட தீபம்.








அச்சிறுபாக்கம் பஜாரில்

Saturday, April 04, 2020

61 நபர்களை இன்று ஒரேநாளில் பிடித்து வழக்குப்பதிவு | அச்சிறுபாக்கம் ஒரத்தி | Acharapakkam Police warning message to people | Vil Ambu

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம்  காவல்நிலைய ஆய்வாளர் தெரிவிக்கும் அன்பான எச்சரிக்கை...





உலகமே கொள்ளை நோயை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டறி முடியாமல் திணறிவரும் சூழலில், நமது அரசு நோய் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கையாக பொதுமக்கள் அவரவரது வீடுகளிலும், இருப்பிடங்களிலும் தனித்து இருக்க வேண்டியதன் அவசியம் கருதி பிறப்பித்துள்ள, ஊரடங்கு உத்தரவு மற்றும்  குற்றவியல் நடைமுறை சட்டம்  பிரிவு 144 கீழ் தடை உத்தரவு ஆகியன அமலில் உள்ள இந்த அசாதாரண சூழ்நிலையில், ஒருசில பொதுமக்கள்
 சட்டத்தை மீறுகின்ற வகையிலும், சமூக பொறுப்பு இல்லாமல், கொள்ளை நோய்தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தில், அத்தியாவசிய தேவைகள் எதுவுமில்லாமல் ஊர்சுற்றும் தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.





அச்சிறுப்பாக்கம் காவல்நிலையம் மற்றும் ஒரத்தி காவல்நிலைய பகுதியில்,இருசக்கர வாகனத்தில் அத்தியாவசிய தேவையின்றி ஊர்சுற்றிக் கொண்டிருந்த 61 நபர்களை இன்று ஒரேநாளில்  பிடித்து அனைவரதுமீதும், தொற்று நோய் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


அனைவரது இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இனிமேல் தவறு செய்யாமல் இருக்க, வாகன ஓட்டிகள் அனைவரும் கடுமையான எச்சரிக்கையுடன் ஜாமீன் பெற்று, அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் நோய் தொற்று வேகமாக பரவிவரும் சூழலில் சட்டத்தை மதித்தும் சமூகநலன் மீது அக்கறை கொண்டும் வெளியே வரும் எண்ணமுடைய பொதுமக்கள் இனியேனும் விழிப்புணர்வு பெற்று,  வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


தனித்து இருங்கள்!
வீட்டில் இருங்கள்.!

D.S. சரவணன்
ஆய்வாளர்
அச்சிறுப்பாக்கம்,
காவல்நிலையம்.

Friday, April 03, 2020

செங்கல்பட்டு ஆட்சியர் நடத்திய கொரோனா தடுப்பு நடவடிக்கைஆய்வுக் கூட்டம் | Chengalpattu Collector Inspecting Corona Situation in Madurantakam | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஆய்வுக்கூட்டமானது மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 03.04.2020 அன்று
காலை 11 மணியளவில் நடைபெற்றது.


இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பிரியா, வட்டாட்சியர் வேல்முருகன், மதுராந்தகம் துணை காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன்  மற்றும் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மதுராந்தகத்தில் 4 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சூழலில் அவர்கள் வசித்த தெருக்கள் இரும்பு வேலி கொண்டு அடைக்கப்பட்டு அங்கு வெளியாட்கள் யாரும் வரவேண்டாம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுவிட்டது.
மேலும் மாவட்ட ஆட்சித்தலைவரால் மதுராந்தகத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியானது பாதுகாக்கப்பட்ட மண்டலமாக (Containment Zone)-ஆக அறிவித்து அந்த பகுதியிலிருந்து யாரும் உள்ளேயோ அல்லது அங்குள்ளவர்கள் வெளியேயோ செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட மண்டலம் என்பது குறிப்பிட்டுள்ள பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் வரை உள்ள சுற்றுவட்டாரம் ஆகும்.
5 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினந்தோறும் மருத்துவர்களால் கண்காணிக்கப்படுவார்கள் எனவும், மேற்கண்ட பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் அதிக கவனம் செலுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். 
 
மேலும் சம்மந்தப்பட்ட இடத்தில் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்தனர்.