வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நடிகையின் கார் மீது பைக் மோதி விபத்து
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 13, 2018

நடிகையின் கார் மீது பைக் மோதி விபத்து



பைக் ஓட்டி வந்த வாலிபர் ஒருவர் பாலிவுட் நடிகை ஜரீன் கானின் காரில் மோதி பலியாகியுள்ளார். பாலிவுட் நடிகை ஜரீன் கான் கோவாவுக்கு சென்றுள்ளார்.

நேற்று மாலை அஞ்சுனா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். ஒரு இடத்தில் அவரின் கார் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த பைக் அதன் மீது மோதியது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
காரில் மோதிய வேகத்தில் அந்த பைக் டிவைடர் மீதும் மோதியது. இந்த விபத்தில் பைக்கை ஓட்டி வந்த வாலிபர் உயிர் இழந்தார். அவர் ஹெல்மெட் அணியவில்லை. இந்த விபத்தில் ஜரீன் கானுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 
 
தனக்கு காயம் ஏற்பட்டதை விட தன் கண் முன்பு ஒரு உயிர் போனதை பார்த்து அவர் பேரதிர்ச்சியில் உள்ளார். முன்னதாக ஜரீன் தனது முன்னாள் மேனேஜர் மீது போலீசில் புகார் அளித்த போது பேசப்பட்டார்.
தனது முன்னாள் மேனேஜர் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதுடன், மிரட்டியதாக அவர் மும்பை போலீசில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment