வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - மேஷம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 03, 2018

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: 04.10.2018 முதல் 28.10.2019 வரை - மேஷம்நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18-ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம், சித்தி நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜுவனம் நிறைந்த சித்த யோகத்தில், செவ்வாய் ஓரை முடியும் தருணத்தில், ஏழாம் சாமத்தில், பஞ்சபட்சியில் ஆந்தை நடைபயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்யகால வர்ஷ ருதுவில், இரவு 10 மணிக்குச் சூரிய உதயம் 39.55 நாழிகைக்கு, ரிஷப லக்னத்திலும் நவாம்சத்தில் சிம்ம லக்னத்திலும் வேத உபநிஷதங்களுக்குரிய மெய்ஞ்ஞான கிரகமான பிரகஸ்பதி எனும் குருபகவான் சர வீடான துலாம் ராசியிலிருந்து ஸ்திர வீடான விருச்சிகம் ராசிக்குள் சென்று அமர்கிறார்.
13.03.2019 முதல் 09.04.2019 வரை அதிசாரமாகவும், 10.04.2019 முதல் 18.05.2019 வரை வக்ர கதியிலும் தன் சொந்த வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.


செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் குரு வந்து அமர்வதால் ரசாயனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் பாதிப்படையும். ரசாயனத் தொழிற்சாலைகள் சீரமைக்கப்படும். உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும், மாசுக்கட்டுப்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும். மருத்துவர்களுக்கு வருமானம் அதிகமாகும்.
 
சூறாவளிக் காற்றுடன் கனமழை பொழியும். புதிய புயல் சின்னங்கள் உருவாகும். புயலால், இடிகளால் பேரழிவு உண்டு.காலப்புருஷ ராசிக்கு 8-ம் ராசியில் குரு அமர்வதால் ரியல் எஸ்டேட் சுமாராக இருக்கும். மழை, வெள்ளத்தால் விளைநிலங்கள், பயிர்கள், அடித்துச் செல்லப்படும். நாட்டின் கடன் அதிகரிக்கும். தகவல் தொழில்நுட்பத் துறை நவீனமாகும். செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும். இனி, பனிரெண்டு ராசிக்காரர்களை என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.


மேஷம்சுயமரியாதையின் சொந்தக்காரர்களே, படிப்பறிவைக் காட்டிலும் பட்டறிவு அதிகமுள்ளவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சியையும், ஓரளவு பணவரவையும் தந்த குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை 8-ம் வீட்டில் மறைவதால் எதையும் திட்டமிட்டுச் செய்யுங்கள். பழைய நண்பர்கள், உறவினர்களுடன் சிறிய மோதல்கள் வந்து நீங்கும்.
எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரத்தில் சில இடங்களில் வாக்குத் தவற வேண்டி வரும். தங்க நகைகள் களவு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டும். யாருக்காகவும் உத்திரவாதக் கையெழுத்திடாதீர்கள். சிறியவர்களை அனுசரித்துப் போக வேண்டும். உங்களின் இலக்கை போராடி பிடிக்க வேண்டி வரும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும்.
வீண் சந்தேகத்தால் அவ்வப்போது விவாதங்கள் வரும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மனம்விட்டுப் பேச வேண்டும். அத்தியாவசியச் செலவுகள் இருந்துகொண்டேயிருக்கும். குருபகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் சாணக்கியத்தனமாகப் பேசி பல நெருக்கடிகளையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள்.


குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் அசதி, சோர்வு, டென்ஷன் விலகும். தாயாரின் உடல் நிலை சீராகும். அவருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். குரு உங்கள் 12-ம் வீட்டையும் பார்ப்பதால் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். ஊர் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
04.10.2018 முதல் 20.10.2018 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பி.களின் நட்பு கிடைக்கும்.


21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலைச்சுமை, பணப்பற்றாக்குறை, இனம்தெரியாத கவலைகள், குடும்பத்தில் சலசலப்பு, உத்தியோகத்தில் எதிர்ப்புகள் வந்து செல்லும்.
20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் வீண் செலவுகள், சிறுசிறு விபத்துகள், வதந்திகள், பழைய கடன் குறித்த அச்சம், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து செல்லும்.
13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 9-ம் வீட்டில் மூலம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அரசாங்க விஷயம் உடனே முடியும்.


10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்கிர கதியில் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் குருபகவான் செல்வதால் குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மனைவிவழியில் இருந்த மோதல்கள் விலகும்.
குரு 8-ல் மறைவதால் வியாபாரத்தில் அவசர முதலீடுகள் வேண்டாம். அவர்களின் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டி அன்பாக நடத்துங்கள்.


பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். உங்கள் நலனில் மட்டுமே அக்கறை கொள்ள வேண்டிய காலம் இது. இந்த குரு மாற்றம் கூடுதல் உழைப்பு, குறைந்த வருமானம் என ஒரு பக்கம் அலைக்கழித்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய பாதையில் சென்று முன்னேற வைக்கும்.
பரிகாரம்: அம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். துவரம் பருப்பைத் தானமாகக் கொடுங்கள்.

No comments:

Post a Comment