வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மருத்துவர் பாயல் தற்கொலை வழக்கு: மேலும் 2 மருத்துவர்கள் கைது
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, May 29, 2019

மருத்துவர் பாயல் தற்கொலை வழக்கு: மேலும் 2 மருத்துவர்கள் கைது

மகராஷ்டிர மாநிலம் மும்பையில், அம்மாநில அரசால் நடத்தப்பட்டு  வரும் மருத்துவமனையில் தங்கி, பாயல் சல்மான் தட்வி 26, என்ற பெண் மருத்துவர், பெண்கள் நல மருத்துவம் பயின்று வந்துள்ளார்.

 இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதியன்று பாயல் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பாயலின் தாயார் கூறும்போது, பாயலை அவரது சீனியர்கள் தொடர்ச்சியாக சாதியைக் கூறி அவமானப்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவர் பாயலை தொடர்ச்சியாக சாதிக்கொடுமைக்கு உட்படுத்தி அவர் தற்கொலை செய்ய 3 சீனியர் மருத்துவர்கள் காரணமாக இருந்ததாக கூறப்பட்டது.
 குற்றச்சாட்டையடுத்து, மருத்துவர்கள் 3 பேரும் தலைமறைவாகினர். இதனிடையே, மகாராஷ்டிரா மருத்துவர்கள் அசோசியேஷன், குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமா ஆகுஜா, பாக்டி மேகார் மற்றும் அங்கிதா காண்டில்வால் ஆகிய மூன்று மருத்துவர்களின் உறுப்பினர் உரிமையையும் ரத்து செய்தது. 
இதற்கு மத்தியில் பாக்டி மேகார் நேற்று, கைது செய்யப்பட்டார். அவரிடம் முதற்கட்ட விசாரணை நடைபெற்று வரும் சூழலில், தலைமறைவான மேலும் 2 மருத்துவர்களான ஹேமா ஆகுஜா, அங்கிதா காண்டில்வால் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 குற்றச்சாட்டப்பட்டுள்ள 3 பேருக்கு எதிராக, தலித்துகள் மற்றும் பழங்குடியினர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிணையில் வெளிவரமுடியாத வகையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

No comments:

Post a Comment