எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார்.... அப்படி வந்தால் கண்டிப்பாக ஜெயிலுக்கு போவார் என தமிழக பாஜக மூத்த தலைவர் டாக்டர்.திரு. சுப்பிரமணிய சுவாமி பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பகிரங்கமாக கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலுக்கு வராமல் இருப்பதற்கு காரணம் பாஜகவின் அச்சுறுத்தல் தானா என்று இவரது சர்ச்சை பேச்சு கூறுகிறது. அல்லது நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தனி கட்சியின் மூலம் போட்டியிடாமல் பாஜகவில் இணைந்து பாஜகவிற்ககாக மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி கூறுகிறாரோ என்று புரியவில்லை.
மேலும் தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ள தேர்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றுவது மிகவும் கடினம் என்று ஒரு சில கேள்விகளுக்கு பகிரங்கமாக கூறியுள்ளார். இது பாஜகவில் உட்கட்சி பூசலா..? அல்லது சுப்பிரமணிய சுவாமி சொல்வதுதான் உண்மையா என்று பொது மக்கள் குழப்பத்தில் உள்ளனர். ஏன் ஆளுங்கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் கூட குழப்பத்தில் தான் உள்ளனர்.
பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் இரண்டு முறை இறந்ததாக அறிவிக்கப்பட்டு அதன்பின்னர் உயிர் பெற்று எழுந்துள்ள அதிசயம் நடந்துள்ளது. பிரித்தானியாவில் மருத்துவர்களால் 'மிராக்கல் மேன்' என அழைக்கப்படும் 48 வயதான ஜோவோ அரூஜோ, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பத்திரிக்கை ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
ஏப்ரல் 18, 2009ம் ஆண்டு திடீரென ஜோவோவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பார்ப்பதற்கே பயமுறுத்தும் அளவிற்கு அவருடைய கண்கள் அப்படியே உருண்டுள்ளன. நாக்கு எக்குத்தப்பாக புரண்டுள்ளது. உடனடியாக கிளவுசெஸ்டர்ஷயர் ராயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
6 மணிநேர தீவிர சிகிச்சைக்கு பின் மாலை 4 மணியளவில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்பேரில் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அந்த சமயம் ஒரு செவிலியர் மட்டும் ஜோவோவின் உடலை பிணவறைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
அப்பொழுது அவருடைய உடலில் லேசான அசைவு தென்பட்டுள்ளது. இதனை பார்த்த அந்த செவிலியர் மருத்துவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
நடந்தது என்னவென தெரியாமல் திகைத்த மருத்துவர்கள் மீண்டும் சிகிச்சை அளிக்க ஆரம்பித்துள்ளனர். இறந்ததாக அறிவிக்கப்பட்ட அந்த 21 நிமிடங்களில் தான் அவருக்கு மீண்டும் உயிர் வந்துள்ளது.
3 நாட்கள் கோமாவில் இருந்த ஜோவோ, விழித்ததும் விசித்திரமான கேள்விகளை மருத்துவர்களிடம் எழுப்பியுள்ளார். என்னடைய பெயர் என்ன? என்னுடைய குடும்பத்தினர் யார்? எதற்காக இங்கு வந்தேன்? என அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைத்துள்ளார். தொண்டையில் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என மருத்துவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
அதன் பிறகு சிறிது நாட்கள் கழித்து வீடு திரும்பியுள்ளார்.
இதேபோல 2005ம் ஆண்டு ஒரு பயங்கரமான கார் விபத்தில் சிக்கியுள்ளார். அதில் அவருக்கு 90 சதவிகித ரத்தம் வெளியேறிவிட்டது. அறுவை சிகிச்சை செய்தாலும் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆனால் அதன் பிறகும் உயிருடன் இருந்துள்ளார்.
உயிர் பிழைத்தாலும், கை, கால்களை அசைக்க முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளார்.
ஆனால் சில நாட்களிலேயே நடக்க ஆரம்பித்துவிட்டார்.
இவருடைய உடலை கண்டு மருத்துவர்கள் அனைவருமே பெரும் ஆச்சர்யத்திலே உறைந்து இருக்கின்றனர்.
மற்றொரு முறை 2015ல் தபால்காரராக பணிபுரிந்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் அவரை பார்த்து பதறியுள்ளனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவர் உயிர் பெற்று எழுந்து வேலைக்கு சென்றிருக்கிறார்.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திண்டுக்கல் தொகுதியில் தான் வெற்றி பெற்றால், துண்டிக்கப்பட்ட கண்மாய்கள் சீர் செய்யப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என்றும், நிலக்கோட்டை பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் மன்சூர் அலிகான் உறுதி அளித்து வருகிறார்.
கடந்த ஒருமாதகாலமாக திண்டுக்கல் மாவட்ட மக்களை சந்தித்துப் பேசி வரும் அவர், தனது வழக்கமான அனல் பறக்கும் பேச்சால் திண்டுக்கல்லை கலக்கி வருகிறார். நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி கரும்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மார்க்கெட்டுக்கு சென்று விவசாயிகளை சந்திப்பது, அவர்களுடன் சேர்ந்து விற்பனை செய்வது, பச்சை காய்கறிகளை உண்பது என வித்தியாசமான முறையில் தேர்தல் பிரசாரத்தில் மன்சூர் அலிகான் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் மாவட்ட ஆட்சியரிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
கோயில் மண்டபங்கள் என்ன கார்களும் பைக்களும் நிறுத்தும் பார்க்கிங் ஏரியாவா என்று உள்ளம் கொதித்துப் போய் குமுறுகின்றனர் பக்தர்கள்.
இந்து சமய அறநிலையத் துறையின் சீர்கேடுகளில் இதுவும் ஒன்று என்பது மட்டுமல்ல, இதிலும் கூட ஆலயங்களுக்கு அவமரியாதை செய்தும், காசு வசூலித்தும் கேவலப் படுத்துகின்றார்கள் என்று புகார் கூறுகின்றனர் பக்தர்கள்.
திருச்சி திருஆனைக்கா திருக்கோவில் பஞ்ச பூதத் தலங்களில் ஒன்று. நீர் தலம் என்று புகழ்பெற்ற இந்த ஆலயத்தின் கருவறையில் லிங்கப் பிரானைச் சுற்றிலும் நீர் சுரந்து கொண்டிருக்கும்.
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயம் பாடல் பெற்ற சிவத் தலம். விழாக்கள் முழுதும் களைகட்டும் தலம்,. பிரமாண்ட விபூதிப் பிராகாரம் உள்ளடங்கிய திருக்கோவில். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் இக்கோயில் பல சர்ச்சைகளைக் கண்டிருக்கிறது.
தற்போதைய சர்ச்சை, அறநிலையத் துறை அதிகாரிகள் தொடர்புடையது.
பழங்காலத்திலும் மன்னர்கள் பல்லக்குகளில் வந்தாலும், ஆலயத்தின் வெளியே இறங்கிவிட்டு, சந்நிதிக்கு நடையாய் நடந்துதான் வந்திருக்கிறார்கள். தங்கள் பாதம் ஆலயத்தின் தரையில் படுவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.
இன்னும் மேலே போய், ஆலயத்தைக் கட்டியவர்களும், மன்னர்களும் கூட தங்கள் உருவங்களை சிறிய அளவில் கோவில் படிகளில் பதிந்து, கீழே விழுந்து கைகூப்பி வணங்குவது போல் அமைத்திருப்பார்கள். ஆலயத்துக்கு வரும் அன்பர்களின் பாத தூளி தங்கள் மேல் படுவது போன்ற பிரமையை, மன எண்ணத்தை பெறுவது இதன் பின்புலம்.
பக்தர்களின் பாத தூளி படும் வகையில் மன்னனும் தன்னை எண்ணிக் கொண்ட நாட்டில்தான், இப்போது அறநிலையத்துறை அசிங்கம் பிடித்த பிச்சைக்காரர்களான அதிகாரிகள் கௌரவம் என்று கருதி காரில் வந்து கருவறை முன்னர் வரை வந்து இறங்குகின்றனர் என்று பக்தர்கள் பொருமித் தள்ளுகின்றனர்.
இந்து அறநிலையத் துறை அராஜகம் – மூவர் பாடல் பெற்ற திருத்தலத்தலமான திருஆனைக்காவில் (திருவானைக்கோவிலில்) 19-03-2019 அன்று உச்சிகால பூஜை… அம்பாள் சுவாமி சன்னதிக்கு வரும் முன்பு, மேற்கு கோபுரத்திலிருந்து கொடிமரத்துக்கு உள்ளே வேகமாக வந்து, இன்னோவா காரில் வந்து இறங்கிய அறநிலையத்துறை அதிகாரிகள், அங்கே காரை நிறுத்தி யிருக்கிறார்கள்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ள பக்தர்கள், இது ஆலயமா அல்லது கார் நிறுத்தும் இடமா என்று கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் சந்நிதிக்கு உள்ளே வர வேண்டியது தான் பாக்கி… யானை வரும் இடத்தில் இன்னோவா வராதா என்பதுதானே அவர்களின் கேள்வி! என்று குற்றம் சாட்டுகின்றனர்.
கோவிலில் உள்ள சாமிகள் வாகனங்களில் வீதி உலா வருவதைப் பார்த்து இருக்கிறோம்.
தற்போது நடைபெறும் திராவிட இயக்கங்களின் ஆட்சியில், ஆசாமிகள் இப்படி சொகுசு வாகனங்களில் கோவிலுக்குள் வந்து இறங்குவதை இப்போதுதான் பார்க்கிறோம்… வெள்ளைக்கார துரைமார்கள் தங்கள் அலுவலகத்துக்கு முன்பு வந்து இறங்குவதைப் போல்… இந்தச் சீமான்கள் ஆலயத்துக்குள் அலுவலகத்தை வைத்துக் கொண்டு, அதன் முன் வந்து இறங்குகிறார்கள் என்று மனம் பொருமித் தள்ளுகின்றனர்.
பொதுவாக, கோயில்கள் உயர்த்தப் பட்ட படிகளுடன், கோபுர வாசல்களுடன் அமைக்கப் பட்டிருக்கும். முற்காலங்களில் சகடை வண்டியில் பெருமான் திருவீதி உலாவுக்கு என கற்களை அவ்வப்போது அமைத்து படிகளில் ஏறிச் செல்ல வழி ஏற்படுத்தியிருப்பர். சில ஆலயங்களில் சாய்மான தளம் அமைக்கப் பட்டிருக்கும்.
ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் ஏதோ தங்கள் சொந்த வீடு என்று கருதி, படிகளை அகற்றி, அதில் சாய்மான தளம் அமைத்து, எங்கெல்லாம் தடைகள் இருக்குமோ அவற்றை எல்லாம் அகற்றி, கார் போக வழி ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
இன்னும் சில ஆலயங்களில், அதிகாரிகளின் கார் வருவதற்காக, ஆலயத்தின் மதில் சுவரை இடித்து வழி ஏற்படுத்திய செயலும் நடைபெற்றுள்ளது. அறநிலைத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் ஆத்திகவாதியாக இருக்க வேண்டும்! நாத்திகர்கள் பணிபுரிந்தால் இது போன்று சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்பு அதிகரிக்கும்! தமிழக அரசு இதை கவனித்து அறநிலை துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் பக்தர்கள் சார்பாக இதனை கண்டிக்கிறோம் என்கின்றார்கள் இப்பகுதியினர்.
மேலும், இது போன்ற அதிகாரிகள், சம்பளம் 50 ஆயிரத்துக்கும் ஒரு லட்சத்துக்கும் மேல் வாங்கனார்கள் என்றால், அவர்கள் என்ன மிதிவண்டியிலும் பைக்கிலுமா வருவார்கள் என்று கேள்வி எழுப்பும் சிலர், கோயில் உண்டியல் பணத்தில் கார் வாங்குவது, பெட்ரோல் அலவன்ஸு எடுப்பது, மேல் வருமானம் என்று இருந்தால், கருவறைக்கே காரில்தான் வருவார்கள் என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
இது போன்று, இன்னொரு பாடல் பெற்ற தலமான திருக்குற்றாலம், திருக்குற்றாலநாதர் கோயிலில், ஆலயத்தினுள் உள்ள முகப்பு மண்டபத்தில், இருசக்கர வாகனங்களை நிறுத்தி, பார்க்கிங் ஏரியாவாக மாற்றிய அறநிலையத்துறையைக் கண்டித்து, அப்பகுதி பக்தர்கள் குரல் எழுப்பினர்.
இப்படிப்பட்ட அராஜகங்களைச் செய்வதால்தான், அறநிலையாத் துறை என்றும், அராஜகத் துறை என்றும், ஆலயங்களை நிர்வகிக்கும் துறைக்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள் பொதுமக்கள். இன்னும் எத்தனை காலத்துக்கு இத்தகைய அடாவடிகளை நாம் பார்க்கப் போகிறோம்?!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ராஷ்டிரிய கெமிக்கல்ஸ்
அண்ட் பெர்டிலிசர்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர்
பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு
செய்யப்பட உள்ளனர்.
இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்
உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
(தொடர்ச்சி கீழே...)
நிர்வாகம் :
ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலிசர்ஸ் லிமிட்டெட்
மேலாண்மை :
மத்திய அரசு
பணி :
பொறியாளர் (இரசாயணம்)
மொத்த காலிப் பணியிடங்கள் : 41
ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்
வயது வரம்பு :
01.02.2019 தேதியின்படி 30 வயதிற்கு உட்பட்டு இருக்க
வேண்டும்.
கல்வித் தகுதி :
பொறியியல் துறையில் பெட்ரோகெமிக்கல், பெட்ரோகெமிக்கல்
டெக்னாலஜி, அலைடு கெமிக்கல் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக். அல்லது
பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை :
நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
ரூ.700. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி
பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
கட்டணம் செலுத்தும் முறை :
ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
www.rcfltd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட்
அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 08.04.2019
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும்
தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள அப்பர்
டிவிசன் கிளார்க், சுருக்கெழுத்தர் தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்கு
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
(தொடர்ச்சி கீழே...)
நிர்வாகம் :
தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம்
மேலாண்மை :
மத்திய அரசு
பணி :
ஸ்டெனோகிராபர்
பணியிடம் :
சென்னை
கல்வித்
தகுதி :
12ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
18 முதல் 32 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
பணி :
அப்பர் டிவிசன் கிளார்க்
காலிப் பணியிடங்கள் : 131
பணியிடம் :
சென்னை
கல்வித் தகுதி :
50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
18 முதல் 33 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்
.
ஊதியம் : ரூ. 25,500
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.04.2019
விண்ணப்பிக்கும் முறை :
https://ibpsonline.ibps.in/esicsucmar19/ என்னும் இணையதள முகவரியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில்
சுகபிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரிலுள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இங்கு
நேற்று இரவு நிறைமாத கர்ப்பிணி பொம்மி என்பவர் சிகிச்சைக்காக
சேர்க்கப்பட்டுள்ளார்.
(தொடர்ச்சி கீழே...)
ஆனால், அப்போது மருத்துவர் பணியில் இல்லை என்று சொல்லப்படுகிறது.
இதையடுத்து, அங்கே பணியிலிருந்த செவிலியர்கள் பேறுகாலம் பார்த்துள்ளனர்.
சுக பிரசவத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டன.
குழந்தையும் வெளியேவர ஆரம்பித்தது. ஆனால், அனுபவம் இல்லாத
செவிலியர்கள், குழந்தையின் தலையை தனியாக பிய்த்து எடுத்துவிட்டனர். இதனால்
அந்த சிசு பரிதாபமாக பலியானது. இதனிடையே பொம்மியின் உடலுக்குள்
மாட்டிக்கொண்ட, குழந்தையின் உடல்பகுதியை போராடி மீட்ட செவிலியர்கள்,
உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பொம்மியை சிகிச்சைக்கு அனுப்பி
வைத்தனர்.
பாதிக்கப்பட்ட பொம்மிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார், 30 கிராம, மக்கள் வந்து செல்லும்
சுகாதார நிலையத்தில், இரவு நேரத்தில் மருத்துவர் பணியில் இல்லாத நிலை
நீடிப்பதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் ரஜினி, விஜய்யுடன் நடித்து பிரபலமான ஸ்ரேயா, தற்போது நடுரோட்டில் நடனம் ஆடும் வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகைகள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து அதை வீடியோ படம்
எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்கின்றனர். இதில் தற்போது நடுரோடு வரைக்கும்
கூட வர தொடங்கிவிட்டார்கள். ரஜினி, விஜய் என்று பிரபல நடிகர்களுடன்
ஜோடியாக நடித்துள்ள ஸ்ரேயா தற்போது நரகாசூரன் படத்தில் நடித்துள்ளார்.
இப்படம்
விரைவில் வெளிவரவுள்ளது. தமிழில் புதிய படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல்
இவர் காத்திருக்கிறார். இந்தியில் தட்கா என்ற ஒரு படத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்பு இல்லாத நிலையில் வெளிநாடுகளுக்கு பறந்துவிடுகிறார் ஸ்ரேயா.
சமீபத்தில் வெளிநாடு சென்ற ஸ்ரேயா அங்குள்ள இயற்கை அழகை ரசித்து
மகிழ்ந்தார். பின்னர் அப்பகுதியில் நடந்த திருவிழாவுக்கு சென்றவர் அங்கு
நடந்த காட்சிகளை ரசித்தார். உற்சாக மிகுதியில் நடுரோட்டிலேயே நடனம் ஆடத்
தொடங்கினார். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும்
வெளியிட்டுள்ளார்.
அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ், வறுமை கோட்டிற்குகீழ்
உள்ளவர்களுக்கு மாதாந்திர நேரடி உதவி தொகையாக ரூ.1,500 வழங்க
வலியுறுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும்,
தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல்
18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
(தொடர்ச்சி கீழே...)
இந்த தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சென்னை
ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை
முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல்
அறிக்கையை வெளியிட்டு பேசினார். தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள்
வருமாறு:-
அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ்
உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்க வலியுறுத்தப்படும்.
மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல்மொழியாக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
காவிரி, கோதாவரி ஆறுகள் இணைப்பு திட்டத்தை உடனடியாக மேற்கொள்ள
வலியுறுத்தப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்க
அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மாணவர்களின் கல்விக் கடனை ரத்து
செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்ற மத்திய
அரசிடம் வலியுறுத்தப்படும். மதம் மாறினாலும் சாதிரீதியான இட ஒதுக்கீடு
பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும்படி கவர்னரிடம் வலியுறுத்தப்படும்.
பொது சிவில் சட்டதை அமல்படுத்தக்கூடாது என மத்திய அரசிடம்
வலியுறுத்தப்படும். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய
அரசிடம் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி
பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பொலிவூட் நடிகை தீபிகா படுகோனேவிற்கு லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை வைத்துள்ளனர்.
இந்நிலையில் அவரது மெழுகுச்சிலையை திறந்து வைக்க, காதல் கணவர் ரன்வீர் சிங் மற்றும் தனது குடும்பத்தினருடன் லண்டன் பறந்து சென்றார்.
(தொடர்ச்சி கீழே...)
இதையடுத்து தனது குடும்பத்தினர் முன்னிலையில் தனது மெழுகுச்சிலையை தீபிகா படுகோனே திறந்து வைத்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
வெள்ளை உடையில் அந்த அழகான மெழுகுச்சிலையை பார்த்து ரசித்த தீபிகா, இதனை
உருவாக்கியவரிடம் நான் அதை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாமா?” என்று
கேட்டுள்ளார். அதற்கு, மீண்டும் அடுத்த முறை நீங்கள் வரும் வரை உங்கள்
ஞாபகங்களாய் இந்த அழகு நிறைந்த மெழுகு சிலை இங்கே இருக்கட்டும் என
தெரிவித்துள்ளார்.
மேலும், தீபிகா அருகில் அந்த சிலை நிற்பதை பார்த்து இரட்டை சகோதரிகள்
என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த
புகைப்படம் இணையத்தில் பரவலாகி வருகிறது.
திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக
உதவியாளர், இரவுக்காவலர், சுருக்கெழுத்தர் தட்டச்சர், மசால்ஜி உள்ளிட்ட
பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடத்திற்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் கணினி
அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். ரூ.50
ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு
உடனடியாக விண்ணப்பித்து பயனடையுடங்கள்.
(தொடர்ச்சி கீழே...)
நிர்வாகம் :
திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிமன்றம்
மேலாண்மை :
தமிழக அரசு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
அலுவலக உதவியாளர் - 23
இரவுக்காவலர், மசால்சி - 07
துப்புரவு பணியாளர் - 01
ஊதியம் :
ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரையில்
சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-II - 07
கணினி ஆப்ரேட்டர் - 01
ஊதியம் :
ரூ. 20,600 முதல் ரூ. 65,500 வரையில்
கல்வித் தகுதி :
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள், 8 ஆம் வகுப்பு
தேர்ச்சி பெற்றவர்கள், 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ், ஆங்கிலத்தில்
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், கணினி
அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் என சம்மந்தப்பட்ட கல்விக்கு
தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
அஞ்சல் மூலமாக
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை
மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி 627 002
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
20.03.2019
இப்பணியிடம் குறித்த மேலும்
விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப்
பெறவும்
https://districts.ecourts.gov.in/india/tn/tirunelveli/notification என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
கன்னியாகுமரியில் பெற்றோர் கடனை திருப்பிச் செலுத்தாததால் ஆத்திரம்
அடைந்த இளைஞர் அவர்களது 4 வயது குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து
கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய பின்ராஜ். இவரது மனைவி
சகாய சிந்துஜா. இவரது மகன் ரெய்னா (4). அதே பகுதியை சேர்ந்தவர்
அந்தோணிசாமி. இவர் வட்டிக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார்.
(தொடர்ச்சி கீழே...)
இந்நிலையில் சிந்துஜா, அந்தோணிச்சாமியிடம் ஒரு லட்ச ரூபாய் கடன்
வாங்கியிருந்தார். இந்நிலையில் அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதில்
இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிசாமி, சிந்துஜாவின் மகன் ரெய்னாவை
கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. கடத்தி சென்ற 4 வயது சிறுவன் ரெய்னாவை
தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ததாகவும்
தெரிகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்தாமரை குளம் போலீசார், சிறுவனின்
உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனை கொலை செய்துவிட்டு
தப்பியோடிய அந்தோணிசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.