வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [எச்சரிக்கை] மதுராந்தகத்தில் அபாயம் - விவரம் உள்ளே...? Dangerous Situation in Madurantakam
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 04, 2019

[எச்சரிக்கை] மதுராந்தகத்தில் அபாயம் - விவரம் உள்ளே...? Dangerous Situation in Madurantakam

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியானது அதிக பரப்பளவு கொண்ட ஏரி. இந்த ஏரியானது கடந்த 4 நாட்களாக பெய்து வந்த மழையின் காரணமாக முழு கொள்ளவை எட்டியுள்ளது.




திருவண்ணாமலை மாவட்டத்தின் ஏரிகளிலிருந்து வரும் உபரி நீர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பிற சுற்றுவட்டார ஏரிகளிலிருந்து வரும் உபரி நீர்வரத்து காரணமாக மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 22.5 அடி நீரானது விரைவில் எட்டியுள்ளது. 


இதன் காரணமாக ஏரியின் தானியங்கி மதகு திறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் கிளியாறு ஒட்டியுள்ள 18 கிராமங்களுக்கு வெள்ளை அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ஜான் லூயிஸ் அவர்கள்.


மேலும் இந்த ஏரியின் உபரி நீர் திறக்கப்படாத பட்சத்தில் கருங்குழி, மோச்சேரி மற்றும் மதுராந்தகம் நகராட்சி போன்ற பகுதிகளும் விவசாயப்பகுதிகளும் நீரில் மூழ்கும் அபயாம் மட்டுமல்லாமல் சென்னை to திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் போக்குவரத்தானது முற்றிலும் பாதிக்கப்படும்.


எனவே, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு ஏரியின் உபரி நீர் திறக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.

No comments:

Post a Comment