வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: நெருங்குகிறது பேய்ட்டி புயல்.. சென்னையில் பலத்த காற்று.. நாளை முதல் கன மழை.. ஆனால் ஆபத்தில்லை!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, December 15, 2018

நெருங்குகிறது பேய்ட்டி புயல்.. சென்னையில் பலத்த காற்று.. நாளை முதல் கன மழை.. ஆனால் ஆபத்தில்லை!



வங்கக் கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக சென்னையிலும், வட மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசி வருகிறது. பேய்ட்டி புயல் எதிரொலியாக காசிமேடு பகுதியில் மீன்வளத் துறை சார்பில் புயல் எச்சரிக்கை மையம் திறக்கப்பட்டுள்ளது. 


வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
மேலும் இந்த புயலானது நாளை மறுநாள் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து இது வடமேற்கு திசையை நோக்கி 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 
 
தபோதைய நிலைபவரப்படி சென்னையில் இருந்து 800 கிமீ கிழக்கு தென்கிழக்கு திசையிலும், ஆந்திர மாநிலம் மத்தினிப்படினத்தில் இருந்து தென் கிழக்கு திசையில் 990 கிமீ தொலைவிலும் இந்த புயலானது மையம் கொண்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் இந்த புயலானது தீவிர புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தப் புயலானது ஆந்திராவில்தான் கரையைக் கடக்கவுள்ளது. இருப்பினும் சென்னைக்கு 200 கிலோமீட்டர் தொலைவில் இது நெருங்கி வரும். எனவே நமக்கு நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. புயல் எதிரொலியாக காசிமேடு பகுதியில் மீன்வளத்துறை சார்பில் புயல் எச்சரிக்கை மையம் திறக்கப் பட்டுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

No comments:

Post a Comment