Run World Media: இன்டெர்வியூல பாடி-லாங்வேஜ் மூலம் எப்படியெல்லாம் ஸ்கோர் பண்ணலாம்?

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 10, 2018

இன்டெர்வியூல பாடி-லாங்வேஜ் மூலம் எப்படியெல்லாம் ஸ்கோர் பண்ணலாம்?இன்டெர்வியூ பீதியில், சிலருக்கு பெயரை செல்லி அழைத்த உடன் நன்கு தெரிந்த விஷயங்கள் கூட, சில நேரங்களில் முற்றிலும் மறந்து போக வாய்ப்புள்ளது. இன்டெர்வியூவை பொறுத்தமட்டில் பல்வேறு விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பதை விட, அவற்றை அவர் எப்படி தக்க நேரத்தில் வெளிப்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றிக்கான வாய்ப்புகள் அடங்கியுள்ளது.
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் : காஞ்சி. கலெக்டர் தகவல் - Last Date - 01/11/2018 # தகாத உறவுக்கு தடையாக இருந்த தந்தை… ரவுடிகளை வைத்து போட்டு தள்ளிய மகள் # நாம் அனைவருக்கும் புற்றுநோய் உள்ளதா..? இதை கவனமாக படியுங்கள்..!

இன்டெர்வியூல பாடி-லாங்வேஜ் மூலம் எப்படியெல்லாம் ஸ்கோர் பண்ணலாம்? 

நமக்கு தெரிந்த விஷயங்களை வெளிப்படுத்துவதில், கண்கள், வார்த்தைகளை தவிற பாடிலாங்வேஜ் எனப்படும், உடல் மொழி முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இன்டெர்வியூவில் பாடி-லாங்வேஜ் மூலம் எப்படி ஸ்கோர் பண்ணலாம்? என்பது குறித்த சில விஷயங்களை இங்கு பார்க்கலாம்.(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!


புன்னகை
 இன்டர்வியூ அறையில் நுழைந்த உடன் சிறு புன்னகையுடன் முதல் வணக்கத்தை தெரிவியுங்கள். உங்கள் புன்னகை இயல்பாக இருக்க வேண்டும். மேல்நோக்கி குவிந்திருக்கும் இதழ்கள் நீங்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பதை காட்டும். கீழ் நோக்கிய இதழ்கள் பல விஷயங்களை நம்மும் புதைத்து வைத்திருப்பதை காட்டுவதாக அமையும். நேராக குவிந்திருக்கும் இதழ்கள் இரண்டும் கலந்த எண்ணம் கொண்டவர்களாக நம்மை பிரதிபலிக்கும்.


நடை 

நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு வந்த உடன் நடையில் கவனம் தேவை. நடை என்றால் சும்மா சுறுசுறுப்பாக எழுந்து ஓடும் கன்றுக்குட்டி போல் இருக்க வேண்டும். நேராக நிமிர்ந்த நடையுடன் உள்ளே சென்றால் உங்களுக்கு இன்டெர்வியூ மீது எந்த பயமும், பதட்டமும் இல்லை. உறுதியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதுவே மெதுவாக நகர்கிறீர்கள் என்றால் சிறு பதட்டத்துடன் இருப்பதாக அர்த்தம். "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம் நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்". நடை பழக்கம் என்பது மேற்கூறிய ஔவையின் பாடலின் படி நடந்து பழகினால் மட்டும் போதும். எளிதாக கற்று விடக்கூடியதுதான்.


கை குலுக்கல்
 தேர்வுக் குழுவினர் கை குலுக்கினால், அழுத்தமான மற்றும் உறுதியான கை குலுக்கலாக உங்களுடையதை வைத்துக் கொள்ள வேண்டும். கண்ணும், கையும் பேசும்படி கை குலுக்கினால் நேர்மையான, நம்பிக்கைகுரிய கைகுலுக்கலாக அமைகிறதாம். இதுவே கண் பார்வையை தவிர்த்து கைகுலுக்கும் போது இவர் சுயநலக்காரர், என்பது போன்ற எதிர்மறையான கருத்துக்களை பதிவு செய்வதாக அமையும்.
அமர்தல்

அறைக்குள் நுழைந்த உடன் அமரச் சொல்லும் வரை காத்திருங்கள். அவர்கள் அமரச் சொன்னதும், நன்றி கூறி அமரலாம். முக்கியமாக ஃப்ரீயாக அமர்வது அவசியம். எனினும், நீங்கள் அமரும் விதம், நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு செய்பவர்களை நோக்கி, நன்றாக நிமிர்ந்து உட்காருங்கள். கால்களை குறுக்காகப் போட்டுக் கொண்டோ, பைலை முகத்திற்கு எதிராக வைத்துக் கொண்டோ, ஒரு புறமாக சாய்ந்தே, நுனி சீட்டில் அமருவதை தவிர்க்கலாம்.


திரும்புதல்
 இன்டெர்வியூ அறையை விட்டு திரும்புகையில் மிடுக்கான நடையுடன், திரும்ப வேண்டும், எப்படி என்றால் "ஜெயித்தாலும், தோத்தாலும் மீசைய முறுக்கு" என்பது போல், தளர்வான நடை ஏதோ கப்பல் கவுந்ததைப் போல் திரும்புவது உங்களுக்கு இந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்பதை காட்டுவதாக அமையும். மேற்கூறியவைகளை பின்பற்றினலே பாதி பாஸ் மார்க் வந்துவிடும் மீதி மார்க் நம்மகிட்ட என்ன திறமை இருக்கு என்பதை பொறுத்து அமையும்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்