Run World Media: நெருங்கிய தோழியின் தந்தையை திருமணம் செய்துக் கொண்ட இளம்பெண்!

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 20, 2018

நெருங்கிய தோழியின் தந்தையை திருமணம் செய்துக் கொண்ட இளம்பெண்!இன்னும் சிங்கிளாக இருக்கும் 90ஸ் கிட்ஸ் தயவு செய்து இந்த கட்டுரையை வாசிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் பிஞ்சு இதயம், இதைப் படித்து வெம்பி போனால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது. சரி! மத்தவங்க வாங்க... படிக்கலாம்.... ரியல் எஸ்டேட் ஏஜண்டாக வேலை செய்து வரும் டைலர் லெஹ்மேன் (27) எனும் பெண்மணி, தனது நெருங்கிய தோழியான அமண்டா (30) என்பவரின் தந்தை கெரன் (54) என்பவரை டேட் செய்து காதலித்து திருமணமும் செய்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் கெரனுடன் டேட் செய்த போது கில்டியாக ஃபீல் செய்தேன் என்றும் கூறி இருக்கிறார் டைலர் லெஹ்மேன்.

அரிசோனா!
 அமெரிக்காவின் அரிசோனா மாகணத்தில் அமைந்திருக்கும் ஃபீனிக்ஸ் எனும் நகரில் வசித்து வருகிறார்கள் இந்த தம்பதி. டைலர், கெரன் ஜோடிக்கு நடுவில் இருக்கும் பான்டிங் ஆனது நாளுக்கு நாள் வலிமை பெருகிக் கொண்டே தான் போகிறேது. இந்த வினோத ஜோடியை சுற்றுவட்டாரத்தினர் ஹாலிவுட் நட்ச்திரங்கலான கத்ரீனா ஜீடா ஜோன்ஸ் மற்றும் மைக்கல் டக்லஸ் உடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். Image Source and Courtesy: CATERS NEWS AGENCY
(தொடர்ச்சி கீழே...)    
 
இதையும் படிக்கலாமே !!!
எதிர்பார்க்கவில்லை...
 தானும், கெரனும் இப்படியான ஒரு உறவில் இணைந்து திருமண பந்தத்தில் சங்கமிப்போம் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று வியந்து கூறுகிறார்கள் டைலர் லெஹ்மேன். தங்களுக்கு மத்தியில் இசை, பயணம், கேளிக்கை என பல விஷயங்கள் ஒரே ரசனையில் இருந்தது. அதுதான் எங்களை மிக எளிதாக ஒருவரை ஒருவர் ஈர்ப்புடன் ஒன்றாக சேர்ந்து உலா வர ஊந்து சக்தியாக இருந்தது. இந்த ஒருசேர்ந்த விருப்பங்கள் குறித்து நாங்கள் கண்டறிந்த பிறகே அதிகம் ஒன்றாக சுற்ற ஆரம்பித்தோம் என டைலர் லெஹ்மேன் தெரிவித்திருக்கிறார்.தவறுதலாக...
 ஆரம்பத்தில் டைலர் லெஹ்மேன் - கெரன் தம்பதியை ஒன்றாக பார்த்த பலரும் இவர்கள் தந்தை - மகள் என்று தவறுதலாக நினைத்துள்ளனர். ஆரம்பத்தில் இவர்களது திருமணத்தை அதிர்ச்சியாகவும், ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் கண்ட குடும்பத்தார், இப்போது இவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.


முதல் சந்திப்பு...
 நாங்கள் முதல் முறை சந்தித்துக் கொண்ட போது, நான் கெரனின் மகள் அமண்டாவுடன் வேலை செய்து வந்தேன். அவள் எனது நெருங்கிய தோழி. அப்போது கெரன் திருமணமானவர். நானும் வேறொரு உறவில் இருந்து வந்தேன். முதல் முறை சந்தித்த போதே கெரனை ஒரு ஹேண்ட்சமான ஆளாக தான் கண்டேன். எனக்கு பொதுவாகவே வயது அதிகமான ஆண்கள் மீது ஈர்ப்பு உண்டாவதுண்டு. அதே சமயத்தில் கெரனும் என்னை கியூட்டான பெண்ணாக கருதினார். சில சமயம் கேலியாக ஃபிளர்ட் செய்த தருணங்களும் உண்டு.


நட்பு!
 எனக்கும் அமண்டாவுக்கும் இடையிலான நட்பு ஓராண்டு காலத்தை கடந்திருக்கும். அப்போது தான் நாங்கள் டேட் செய்ய துவங்கினோம். ஆரம்பத்தில் கெரனை டேட் செய்த போது எனக்கு கில்டியான ஃபீல் ஏற்பட்டது. நான் தவறென உணர்ந்தேன். ஆனால், எங்கள் இருவருக்கும் மத்தியிலான உறவென்பது அதை எல்லாம் தாண்டிய ஒன்றாக வளர்ந்தது.


அமண்டா!
 அமண்டாவிற்காக, அவள் வாழ்வில் என்ன பிரச்சனை நடந்தாலும் அவளுக்காக நான் அங்கே வந்து நிற்பேன் என்பதை அமண்டா அரிவாள். கெரன் மற்றும் எனக்கு மத்தியில் இருக்கும் உறவை முதலில் என் பெற்றோர் வருத்தத்துடன் கண்டித்தனர். அம்மா, நான் ஏதோ மோசமான முடிவை எடுத்திருப்பதாக கருதினார். முக்கியமாக நான் தோழியின் தந்தையுடன் டேட் செய்வது அவருக்கு வருத்தம் அளித்தது.


காயம்!
 காலங்கள் அவர்கள் மனதில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தளிக்கும் என்று நான் மனதார நம்பினேன். காலம் கடந்தது, என் அம்மா, சின்னம்மா (Step Mother) மற்றும் அப்பா எங்களை நேரில் வந்து சந்தித்தனர். இப்போது எல்லாம் நார்மலாகிவிட்டது.


ஸ்மார்ட்! 
 கெரன் ஹேண்ட்சம், அழகானவர் என்பதை தாண்டி, அவர் அறிவாளி, ஸ்மார்ட் மற்றும் வெற்றியாளர். ஒரு விஷயத்தை எப்படி செய்ய வேண்டும், எப்படி கையாள வேண்டும் என்று அறிந்த வல்லவர், என்று பெருமிதத்துடன் கூறுகிறார் டைலர் லெஹ்மேன். முதல் முறையாக கெரனுடன் வெளியே சென்ற போது நான் பாதுகாப்பின்மையாக தான் உணர்ந்தேன். எல்லாரும் என்னையே உத்து கவனித்துக் கொண்டிருப்பது போல கருதினேன். ஒருவேளை நாங்கள் குட்-லுக் ட்ரெஸ்ஸில் இருப்பதால் அனைவரும் எங்களையே பார்க்கிறார்கள் என்றும் கருதினேன்.


திருமணம்!
 கடந்த வருடம் தான் கெரன் - டைலர் ஜோடி நிச்சயம் செய்து, மெக்ஸிகோவில் திருமணம் முடித்தனர். எங்கள் உறவு திருமணத்தில் முடியும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒருவொரு உணர்வெழுச்சி என்றே கருதினேன். ஆனால், எங்கள் இருவருக்கு மத்தியில் இருந்து ஒருசேர்ந்த விருப்பங்கள், எங்களை ஒன்றிணைத்துள்ளது. நான் கெரனை மிகவும் விரும்புகிறேன். அவருக்கும் என் மீது மிகுதியான ஈர்ப்பு இருக்கிறது. கேளிக்கை, அவுட் கோயிங், பார்ட்டி என கெரன் ஒரு சார்மிங் பர்சன். நான் நிச்சயம் இதற்காக கெரனை பாராட்டுவேன். இப்போது ஜோடியாக, திருமணமானவர்களாக ஒன்றாக வெளியே செல்வதை நான் பாதுகாப்பாக உணர்கிறேன் என டைலர் கூருயுலாளர்.


குழப்பம்! 
சில சமயம் இந்த ஜோடி வெளியிடங்களுக்கு, வெளியூர்களுக்கு எங்கேனும் பிக்னிக் ட்ரிப் சென்றால், சிலர் இவர்களை தந்தை - மகளென நினைத்து ஏமார்ந்துவிடுகிறார்கள். சிலர் ஹோட்டல் ரூம் புக்கிங் செய்யும் போது, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸர்ஸ் என்று குறிப்பிடும் போது குழம்பி போயிருக்கிறார்கள் என சிரித்துக் கொண்டே தங்கள் அனுபவங்களை பகிர்கிறார்கள் இந்த வினோத ஜோடி. வரும் மே மாதம் இந்த ஜோடி தங்கள் இரண்டாவது திருமண நாளை கொண்டாட மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்