வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருவிடைமருதூர் அருகே, கழுத்தை அறுத்து ஆசிரியை படுகொலை: ‘காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்ததால் கொன்றேன்’ கைதான உறவுக்கார வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 03, 2018

திருவிடைமருதூர் அருகே, கழுத்தை அறுத்து ஆசிரியை படுகொலை: ‘காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்ததால் கொன்றேன்’ கைதான உறவுக்கார வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்



திருவிடைமருதூர் அருகே கழுத்தை அறுத்து ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் கைது செய்தனர். காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்ததால் ஆசிரியையை கொன்றதாக அந்த வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 


 தஞ்சை மாவட்டம் பாபநாசம் 108 சிவாலயம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மகள் வசந்தபிரியா(வயது 25). இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
(தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!


நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் வசந்தபிரியா, வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றார். மாலையில் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. உமாமகேஸ்வரபுரம் காவிரி ஆற்றின் படித்துறையில் அவர், கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். ஆசிரியை வசந்தபிரியாவுக்கும், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது.


இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கொலை நடந்த இடத்தில் 2 செல்போன்கள், ஒரு கத்தி ஆகியவை இருந்தது. அவைகளை போலீசார் கைப்பற்றினர். பின்னர் கொலை செய்யப்பட்ட வசந்தபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதில் கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஆசிரியை வசந்தபிரியா ஒரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து வசந்தபிரியாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்றது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.


போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆசிரியை வசந்தபிரியாவை அவரது அத்தை மகனான கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த நந்தகுமார்(25), மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதும், அவர்தான் வசந்தபிரியாவை கொலை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து திருப்பனந்தாள் அருகே வைத்து நந்தகுமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.


போலீசாரிடம் நந்தகுமார் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான்(நந்தகுமார்) வசந்தபிரியாவை விட 6 மாதம் இளையவன். நானும், வசந்தபிரியாவும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராக காதலித்து வந்தோம். ஆனால் எங்களது காதலை எங்கள் குடும்பத்தினரிடம் இருவரும் தெரிவிக்கவில்லை. எனக்கு நல்ல வேலை எதுவும் இல்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வசந்தபிரியாவுக்கு அவரது பெற்றோர் வலங்கைமானை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நான், வசந்தபிரியாவை சந்தித்து என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டேன். அதற்கு அவர் மறுத்து விட்டார். ஆனாலும் வசந்தபிரியாவை என்னால் மறக்கமுடியவில்லை.

எனவே மீண்டும் வசந்தபிரியாவை சந்தித்து திருமணத்திற்கு வலியுறுத்துவது என்று முடிவு செய்தேன். இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை எனது நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு வசந்தபிரியா வேலை செய்யும் பள்ளிக்கு சென்றேன். பள்ளி விடும் வரை பள்ளிக்கு அருகில் காத்திருந்தேன். பள்ளி முடிந்து வெளியே வந்த வசந்தபிரியாவை சந்தித்து நான் உன்னிடம் பேசவேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர் முதலில் மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் நான் விடவில்லை. நான் கடைசியாக உன்னை சந்தித்து பேசவேண்டும். என்னுடன் வா என்று கூறினேன். இதனையடுத்து வசந்தபிரியா எனது மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டார்.


பள்ளியில் இருந்து கும்பகோணம் புறவழிச்சாலையில் உள்ள உமாமகேஸ்வரபுரம் காவிரி ஆற்றங்கரையில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வசந்தபிரியாவை அழைத்து சென்றேன். அங்கு வைத்து என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் வசந்தபிரியாவிடம் வலியுறுத்தினேன். அப்போதும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் வசந்தபிரியா என்னை விட்டு, விட்டு அவருக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு விடுவாரோ என நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.


அதே நேரத்தில் வசந்தபிரியா இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. வசந்தபிரியா திருமணத்துக்கு மறுத்தது ஒரு பக்கம் எனக்கு மிகுந்த வேதனை அளித்தது என்றால் மறுபக்கம் அவர் வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்தது எனக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனக்கு கிடைக்காத இவள் யாருக்குமே கிடைக்கக்கூடாது என்று முடிவு செய்த நான் நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசந்தபிரியாவின் கழுத்தை அறுத்தேன். ரத்தம் சொட்டச் சொட்ட சிறிது தூரம் ஓடிய வசந்தபிரியா சில வினாடிகளில் ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

அவர் இறந்து விட்டதை அறிந்ததும் நான் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி திட்டக்குடிக்கு தப்பி சென்றேன். திட்டக்குடியில் எனது உறவினர்கள் வசந்தபிரியாவை யாரோ கொலை செய்து விட்டனர் என கூறினர். அவர்கள் வசந்தபிரியாவின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கும்பகோணத்துக்கு புறப்பட்டனர். நானும் ஒன்றும் தெரியாததுபோல் அவர் களுடன் கும்பகோணத்துக்கு புறப்பட்டேன்.

இந்த நிலையில் போலீசார், பள்ளி அருகே பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் நானும், வசந்த பிரியாவும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்ற காட்சிகள் பதிவாகி இருந்ததை பார்த்து நான்தான் கொலையாளி என்று முடிவு செய்தனர். இதுகுறித்து திட்டக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்து என்னை கண்காணிக்க தொடங்கினர். இதற்கிடையே இந்த காட்சிகள் முகநூலில் வெளியானதால் நான்தான், வசந்தபிரியாவை கொலை செய்தேன் என்பதை எனது உறவினர்களும் அறிந்து கொண்டனர்.

இதனால் போலீசாரிடம் சிக்கிக்கொள்வோம் என்பதை உணர்ந்த நான், எனது உறவினர்களுடன் காரில் கும்பகோணத்துக்கு வரும் வழியில் நடந்த சம்பவத்தை அவர்களிடம் கூறினேன். இதற்கிடையில் எங்களது கார், திருப்பனந்தாள் வந்த போது அங்கு தயாராக இருந்த போலீசார் என்னை பிடித்து விட்டனர். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார், நந்தகுமாரை கைது செய்தனர்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment