வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-04-07
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, April 11, 2019

வாழ்வில் 100% வெற்றி பெற இந்த வீடியோவை காணுங்கள்



துரைமுருகன் மகன் மீது வழக்கு: எந்நேரமும் கைதாக வாய்ப்பு?




காட்பாடியில் சிக்கிய, 11.50 கோடி ரூபாய், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்ததாக தகவல் வெளியான நிலையில், வேலுார், தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த் உட்பட மூன்று பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


வேலுார் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளராக, துரைமுருகனின் மகன், கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். காட்பாடியில் உள்ள இவரது வீடு மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்தனர். இது குறித்து, நீதிமன்ற அனுமதியுடன் வழக்குப்பதிவு செய்து, அறிக்கை அனுப்ப, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். 



இதையடுத்து, வேலுார் லோக்சபா தொகுதி, தேர்தல் செலவின அலுவலர் சிலுப்பன், காட்பாடி போலீசில், 8ம் தேதி புகார் செய்தார்.  அதில் கூறியிருப்பதாவது: மார்ச், 29ல், வேலுார் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் கதிர்ஆனந்த் வீட்டில் நடத்திய சோதனையில், 19 லட்சத்து, 57 ஆயிரத்து, 10 ரூபாய் சிக்கியது. இது, கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கலின் போது கூறிய கையிருப்பு தொகையை விட, 10 லட்சத்து, 57 ஆயிரத்து, 10 ரூபாய் கூடுதலாக இருந்தது. 



அடுத்து, ஏப்., 1ல் வருமான வரித்துறையினர், காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில், தாமோதரன் என்பவருக்கு சொந்தமான குடியிருப்பு பகுதியில் நடத்திய சோதனையில், 11 கோடியே, 48 லட்சத்து, 51 ஆயிரத்து, 800 ரூபாய் சிக்கியது. இதை, பூஞ்சோலை சீனிவாசன் என்பவர், வாக்காளர்களுக்கு வழங்க, வைத்திருந்ததாக தெரிவித்தார். எனவே, வேட்பு மனு தாக்கலின் போது, வழங்கிய உறுதிமொழி பத்திரத்தில், தவறான தகவல் கொடுத்தது மற்றும் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருந்தது குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது. 



இதையடுத்து, காட்பாடி, டி.எஸ்.பி., சேகர், இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர், புகாரின் மீது, எந்தெந்த பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வது என, காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜெயசுதாகரிடம் ஆலோசனை நடத்தினர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய, மாஜிஸ்திரேட் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, கதிர்ஆனந்த், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது, பிரமாண பத்திரத்தில், தவறான தகவல் அளித்தல், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. 



இந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட விபரம் குறித்த அறிக்கை, வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல் அதிகாரி, தமிழக தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்தார்.வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், கதிர்ஆனந்த் உட்பட, மூவரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.



சந்திக்க தயார்: குடியாத்தம் அடுத்த மோர்த்தானா அணை பகுதியில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கதிர் ஆனந்த், நிருபர்களிடம் கூறுகையில், 'வழக்கு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வழக்கு குறித்து முழுமையாக அறிந்த பின்பே, அது பற்றி கூற முடியும். என் மீது எத்தனை வழக்கு போட்டாலும், அவற்றை சட்ட ரீதியாக சந்திக்க தயாராக உள்ளேன்.' என்றார்.


Sunday, April 07, 2019

சன் டிவியில் ஜோதிடபலன் சொன்ன இவங்க இப்போ எங்க இருக்காங்க தெரியுமா?



சன் தொலைக்காட்சியில் காலையில் தினமும் இவரது குரலை கேட்காதவர்கள் எவரும் இருக்க முடியாது.


ராசியான நிறம், அனுகூலமான திசை என்று அணைத்து ராசிகளின் நேரத்தை தினமும் என்று புட்டு வைத்தவர் வே ஜே விஷால். தற்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.சன் டிவியில் ஜோதிடபலன் நிகழ்ச்சியைப் பல வருஷங்களாகத் தொகுத்து வழங்கியவர் வீஜே விஷால்.


ஐ.டி வேலை பார்த்துக்கொண்டு, பகுதி நேரமாக மீடியாவில் வலம் வந்தவர். அவருடைய நேரமாக காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிடபலன் நிகழ்ச்சியிலிருந்து விலகினார். சமீபத்தில் பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள இவர், வேலையின் காரணமாக லண்டனில் மூன்று வருஷம் இருக்க வேண்டியதாக இருந்துச்சு. லண்டனில் இருந்து வந்ததுக்கு அப்புறம் பார்ட் டைமாக இருந்து பண்ணலாம்னு டெஸ்ட் ஷூட் போயிருந்தேன்.


இப்போ வரை எந்த ரிசல்ட்டும் வரலை. மீடியா எனக்கு அதிகமாக பேம் கொடுத்துச்சு. ஐ.டி கம்பெனி எனக்கான வளர்ச்சியைக் கொடுத்துச்சு. பல விஷயங்கள் கத்துக்கிட்டேன். எதுக்காகவும், யாருக்காகவும் என் ஐ.டி வேலையை விடக்கூடாது, விட மாட்டேன் என்பது என்னுடைய எண்ணம். இப்பவும் பல இடங்களில் என்னைப் பார்க்கிற என் ரசிகர்கள் ஆசையா என்னைப் ரொம்ப சந்தோஷமா இருக்கு.


பல நாளிதழ்களில் லைப் ஸ்டைல் பற்றி ஆர்ட்டிகிள் எழுதியிருக்கேன். இனிமேல், எழுத்தில் கவனம் செலுத்தலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்.. மறுபடியும் வேலை காரணமா லண்டன் போறேன் என்று கூறியுள்ளார்.

பொள்ளாச்சியில் மீண்டும் இரத்த வெறியாட்டம்: அரைநிர்வாணமாக பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி!



பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், பலாத்காரம் செய்யப்பட்டு அரை நிர்வாணமாக சாலையோரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பொள்ளாச்சியில் கடந்த 2 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக பெரிய சர்ச்சை ஒன்று எழுந்து அதற்கான தீவிரமான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், துடியலூரை சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.




இந்த இரு சம்பவங்களால் தமிழகமே பெரும் பரபரப்பில் இருந்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் பிரகதி என்பவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகிறார்.


நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற பிரகதி வீடு திரும்பவில்லை. இதையடுத்து பிரகதியின் பெற்றோர் இன்று காலையில் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் ரோட்டில் முட்புதருக்குள் பிரகதி அரைநிர்வாணமாக கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கொலை செய்த நபர்களை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்பி சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.