வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வெளியானது நிலவின் இன்னொரு ரகசியம் -மூன்மூன், அப்படியென்றால்?
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, November 14, 2018

வெளியானது நிலவின் இன்னொரு ரகசியம் -மூன்மூன், அப்படியென்றால்?



ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, குறும்புத்தனமான குழந்தைகளால் அல்லது ஆகச்சிறந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் மட்டுமே யோசிக்க கூடிய ஒரு கேள்வியை, வானியலாளரின் மகன் ஒருவன் கேட்கிறான் : பூமிக்கு ஒரு நிலவு இருப்பது போலவே, நிலவிற்கும் ஒரு நிலவு இருக்கும் அல்லவா?


இந்த கேள்விக்கு, கார்னெகி நிறுவனத்தின் ஆய்வாளர்களில் ஒருவரான ஜுனா கோல்மய்ரால் பதில் அளிக்க முடியவில்லை. ஏனெனில் இப்படி ஒரு கேள்வியை இதுவரை யாரும் கேட்டதும் இல்லை, இப்படியொரு கோட்பாட்டை யாரும் யோசித்ததும் இல்லை.


தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கிறார்!
தன் மகனின் இந்த "நுட்பமான" கேள்விக்கு அவரிடம் உடனடி பதில் இல்லை என்றாலும் கூட, அம்மாதிரியான சூழல் உள்ளதா என்பதை பற்றி ஆராய வேண்டும் என்று அவர் முடிவு எடுக்கிறார். இந்த கேள்விக்கான விடையை தேடுவதில் மூலம் சூரிய குடும்பத்தின் சில மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிப்படுத்தவும் முடியும் என்று அவர் உணர்ந்தார்.

ஆராய்ச்சிகளுக்கு பின்னர் ஆய்வறிக்கை வெளியானது! 
பின்னர், குறிப்பிட்ட நோக்கத்தின் கீழ் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை, பெர்டாயக்ஸ் பல்கலைக் கழகத்தின் வானியலாளர் சீன் ரேமண்ட் உடன் இணைந்து ஏஆர்ஸிவ்.ஆர்க் (arXiv.org) எனும் தளத்தில் "கேன் மூன் ஹேவ் மூன்ஸ்?" (அதாவது நிலவிற்கு நிலவுகள் உண்டா?) என்கிற பெயரின் கீழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இடம் இருக்கிறதா?  
இதுவொரு மிகப்பெரிய கேள்வி என்பதால், முதலில் வெளியான ஆய்வறிக்கையானது மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. இப்போது அந்த ஆய்வறிக்கை விஞ்ஞானத் தலையீட்டைக் கொண்டிருக்கிறது. அப்படி என்ன முடிவு தான் வெளியாகி உள்ளது? நிஜமாகவே நிலவிற்கு நிலவு இருந்தால் அதை எப்படி அழைக்கலாம்? நமது பூமியை சுற்றும் நிலவை சுற்றி ஒரு சிறிய சப் மூன் (துணை நிலவு) சுற்றி வருகிறதா? என்கிற கேள்வியை வைத்து ஆராய்ச்சி செய்த ஜுனா கோல்மய்ர் மற்றும் ரேமண்ட் ஆய்வு காகிதத்தின் படி, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரு சந்திரனை மற்றொரு சந்திரன் சுற்றி வர போதுமான இடம் மற்றும் இன்னும் சில விதிமுறைகள் தேவைப்படுமாம்.



என்னென்ன விதிமுறைகள்? 
 கூறப்படும் சிறிய நிலவுகள் ஆனது கடல் அலை ஈர்ப்பு காரணமாக பிரதான கிரகத்தினால் (பூமி) இழுக்கப்பட்டு, துண்டுகளாக பிரிக்கப்படுகின்றனவாம். ஈர்க்கப்பட்டு பிரிக்கப்படமால் இருக்க வேண்டும் என்றால், அதாவது ஒரு துணை நிலா உயிர் பிழைக்க வேண்டும் என்றால் அதற்கு குறைந்த பட்சம் ஆறு மைல்களுக்கான விட்டமாவது இருக்க வேண்டுமாம். மேலும் அதன் சுற்றுப்பாதையில் நிலைக்கும் அளவிற்கு போதுமான ஈர்ப்பு சக்தியும் இருக்க வேண்டுமாம், அப்போது தான் பிரதான கிரகத்தின் மீது (பூமி) அது மோதாமல் இருக்குமாம்.

பூமியின் நிலவிற்கு துணை நிலவுகள் இருக்க வாய்ப்பு உண்டா?  
நமது சொந்த சூரிய மண்டலத்தில் உள்ள சில நிலவுகளுக்கு துணை நிலவுகள் உள்ளன. அவைகள் மேற்கூறப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறது. எடுத்துக்காட்டுக்கு சனி கிரகத்தின் டைட்டன் மற்றும் ஐபெட்டஸ் நிலவுகளையும், வியாழன் கிரகத்தின் காபிஸ்டோ நிலவையும் கூறலாம். நமது சொந்த நிலவிற்கும் கூட பூமியிலிருந்து சரியான அளவு மற்றும் தூரம் இருப்பதால், அதற்கே உரிய துணை நிலவுகள் இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால் கொண்டிருக்கவில்லை.


நிலவின் நிலவிற்கு என்ன பெயர்? 
இதற்கு எந்த விதமான உத்தியோகபூர்வ வார்த்தையும் இல்லை என்றாலும் கூட, வானியலாளர்களின் படி, சந்திரனின் துணை நிலவுகளை மூன்மூன்ஸ் (moonmoons), மூனிடோஸ் (moonitos), மூன்நெட்ஸ் (moonettes), மற்றும் மூன்ஸ் (moooons) என்ற பெயர்களை கொண்ட அழைக்கலாம். இவைகள் எப்படி அழைக்க பெற்றாலும், "பிள்ளை பெறும் முன் பெயர் வைக்காதே" என்பது தான் இங்கு அடிகோட்டிட்டு பார்க்கப்பட வேண்டிய பழமொழியாகும்.

பொய்யான கிராஸ்-ஹேர்ஸ் :
 வெளியான நிலவில் இறங்கிய பெரும்பாலான புகைப்படங்களில் கிராஸ்-ஹேர்ஸ்கள் (Cross-hairs) 'எடிட்' (Edit) செய்யப் பட்டுள்ளன, குறிப்பிட்ட புகைப்படத்தில் கிராஸ்-ஹேர்ஸ் ஆனது விண்கலத்திற்கு பின்னால் 'எடிட்' செய்யப்பட்டுள்ளது அதற்கு சான்றாகும்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment