வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 14, 2020

நில ஆக்கிரமிப்பை மீட்டெடுத்த மதுராந்தகம் எம்.எல்.ஏ புகழேந்தி | Land Issue in Janakipuram at Madurantakam Taluk | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஜானகிபுரம் ஊராட்சியில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே 98 செண்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த இருவர் இது எங்கள் முன்னோர்களின் சொத்துதான் எனக்கூறி பல இலட்சத்திற்கு பேரம் பேசி பணம் பெற்று நிலத்தை விற்பனை முயற்சி செய்துள்ளனர். 

இதனை அறிந்த அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இந்த சட்டத்திற்கு புறம்பான செயலை தட்டிக் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் எதையும் கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் ஆக்கிரமிப்பு பணிகளில் கவனம் செலுத்தியதால் இளைஞர்கள் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளனர்.


பின்னர், “இந்த இடம் அரசுக்கு சொந்தமான நிலம், இதனை யாரும் உரிமை கோர முடியாது” என்ற பதாகைகளை வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இருமுறை வைத்தும் அந்த பதாகைகளை ஆக்கிரமிப்பாளர்கள் பிடிங்கி எறிந்துள்ளனர்.

எனவே, அப்பகுதி இளைஞர்கள் இந்த விவகாரம் குறித்து கடந்த 02.10.2020 அன்று மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து கிராம இளைஞர்களிடம் தெளிவாக கேட்டறிந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ, கிராம இளைஞர்களை 06.10.2020 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்துச் சென்று மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸிடம் புகார் மனுவை அளித்தார். பின்னர், மதுராந்தகம் எம்.எல்.ஏ. சு.புகழேந்தி முயற்சியில் செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவின்பேரில் அந்த இடம் மீட்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த இடம் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்காமல் இருப்பதுற்கு சமுதாய நலக்கூடம் கட்டித்தரக் கோரி 13.10.2020 அன்று மாலை மதுராந்தகம் எம்.எல்.ஏ-வின் வீட்டிற்கே சென்று ஜானகிபுரம் கிராம இளைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவை ஏற்றுக் கொண்ட எம்.எல்.ஏ இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைப்பதாக உறுதியளித்தார்.

இந்த செயல்களுக்காக மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர். நெல்லிக்குப்பம் சு.புகழேந்திக்கு ஜானகிபுரம் கிராம இளைஞர்கள் தங்களின் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.


Sunday, October 04, 2020

₹ 31 ஆயிரம் ஊதியம்... SBI வங்கியில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நீங்க ரெடியா? | SBI Requirement 2020 | Vil Ambu News

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 92 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் தகுதியானவர் எனில் விண்ணப்பிக்கலாம்.




எஸ்.பி. வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விபரங்களை கீழே பார்க்கலாம்...

பணி: Special Cadre Officer

காலியிடங்கள் : 92

தகுதி : ஒவ்வொரு பணி வாய்ப்புக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

CA, CFA,MBA, PGDM, புள்ளியியல் துறையில் எம்.எஸ்.சி, கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், பேங்கிங், நிதியியல், ஐடிஐ, பொருளாதாரம் போன்ற பிரிவிகளில் முனைவர் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பளம்: ரூ.31,705 - 51,490தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி -மெயில் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.750 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை : www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.10.2020


Thursday, October 01, 2020

நர்சிங், பாராமெடிக்கல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் | Bsc Nursing and Paramedical Tamil Nadu 2020 | Vil Ambu News

GOVERNMENT OF TAMIL NADUPROSPECTUS FOR ADMISSION TO PARAMEDICAL DEGREE COURSES 2020-2021SESSION

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில்  2020-21-ம் கல்வி ஆண்டில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (01.10.2020) முதல் துவங்கியது.

அதன்படி, ஆன்லைன் விண்ணப்பம் முடிவு தேதிகள் மற்றும் எந்தெந்த துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட சில முக்கிய விவரங்கள் குறித்து கீழே உள்ள அட்டவணையில் தெரிவிக்கப்படுகிறது.