Run World Media: ராத்திரி 8 மணிக்குள்ள உடைச்சிருங்க.. இல்லாட்டி போலீஸ் பிடிச்சிரும்..

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 5, 2018

ராத்திரி 8 மணிக்குள்ள உடைச்சிருங்க.. இல்லாட்டி போலீஸ் பிடிச்சிரும்..


அண்ணனுக்கு ஒரு பிரச்சனைன்னு வந்துட்டா எப்படியெல்லாம் விசுவாசிகள் ஆதரவு தர்றாங்க பாருங்க.
  நபர் 1: அண்ணே... எப்படியாவது ராத்திரி 8 மணிக்குள்ள உடைச்சிடுங்க... இல்லாட்டி போலீஸ் பிடிச்சிரும் 
நபர் 2: சட்டசபைக்கு இதை எடுத்துக்கிட்டு போனா மண்டையை உடைச்சிடலாம்  (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
 
நபர் 3: எப்படியாவது மிக்சியில அடிச்சாவது கலந்து குடிச்சிடுங்கண்ணே... நபர் 
4: அண்ணே... உங்களுக்கு இந்த நிலைமையா?
 நபர் 5: அண்ணனுக்கு ஒரு சுத்தியல் பார்சல் இதெல்லாம் என்ன தெரியுமா?
இவர்கள் எல்லாம் எதை பற்றி பேசுகிறார்கள் தெரியுமா? ஒரு பாதுஷாவை பற்றிதான். ஆமாம். திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சமாச்சாரத்தை ஷேர் செய்திருக்கிறார்.



ஏடாகூடம் ஆன பாதுஷா
 தீபாவளிக்கு அவங்க வீட்டில அவர் மனைவி பாதுஷா செய்திருக்காங்க. சுட்ட பாதுஷாவில் ஒன்றை கொண்டு வந்து இவர்கிட்ட தந்து சாப்பிட சொல்லிவிட்டு போய் இருக்காங்க. ஆசை ஆசையாக தந்த ஒரு பாதுஷாவை சாப்பிட எடுத்தார் டிஆர்பி ராஜா. ஆனால் மனைவி செய்த பாதுஷா கொஞ்சம் ஏடாகூடம் ஆயிடுச்சு போல.


ட்விட்டர் பதிவு 
 மனுஷன் அதை உடைக்கிறதுக்குள்ள படாத பாடு பட்டுட்டார். தான் பட்ட பாட்டை ட்விட்டரிலும் பதவிட்டுள்ளார் வீடியோ வடிவில். பாதுஷாவை சாப்பிடதான் முடியல... நீங்களாவது பாருங்கன்னு நினைச்சு அந்த பாதுஷாவை வீடியோ எடுத்து அனுப்பியிருக்கிறார். கூடவே ஒரு பதிவு இப்படி இருக்கிறது. அது " இந்த தீபாவளி வந்தாலே ரெண்டு டார்ச்சர். 1. வெட்டி ஷாப்பிங் / வெடி. 2. பலகாரம் செய்றேன்னு சொல்லிட்டு பொண்டாட்டி பண்ற டார்ச்சர்!!


உடைக்க முடியல 
 பாதுஷா செய்றேன்னு சொன்னாங்க. நேத்து வந்து பாத்தா மினி Mysore sandal soap மாதிரி ஒரு கின்னத்ல குடுத்தாங்க. இன்னைக்கு காலைல வரைக்கும் அத ஒடைக்க #முடியல" என்று சோகத்துடனும் பாதுஷாவை சாப்பிட முடியாத ஆதங்கத்துடனும் பதிவிட்டிருந்தார்.


ருசியாக உள்ளன
 இந்த பதிவிற்குதான் மேற்கூறியவர்களின் கமெண்ட்கள் உட்பட பல வந்து கொண்டே இருக்கின்றன. கடைசிவரை பாதுஷாவை சாப்பிட முடியாவிட்டாலும் கமெண்ட்டுகளை படிக்கும்போது பாதுஷாவைவிட ருசியாகவே இருக்கின்றன!!



கரூர் ஜோதிமணி கோரிக்கை
 இதெல்லாம் ரொம்ப டூமச். நல்லதா நீங்களே பண்ண வேண்டியதுதானே. யார் தடுத்தாங்க. பாதுஷாவே இப்பிடினா மைசூா்பாக்குலாம் சட்டசபைக்கு எடுத்துனு போனா எடப்பாடி மன்டைய ஒடச்சிடலாமே ப்ரோ

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்