Run World Media: 10/22/18

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 22, 2018

முதல்வரின் மனைவி இப்படிப்பட்டவரா? அச்சச்சோ!மகாராஷ்டிர மாநில முதலமைச்சரின் மனைவி, பாதுகாப்பு எல்லையை மீறி கப்பலின் முனையில் அமர்ந்து செல்பி எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்தை மும்பை கடல் பகுதியில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்..(தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

இந்த தொடக்க விழாவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் உடன் அவரது மனைவி அம்ருதாவும் சென்றிருந்தார். அப்போது அம்ருதா பட்னாவிஸ் பாதுகாப்பு எல்லையை தாண்டி கப்பலின் விளிம்பு பகுதியில் அமர்ந்து கொண்டு செல்பி எடுத்துள்ளார். பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தும் அதனை ஏற்காமல் அவர், தொடர்ந்து அங்கேயே அமர்ந்து செல்பி எடுத்துள்ளார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் விவாதமாகி வருகின்றன.
 

 

அனைத்து செய்திகளையும் படிக்க (முகப்பு)-HOME PAGE

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

[வேலை வாய்ப்பு]பாரதியார் பல்கலை.,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு-விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 08கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் பாரதியார் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொது உறவுகள் அதிகாரி, இயக்குநர், டீன் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
                         

பாரதியார் பல்கலை.,யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு!
நிர்வாகம் : பாரதியார் பல்கலைக் கழகம்
மொத்த காலிப் பணியிடம் : 5 
பணி விபரம் :- 
பொது உறவுகள் அதிகாரி :1
இயக்குநர் : 1
டீன் : 1
தேர்வு கட்டுப்பாட்டாளர் : 1
பதிவாளர் : 1


கல்வித் தகுதி : பி.எச்டி, எம்.காம், எம்.இ, எம்.டெக், எம்.எஸ்சி

வயது வரம்பு:- பொது உறவுகள் அதிகாரி : 40 வயதிற்கு உட்பட்டு
 இயக்குநர் : 50 முதல் 55 வயதிற்கு உட்பட்டு 
டீன் : 52 முதல் 57 வயதிற்கு உட்பட்டு
தேர்வு கட்டுப்பாட்டாளர் : 55 வயதிற்கு உட்பட்டு
பதிவாளர் : 50 முதல் 55 வயதிற்கு உட்பட்டு
முன்அனுபவம் : குறைந்தபட்சம் 08 முதல் 15 ஆண்டுகள் பெற்றிருக்க             வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:-
 http://www.b-u.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணியிடத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அதனை பதிவிறக்கம் செய்து அஞ்சல் வழியாகக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.(தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Registrar, Bharathiar University, Coimbatore - 641046


விண்ணப்பக் கட்டணம்:- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.600
பிற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் - ரூ.300


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 08 இப்பணியிடம் 
குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.b-u.ac.in/Home/UniRecruitments என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


 

அனைத்து செய்திகளையும் படிக்க (முகப்பு)-HOME PAGE

 அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

மிரட்டி மிரட்டியே.. படு பாதக கள்ளக்காதலன்.. 16 வயதிலேயே பாழான பிஞ்சு16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
         

கள்ளக்காதலியின் 16 வயது மகளை கர்ப்பமாக்கி அவளது வாழ்க்கையையே நாசமாக்கி விட்டிருக்கிறார் அந்த கொடூர காம மனிதன்!! நாளுக்கு நாள் கள்ளக்காதல் அவலங்கள் பெருகி வருகின்றன. அதன் முடிவுகளோ பயங்கரமான விளைவுகளை தந்து கொண்டிருக்கின்றன. விவரம் தெரிந்து பெரியவர்கள் செய்யும் கள்ளக்காதலால் பிஞ்சுகளும், உலகம் அறியா குழந்தைகளும்தான் சிக்கி சீரழிகிறார்கள்.


கள்ளக்காதல் 
தண்டையார்பேட்டையில் கணவரை பிரிந்த ஒரு பெண் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவரை பிரிந்த பெண்ணுக்கு, அதே பகுதியை சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக உருவாகி நின்றது. இப்படித்தான் 2 வருடங்கள் இந்த கள்ள உளவு போய் கொண்டிருந்தது.(தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

மிரட்டி பலாத்காரம் 
 ஒருநாள் மகளுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. அதனால் மகளை கூட்டிக் கொண்டு மருத்துவமனை சென்றார் தாய். ஆனால் அங்கே போனபிறகுதான் விஷயம் தெரிந்தது, மகள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று. இதை கேட்டு ஷாக் ஆன அம்மா, என்ன விவரம், யார் காரணம் என்றெல்லாம் விசாரித்தார். அதற்கு மகள், ஆட்டோ ஓட்டுனர் தண்ணி அடித்துவிட்டு தன்னை பலாத்காரம் செய்ததாகவும், அதை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிவித்தார்.


பாட்டி வீட்டில் சிறுமி 
 மேலும் இப்படி மிரட்டி மிரட்டியே பலமுறை நாசம் செய்ததாக கூறி அழுதாள் அந்த சிறுமி. இதைக் கேட்ட தாய், மேலும் ஷாக் ஆனார். அதன்பிறகு அந்த ஆட்டோ டிரைவரை உண்டு இல்லை என்று ஒருவழி பண்ணிவிடுவார் என்று பார்த்தால், சிறுமியை அழைத்து கொண்டு போய் தனது அம்மா வீட்டில் விட்டுவிட்டார்.


கணவர் எங்கே?  
அதாவது மகள் கர்ப்பம் என்றால் இவருக்கு மானம் போய்விடுமாம். பாட்டி வீட்டுக்கு சிறுமிக்கோ சிறிது நாளில் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக ராயபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், சிறுமியிடம், "கணவர் எங்கே?" என்று கேட்க... அதற்கு சிறுமி திருதிருவென விழிக்க... பிறகுதான் நிலைமையை உணர்ந்து டாக்டர்கள் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்.

2 குழந்தைகள்  
பின்னர் போலீசார் விசாரணையில்தான் மேற்கண்ட விவரங்கள் எல்லாம் தெரியவந்தது. சிறுமியை ஆஸ்பத்திரியில் சேர்த்ததுமே ஆட்டோ ஓட்டுனர் எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனாலும் போலீசார் வலைவீசி தேடி நேற்றுமுன்தினம் அவரை போக்சோவில் கைது செய்தனர். கைதான ஆட்டோ டிரைவர் இரு குழந்தைகளின் தகப்பனாம்!!

அனைத்து செய்திகளையும் படிக்க (முகப்பு)-HOME PAGE

 அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

கணவரை பழி தீர்க்க மனைவியை பலாத்காரம் செய்த இருவர்.. அதன் பிறகு அவர்கள் செய்த கொடூரம்!மேற்கு வங்கம் மாநிலத்தில் ஒருவர் மீதான பகையை தீர்ப்பதற்காக அவரது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து அவரது மர்ம உறுப்பில் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம் நடந்துள்ளது. ஜல்பய்குரி மாவட்டத்தில் பழங்குடி கிராமத்தில் கணவன் மீதான தனிப்பட்ட பகையை தீர்ப்பதற்காக அவரது மனைவியை பழி வாங்க ரத்ன முண்டா மற்றும் பரிமல் ராய் ஆகியோர் திட்டமிட்டனர். இதனிடையே சம்பவ தினமான சனிக்கிழமை இருவரையும் மது அருந்துவதற்காக வீட்டுக்கு வருமாறு அந்த பெண்ணின் கணவன் அழைத்துள்ளார்.


கணவன் வரவில்லை
இந்நிலையில் இருவரும் வீட்டுக்கு வந்துவிட்டனர். ஆனால் அந்த பெண்ணின் கணவர் வீட்டுக்கு வரவில்லை. கணவன் இரவு 10 மணி வரை வீடு வராததால் அதிர்ச்சி அடைந்த பெண் இருவரையும் அங்கேயே இருக்கும்படி கூறிவிட்டு கணவரை தேடி சென்றார்.

பாலியல் பலாத்காரம் 
 இதுதான் சந்தர்ப்பம் என நினைத்த இருவரும் அந்த பெண்ணை பின் தொடர்ந்தனர். அப்போது ஒரு குளத்தின் அருகே அந்த பெண்ணை மடக்கி அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர்.இரும்புக் கம்பியை சொருகிய நபர்கள் 
 அதன்பிறகும் வெறி அடங்காததால் அந்த பெண்ணின் மர்ம உறுப்பில் இரும்பு கம்பியை குத்தி வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ரிக்ஷா இழுக்கும் நபர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.(தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

நிர்பயா சம்பவம்  
பாதிக்கப்பட்ட பெண் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் துறையின் விசாரணைக்கு பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் 2012-ஆம் ஆண்டு நிர்பயா சம்பவத்தை நினைவுப்படுத்துகிறது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயாவை கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு அவரது மர்ம உறுப்பை இரும்பு கம்பியாலும் பாட்டிலாலும் தாக்கப்பட்ட கொடூரம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


ஆதார் தொல்ல இனி இல்ல, இதோ பாதுகாப்பான masked aadhar..! அப்ப ஹேக்கர்ஸ்... மோடிஜி என்ன பண்ணப் போறீங்க?சமீபத்தில் ஒரு வெளிநாட்டு ஹேக்கர் டிராய் நிறுவனத்தின் தலைவர் ஆர்.எஸ் சர்மாவின் வங்கிக் கணக்கிலேயே ஒரு ரூபாய் வரவு வைத்தது நினைவில் இருக்கும். அப்படி ஓப்பன் சேலஞ்ச் விட்டு, மூக்கு உடைந்து தன் பதவி காலத்தை நீட்டித்துக் கொண்டவருக்கு அவரின் அடையாளங்கள் பாதுகாக்கப் பட வேண்டிய கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் சாதாரண மக்களுக்கு. குறிப்பாக ஆதார் பயன்படுத்துபவர்களுக்கு... பிரச்னை இருக்கத் தானே செய்கிறது. சமீபத்தில் தான் உச்ச நீதி மன்றம் ஆதார் அட்டை எதற்கு எல்லாம் அவசியம் இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.                    
                        
Masked Aadhar
உச்ச நீதி மன்ற இறுதித் தீர்ப்பின் போது தான் ஆதார் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாஸ்க்டு ஆதார் கொண்டு வரப்படும் என்று UIDAI நிறுவனம் உறுதி அளித்தது. UIDAI நிறுவனம் சொன்ன படியே தன்னுடைய புதிய வசதியாக மாஸ்க்டு ஆதாரை வெளியிட்டு இருக்கிறது.

How to download masked aadhar
 ஸ்டெப் 1: https://uidai.gov.in/ லிங்குக்குச் செல்லுங்கள்
 ஸ்டெப் 2: Download Aadhar க்ளிக்குங்கள்
 ஸ்டெப் 3: ஆதார் இருப்பவர்கள் Aadhar க்ளிக்குங்கள், இல்லாதவர்கள் VID அல்லது Enrolment ID க்ளிக்குங்கள். அதோடு Masked Aadhar-ஐ தேர்வு செய்யுங்கள். ஸ்டெப் 4: உங்கள் Aadhar அல்லது VID அல்லது Enrolment ID-யை டைப் செய்யவும். Enrolment ID கொடுப்பவர்கள், எப்போது பதிவிட்டீர்கள் என்கிற தேதி மற்றும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும்.
ஸ்டெப் 5: ஆதாரில் கொடுத்த பெயரை டைப் செய்யவும்.
ஸ்டெப் 6: ஆதாரில் கொடுத்த முகவரி பின் கோடை டைப் செய்யுங்கள். ஸ்டெப் 7: Captcha-வை டைப் செய்யுங்கள்.
ஸ்டெப் 8: Request OTP கொடுங்கள்.
 ஸ்டெப் 9: உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்திருக்கும் OTP-ஐ கொடுத்து உங்கள் மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்


மாஸ்க்டு ஆதார் பயன்கள் 
இந்த மாஸ்க்டு ஆதாரில், ஆதாரின் 12 எண்களில் கடைசி நான்கு எண்கள் மட்டுமே தெரியும். அதோடு மூன்று QR code-கள் தரப்பட்டிருக்கும். இனி ஆதார் எண்ணை யாருக்கும் தெரியப்படுத்தாமலேயே, தேவையான தகவல் சரி பார்ப்புகளை மேற்கொள்ளலாம், என்பது தான் UIDAI நிறுவனத்தின் வாதம். இது தான் அவர்கள் சொல்லும் பாதுகாப்பு அம்சம். (தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

QR code 1
QR code with photo என்று குறிப்பிட்டிருக்கும் QR code-ஐ UIDAI நிறுவனம் வெளியிட்டிருக்கும் QR code ரீடர் மூலமாக ஸ்கேன் செய்தால் நம் புகைப்படத்துடன், பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கடைசி நான்கு இலக்க ஆதார் எண் மட்டுமே வருகின்றன. வரும் புகைப்படம் நம்முடையது தானா என்று மட்டும் உறுதிப்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு உருவமே தெரியாத ரீதியில் வருகிறது.

QR code 2 
 நம் புகைப்படத்துக்கு வலது பக்கம் கொடுத்திருக்கும் QR code-களை UIDAI நிறுவனம் வெளியிட்டிருக்கும் QR code ரீடர் மூலமாக ஸ்கேன் செய்தால் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கடைசி நான்கு இலக்க ஆதார் எண் மட்டுமே வருகின்றன.


VID
UIDAI நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புதிய மாஸ்க்டு ஆதாரில் கூட மறைக்கப்பட்ட ஆதாருக்குக் கீழ் நம் VID கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை பயன்படுத்தி கூட நம் ஆதார் விவரங்களை எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் நமக்கு வர வேண்டிய ஓடிபி நம் மொபைலுக்கு வந்து அவைகளை சரியாக கொடுத்தால் மட்டுமே ஆதாரை முழுமையாக டவுன்லோட் செய்ய முடியும்.
                                   

உஷார் மக்களே
 இனி எங்கு சென்றாலும், இந்த இரண்டு ரக QR code-களை மட்டுமே காட்டி வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை செய்கிறது UIDAI நிறுவனம். மாஸ்க்டு ஆதாரில் கூட நம்முடைய செல் எண், பதிவீட்டு எண் (Enrolment id), மற்ற படி நம் வழக்கமான பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற விவரங்கள் கிடைத்துவிடும்.

அதுக்கு நாங்க பொறுப்பு இல்ல 
 திருட வேண்டும் என்பவர்கள் முதலில் உங்களுடைய மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்-களை ஹேக் செய்தால் ஒழிய ஆதார் விவரங்களை திருட முடியாது என்றும் UIDAI நிறுவனம் சொல்கிறது. அதாவது ஆதாரைப் பாதுகாப்பது மட்டும் தான் எங்க வேலை, மொத்த இணைய ஹேக்கர்களை சமாளிப்பது எல்லாம், உலக மக்கள் அனைவருடைய பிரச்னை என்று சொல்கிறது. அப்புறம் எதுக்குங்க கை ரேகை, ரெடினா எல்லாம் எடுத்தீங்க என்று நெட்டிசன்களும் ஒரு பக்கம் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இருந்தாலும் திருடலாம்  
ஒருவருக்கு நம் மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்-க்கு ஆக்ஸிஸ் கிடைத்துவிட்டால் அதை வைத்து நம் ஆதார் எண்ணைத் தெரிந்து கொள்ள முடியும். https://resident.uidai.gov.in/find-uid-eid என்கிற லிங்கில் சென்று நம் பெயர், மெயில் ஐடி, செல் எண் கொடுத்தால் நம் மெயில் மற்றும் மொபைலுக்கு ஓடிபி வரும் அதைக் கொடுத்தால் ஆதார் எண் மற்றும் பதிவீட்டுக் எண் இரண்டுமே கிடைத்துவிடும். இதை வைத்து https://eaadhaar.uidai.gov.in/#/ டவுன் லோட் ஆதார் என்கிற இணைப்பில் நம் ஆதார் எண், பெயர் பின் கோட் கொடுத்து மொபைலுக்கு வரும் ஓடிபி கொடுத்தால் நம் ஆதார் ஹேக்கர் கையில்.


மறக்க முடியுமா சாகேத் மோடி 
இப்படிப்பட்ட ஹேக்கர்கள் இந்தியாவில் தனியாக அப்ளிகேஷன் செய்து கள்ளா கட்டிக் கொண்டிருக்கும் போது, நம் மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் எல்லாம் அத்தனை பாதுகாப்பாக இருக்குமா...? இத்தனைக்கும், இவர் மத்திய ஐடி அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் இந்தியா டிவியில் நாங்கள் எப்படி ஒருவரின் டேட்டாக்களை ஹேக் செய்கிறோம், எந்த ஒரு தரவும் இன்று டிஜிட்டல் யுகத்தில் பத்திரமாக இல்லை குறிப்பாக ஆதார் போன்ற ஒர் நாட்டின் தரவுகள் என்று நிரூபித்தார். அதற்கு இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது.

என்ன செய்யப் போறோம் 
போர்கள், ஜவான்களால் வெற்றி பெறுவது இல்லை, ஜனரல்களால் என்று ஒரு பழமொழி உண்டு. அதன் படி ஆதார் அவந்த போது அதிகம் தம்பட்டம் அடித்துக் கொண்ட தார்மீகப் பொறுப்பாளி பிரதமர் மோடி தான் இந்த பிரச்னைக்கும் ஒரு தீர்வு சொல்ல வேண்டும். இனியும் ஆதாரை எப்படி வலுப்படுத்த இருக்கிறீர்கள். ஒட்டு மொத்த இந்திய மக்களின் பெயர் தொடங்கி கண் ரேகை வரை எல்லாமே ஆதாரில் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை சாகேத் மோடி மாதிரியான ஹேக்கர்களால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா...? இன்று டேட்டா தான் புதிய சக்தி என்று நாங்கள் சொன்னால் உங்கள் காதில் விழாது, உங்களுக்கு நெருக்கமான அம்பானியே "Data is the new oil" என்று சொல்லி இருக்கிறார். அதையும் ஜியோ மூலம் செயல்படுத்தியும் வருகிறார். இப்போது என்ன செய்ய இருக்கிறீர்கள் மோடி...? 130 கோடி இந்தியர்களின் தரவுகள், தனி மனித அடையாளங்கள் உங்கள் ஒருவரின் வழிகாட்டுதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறது... என்ன செய்யப் போகிறீர்கள்?

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsFeatured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்