வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நல்ல போதை.. ராத்திரியில் லுங்கியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த அரசு டாக்டர்.. ஷாக் ஆன நர்ஸ்கள்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 08, 2018

நல்ல போதை.. ராத்திரியில் லுங்கியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த அரசு டாக்டர்.. ஷாக் ஆன நர்ஸ்கள்!


செம போதையில் தள்ளாடியபடியே ட்யூட்டிக்கு வந்த அரசு டாக்டர் பத்தின செய்திதான் இது!! திருவையாறு அரசு ஆஸ்பத்திரியில் கடந்த திங்கட்கிழமை ராத்திரி டாக்டர் மகபூப் பாட்சா என்பவர் நைட் டியூட்டிக்கு வந்தார். வரும்போதே போதை.. நடக்க முடியாமல் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார். இப்படி இவர் ஆடிக் கொண்டே நடந்து வருவதை பார்த்த நோயாளிகளும், நர்ஸ்களும் ஷாக் ஆகி விட்டனர்.

புகார் அளிக்கப்பட்டது 
இதன்பிறகு தலைமை மருத்துவர் மோகன்ராஜ்-க்கு நர்சுகள் தகவல் அளித்தனர். உடனடியாக விரைந்து அவர் விரைந்து கதவை கட்டினார். அப்போதும் டாக்டர் பாட்சா அசையவே இல்லை. பிறகு காலை 9 மணிக்கு வந்து டாக்டர் கதவை திறந்தார். இதையடுத்து மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. (தொடர்ச்சி கீழே...)

இதையும் படிக்கலாமே !!!
விஷம் குடித்து தற்கொலை
 எல்லோரும் தன்னை பார்க்கிறார்கள் என்று தெரிந்தும் பாட்சா ஏதேதோ பேசிக் கொண்டே நடந்து போனார். என்ன உளறினார் என்று யாருக்கும் புரியவும் இல்லை. நடந்து போய் கொண்டே இருந்தவர், திடீரென ஒரு ரூமுக்குள் சென்று அங்கு போட்டிருந்த கட்டிலில் ஏறி படுத்து கொண்டார். அந்த நேரம் பார்த்து ஒரு எமர்ஜென்சி கேஸ் வந்துவிட்டது. அதாவது விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட செய்துகொண்ட நபரை குத்துயிரும் கொலையிருமாக தூக்கி கொண்டு ஓடிவந்தார்கள்.


வேறு மருத்துவமனை
 இதனிடையே ஊழியர்கள் செல்போனில் டாக்டரை தொடர்பு கொண்டார்கள். அந்த போனை எடுத்த டாக்டர், "நர்ஸ்-ங்க யாரையாவது டாக்டராக போலி கையெழுத்து போட்டு விட சொல்ல வேண்டியதுதானே, இதுக்கு போய் என்னை எழுப்பறீங்களே?" என்று சொல்லி விட்டு போனை படார் என கட் பண்ணிவிட்டார். திரும்ப போன் போட்டாலும் டாக்டர் எடுக்கவே இல்லை. கடைசியில் உயிருக்கு போராடிய அந்த விஷம் சாப்பிட்ட நோயாளி வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு விட்டார்.


இடமாற்றம்
 இதனிடையே டாக்டர் போதையில்தான் ஆஸ்பத்திரிக்கு வந்தார் என உறுதியாக தெரிந்துவிட்டது. அதனால் அவரை திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மக்பூப் பாஷா மீதான புகார்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் மூத்த மருத்துவர் மோகன்ராஜ் தெரிவித்தார்.


பேசாமல் படுத்து கொண்டார்
 மக்களின் உயிரோடு விளையாடும் இதுபோன்ற டாக்டர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டும் போதாது.. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனி இதுபோன்றவர்களை நம்பி நோயாளிகளை எப்படி அழைத்து வருவது என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். நல்லவேளை, போதையில் வந்த டாக்டர் பேசாமல் போய் படுத்து கொண்டார். அதே போதையில் எழுந்து போய் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருந்தால் எத்தனை உயிர் போயிருக்குமோ தெரியாது!!


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment