Run World Media: குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - ரிஷபம்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 3, 2018

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - ரிஷபம்நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம், சித்தி நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜுவனம் நிறைந்த சித்த யோகத்தில், செவ்வாய் ஓரை முடியும் தருணத்தில், ஏழாம் சாமத்தில், பஞ்சபட்சியில் ஆந்தை நடைபயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்யகால வர்ஷ ருதுவில், இரவு 10 மணிக்குச் சூரிய உதயம் 39.55 நாழிகைக்கு, ரிஷப லக்னத்திலும் நவாம்சத்தில் சிம்ம லக்னத்திலும் வேத உபநிஷதங்களுக்குரிய மெய்ஞ்ஞான கிரகமான பிரகஸ்பதி எனும் குருபகவான் சர வீடான துலாம் ராசியிலிருந்து ஸ்திர வீடான விருச்சிகம் ராசிக்குள் சென்று அமர்கிறார்.
13.03.2019 முதல் 09.04.2019 வரை அதிசாரமாகவும், 10.04.2019 முதல் 18.05.2019 வரை வக்ர கதியிலும் தன் சொந்த வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.


செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் குரு வந்து அமர்வதால் ரசாயனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் பாதிப்படையும். ரசாயனத் தொழிற்சாலைகள் சீரமைக்கப்படும். உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும், மாசுக்கட்டுப்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும். மருத்துவர்களுக்கு வருமானம் அதிகமாகும்.

சூறாவளிக் காற்றுடன் கனமழை பொழியும். புதிய புயல் சின்னங்கள் உருவாகும். புயலால், இடிகளால் பேரழிவு உண்டு.காலப்புருஷ ராசிக்கு 8-ம் ராசியில் குரு அமர்வதால் ரியல் எஸ்டேட் சுமாராக இருக்கும். மழை, வெள்ளத்தால் விளைநிலங்கள், பயிர்கள், அடித்துச் செல்லப்படும். நாட்டின் கடன் அதிகரிக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை நவீனமாகும். செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும். இனி, பனிரெண்டு ராசிக்காரர்களை என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.
ரிஷபம்
 


கரடுமுரடாக வாழ்க்கை அமைந்தாலும் சளைக் காமல் பயணிப்பவர்களே! ஏறக்குறைய கடந்த ஓராண்டு காலமாக சகடை வீட்டில் அமர்ந்து ஆறாக்கி, வேறாக்கி உங்களைக் கூறு போட்டு பார்த்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை ஆளப்போகிறார்.
எதிலும் ஆர்வமில்லாமல் எதையோ இழந்ததைப் போல் சோர்ந்து, வதங்கியிருந்தீர்களே! இனி உற்சாகம் பிறக்கும்.


பெற்ற பிள்ளையிடம் கூடப் பேசுவதற்குப் பயந்து நடுங்கினீர்களே! உறவினர், நண்பர்களெல்லாம் வெற்றிலை, பாக்குக்குப் பதிலாக உங்கள் வீட்டு விஷயங்களைத் தானே மென்றார்கள். பலரால் பகடைக்காயாக உருட்டப்பட்டீர்களே! எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததைப் போல ஒரு வெறுமையை உணர்ந்தீர்களே! இனி இந்த அவல நிலையெல்லாம் மாறும். வீட்டுக்கு ஏன் திரும்புகிறோம் என்ற மனநிலை மாறும்.
 ஈகோவாலும், உப்புக்குப் பிரயோஜனம் இல்லாத பிரச்சினையாலும் கணவன் மனைவி பிரிந்து இருந்தீர்களே! இனி சச்சரவு முடிந்து ஒன்று சேர்வீர்கள். மனம் விட்டுப் பேசுவீர்கள். தாம்பத்யம் இனிக் கும். முடங்கிக் கிடந்த வாகனம் ஓடும். இரண்டு, மூன்று முறை முயன்றும் முடியாமல் போன விஷயங்களெல்லாம் இனி, சாதகமாக உடனே முடியும். எதிரி யைப் போல் பார்த்த பிள்ளைகள் இனி, பாசமாக இருப்பார்கள்.
குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் மருந்து, மாத்திரை எடுத்துக் கொள்வது இனி, குறையும். எளிய உடற்பயிற்சி, இயற்கை உணவு மூலமாகவே ஆரோக்கியம் மேம்படும். மற்றவர்களைக் குறை கூறும் போக்கை மாற்றிக் கொள்வீர்கள். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். குருபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால்  ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள்.


ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டு. வேற்று மதத்தவர்களால் நன்மை உண்டு. உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைக் குரு பார்ப்பதால் எங்கே சென்றாலும் மதிக்கப்படுவீர்கள். தன்னிச்சையாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். வசதிகூடும்.
04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச் சுமையால் சோர்வடைவீர்கள். திடீர்ப் பயணங்கள் உண்டு. எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். மூத்த சகோதரர் வகையில் சச்சரவு வரும். 21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். சொந்தமாக வீடு கட்டுவீர்கள்.  வேலை கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும்.


20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள்-. குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளால் சொந்தபந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். 13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 8-ம் வீட்டில் மூலம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், பணப் பற்றாக்குறை, இனந்தெரியாத கவலைகள் வந்து செல்லும்.


10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் மனக்குழப்பம், பூர்வீக சொத்துப் பிரச்சினை, வீண் பதற்றம் வந்து செல்லும். வியாபாரத்தில் கடன் பிரச்சினையாலும், பணப்பற்றாக்குறையாலும் புது முதலீடுகள் செய்ய முடியாமல் தவித்தீர்களே! இனி, பண உதவி கிடைத்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். இந்த குருப்பெயர்ச்சி பதுங்கியிருந்த உங்களைப் பளிச்சென முன்னேற வைப்பதுடன் காசு, பணம், சொத்து சுகத்தையும் தரும்.

பரிகாரம்:  சிவன் கோயிலுக்குப் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். கடலைப் பருப்பு தானமாகக் கொடுங்கள்.


No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்