வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-05-26
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, June 04, 2019

ஏ.டி.எம்.-இல் இருமுறை கேன்சல் க்ளிக் செய்தால் இப்படி நடக்குமா?

ஏ.டி.எம். இயந்திரத்தில் உள்ள கேன்சல் (cancel) பட்டனை இருமுறை க்ளிக் செய்தால், மற்றவர்கள் உங்களது பின் நம்பரை திருட முடியாது என தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.


 வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பரப்பப்படும் தகவல்களில் இந்திய ரிசர்வ் வங்கி மக்களிடம் ஏ.டி.எம். பயன்படுத்திய பிறகு இருமுறை கேன்சல் பட்டனை க்ளிக் செய்யக் கோருகிறது.


 இவ்வாறு செய்வதன் மூலம் பயனரின் ரகசிய குறியீட்டு எண் (பின்) மற்றவர்கள் திருட முடியாது என கூறப்படுகிறது. இதுகுறித்து பெயர் குறி்ப்பிட விரும்பாத ரிசர்வ் வங்கி அதிகாரி கூறும் போது, இவ்வாறு பரவும் தகவலில் உண்மையில்லை என தெளிவுப்படுத்தி இருக்கிறார்.


 இது ரிசர்வ் வங்கியால் அனுப்பப்பட்ட குறுந்தகவல் கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஏ.டி.எம். இயந்திரத்தில் பின் நம்பரை பதிவிட்ட பின் ஒருமுறை கேன்சல் பட்டனை க்ளிக் செய்தாலே குறிப்பிட்ட பரிமாற்றம் ரத்தாகி விடும் என மனிபால் டெக்னாலஜிஸ் லிமிட்டெட் நிறுவன துணை தலைவர் அஸ்வின் ஷெனாய் தெரிவித்தார்.


முன்னதாக இதே தகவலை அமெரிக்காவை சேர்ந்த வலைதளம் ஒன்றும் பொய் என நிரூபித்து இருக்கிறது
தற்சமயம் பரப்பப்படும் குறுந்தகவலில் நம்பகத்தன்மையை அதிகப்படுத்த, குறுந்தகவல் இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 இது படிப்பவர்களை எளிதில் ஏமாற்றும் வகையில் அமைந்து இருக்கிறது. சமூக வலைதளங்களில் இதுபோன்று பல்வேறு போலி தகவல்கள் பரப்பப்படுகிறது.
இதனால் இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம். இத்துடன் பரப்பப்படும் குறுந்தகவலை மேலும் உண்மையாக்கும் வகையில் வலைதள முகவரி ஒன்றும் இடம்பெற்றிருக்கிறது. எனினும் இந்த வலைதளத்தில் முகப்பு பக்கம் மட்டும் திறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் இதுபோன்று எவ்வித குறுந்தகவல்களையும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில்லை. பெரும்பாலும் இதுபோன்ற குறுந்தகவல்களை குறிப்பிட்ட ஏ.டி.எம்.களை இயக்கும் வங்கிகள் சார்பில் அனுப்பப்படுவது வாடிக்கையாக இருக்கிறது.
.

Monday, June 03, 2019

பஸ்-மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்

பஸ்-மெட்ரோ ரெயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்: கெஜ்ரிவால் அறிவிப்பு...

டெல்லியில் மெட்ரோ ரெயில் மற்றும் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.




பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.



 இந்த நிலையில் டெல்லியில் பெண்கள் மெட்ரோ ரெயில் மற்றும் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.



அதிக கட்டணம் என்பதற்காக எக்ஸ்பிரஸ் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய முடியாத பெண்களுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.



 எனினும், டிக்கெட் வாங்கி பயணம் செய்யும் அளவுக்கு வசதி படைத்த பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் உண்மையிலேயே தேவைப்படும் பெண்களுக்கு இந்த சலுகையை விட்டுக்கொடுக்க வேண்டும் என கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த திட்டத்தால் டெல்லி  அரசுக்கு ஆண்டுக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் செல்போன் பேசியபடி பஸ் ஓட்டிய 14 டிரைவர்கள் சஸ்பெண்டு

சென்னையில் செல்போன் பேசியபடி பஸ் ஓட்டிய 14 டிரைவர்களை சஸ்பெண்டு செய்து போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வாகனம் ஓட்டுபவர்கள் செல்போனில் பேசுவதால் விபத்துக்கள்


ஏற்படுகின்றன.செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது குற்றம் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


பஸ் ஓட்டும்போது செல்போனில் பேசுவதால் மிகப்பெரிய விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அரசு மற்றும் மாநகர பஸ்களில் டிரைவர்கள், கண்டக்டர்கள் போன் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 வருடங்களில் சென்னை மாநகர பஸ்களில் டிரைவர்கள் செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுவதாக பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. 2014-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 370 புகார்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் தற்போது புகார் உறுதி செய்யப்பட்ட 14 மாநகர பஸ் டிரைவர்கள், 3 கண்டக்டர்கள் மீது போக்குவரத்து துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் நடந்த விபத்துக்களின் அடிப்படையில் இந்த 17 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை, ராயப்பேட்டை ஆஸ்பத்திரி, வேளச்சேரி சந்திப்பு ஆகிய இடங்களில் நடந்த மாநகர பஸ் விபத்துக்கள் டிரைவர்கள் செல்போனில் பேசியதால் அதிக விபத்துக்கள் ஏற்படுவது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள். பொதுமக்களும் புகார் செய்கிறார்கள்.

 இதன் அடிப்படையில் விசாரணை செய்து மாநகர பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அதன் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

77.48 லட்சம் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கி தொடங்கி வைத்தார்

தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2019-2020-ம் கல்வியாண்டிற்கு 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத் புத்தகங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி தொடங்கி வைத்தார்.


அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது

. மாணவர்களது புத்தகச் சுமையினை குறைக்கும் நோக்கத்தோடு 2012-2013 கல்வியாண்டில் முப்பருவ கல்வி முறை தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

முதல் பருவம் ஜுன் மாதத்திலும், இரண்டாம் பருவம் அக்டோபர் மாதத்திலும், மூன்றாம் பருவம் ஜனவரி மாதத்திலும் தொடங்குகிறது. பாடப் புத்தகங்கள் ஒவ்வொரு பருவத்தின் தொடக்க நாளன்றே மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ffff
மாணவர்களின் முழுமையான ஆளுமைத் திறனை வளர்த்திடவும், செயல் வழிகற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், சிந்தனைத் திறனை வெளிக்கொணரும் வகையிலான மதிப்பீட்டு முறையை உள்ளடக்கியும், உலகளாவிய அறிவியல் தொழில் நுட்ப மாற்றங்களுக்கேற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான சவால்களை மாணவ, மாணவிகள் உறுதியோடு எதிர்கொள்ளும் வகையிலும், அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு மிகச்சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்து, புதிய பாடத் திட்டமும், பாட நூல்களும் உருவாக்கப்பட்டது.


2019-2020-ம் கல்வியாண்டிற்கு ரூ.195.25 கோடி செலவில் 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத் திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள பாடங்களை படிக்க 220 நாட்கள் தேவைப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு தான் இன்றே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

 பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையை முழுமையாக தீர்த்திடும் வகையில் உள்ளாட்சித் துறையுடன் பள்ளிக்கல்வித் துறை இணைந்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மாணவ, மாணவிகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், முழுமையாக பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்கள் இன்றே வழங்கப்படும். மத்திய அரசால் நடத்தப்படும் எந்த போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெறுகின்ற வகையில் இந்த புதிய பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
 இந்தியாவிலேயே கல்வித் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும், மாற்றங்களையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா.வளர்மதி, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், மேலாண்மை இயக்குநர் ஜெயந்தி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய பெண்- லட்சியத்தை அடைய போராட்டம்

கேரள மாநிலத்தின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் லதீஷா அன்சாரி(24). இவர் பிறக்கும்போதே மிகவும் அரிதான எலும்பு நோயினால் பாதிக்கப்பட்டவராவாஇவருக்கு ஷெஹின் என்பவருடன் திருமணம் ஆனது.


இருவரும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்துள்ளனர். ஷெஹினுக்கு இது மூன்றாவது தேர்வு. லதீஷாவுக்கு இதுமுதல்தேர்வு.



சில தினங்களுக்கு முன் லதீஷாவின்  நிலைமை  குறித்து பல்வேறு பத்திரிக்கைகளில் தகவல்கள் வலம் வந்தன. லதீஷா, சில காலங்களாக சரியான சுவாசமின்றி சிரமப்பட்டு வந்தார். அவருக்கு தடையற்ற ஆக்ஸிஜன் சப்ளே தேவைப்பட்டது.
அவரால் ஆக்ஸிஜன் சப்ளே இன்றி சாப்பிடக்கூட முடியாத நிலையும் உருவானது. இதையடுத்து கோட்டயம் கலெக்டரிடம் இது தொடர்பாக லதீஷாவின் தந்தை மனு அளித்திருந்தார்.

இதில் லதீஷா ஐஏஎஸ் தேர்வு எழுத உள்ளதாகவும், ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்படுவதால் அதனை வழங்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து அரசு சார்பில் அவருக்கான உதவி, ஐஏஎஸ் தேர்வு எழுத தேர்வறைக்கு சென்றபோது வழங்கப்பட்டது. லதீஷா திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளியில் நேற்று தேர்வு எழுதினார்.

 அங்கு வந்த அரசு அதிகாரிகள், அவரது வீல் சேருக்கு பின்புறம் ஆக்ஸிஜன் சிலிண்டரை பொருத்தினர்.



இது குறித்து லதீஷா கூறுகையில், 'இப்போது நான் நலமாக உணர்கிறேன். ஓராண்டாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன். எனது லட்சியத்தை நிச்சயம் எட்டுவேன். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி' என புன்சிரிப்புடன் கூறினார்.

மேலும் லதீஷா தனது செல்போனில் இருந்த அவரது படைப்பில் உருவாக்கப்பட்ட கண்ணாடி ஓவியங்கள், கீபோர்ட் வாசித்த வீடியோக்கள் என காண்பித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியும் இருக்கிறார்.

ராமநாதபுரத்தில் பரபரப்பு: மணல் திருட்டை தடுத்தவர் கொடூரக் கொலை, 4 பேருக்கு அரிவாள் வெட்டு

ராமநாதபுரத்தை அடுத்த இளமனூர் அருகே உள்ள புழுதி கண்மாய் பகுதியில் அரசு உரிமம் பெற்ற மணல் குவாரி உள்ளது.


 ஆனால் இங்கு அரசின் விதிமுறைகளுக்கு புறம்பாக அதிக ஆழத்தில் மணல் தோண்டி எடுக்கப்படுவதாகவும், கண்மாய் கரைகளையும் வெட்டி மணல் எடுப்பதாகவும் புகார் எழுந்தது.


 இதையடுத்து இளமனூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மோகன் (வயது 42) மற்றும் சிலர் நேற்று மாலை புழுதி கண்மாய் பகுதிக்கு சென்று அங்கு லாரி மற்றும் டிராக்டர்களில் மணல் திருடிக் கொண்டிருந்தவர்களை கண்டித்து தட்டிக் கேட்டனர்.


 மேலும் அங்கு மணல் எடுக்கக் கூடாது என்று கூறினர். இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கு மணல் திருடிக் கொண்டிருந்தவர்கள் செல்போனில் கொடுத்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்தது.

அந்த கும்பல் அரிவாள் மற்றும் இரும்புக்கம்பி போன்ற ஆயுதங்களால் மோகன் மற்றும் அவருடன் வந்தவர்களை சரமாரியாக தாக்கினர்.

 இதில் படுகாயமடைந்த மோகனை கண்மாயின் ஒரு பகுதியில் தேங்கியிருந்த தண்ணீர் மற்றும் சேற்றில் அமுக்கி கொடூரமாக கொலை செய்தனர். மற்றவர்கள் காயத்துடன் தப்பியோடி உயிர் பிழைத்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த கும்பலைச் சேர்ந்தவர்களே மோகனின் உடலை ஒரு காரில் ஏற்றி ராமநாதபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விட்டு தப்பியோடி விட்டனர்.

 மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் இளமனூர் கிராமத்தைச் சேர்ந்த சாத்தையா(37), முருகேசன்(37), லட்சுமணன்(32), செல்வம்(44) ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி தகவலறிந்த இளமனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர்.

 கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆஸ்பத்திரி முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியிலில் ஈடுபட்டனர்.


 இதனால் அந்த பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமணி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.


 கொலை செய்யப்பட்ட மோகனுக்கு சாந்தி(34) என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்த சம்பவம் பற்றி இளமனூர் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

சைக்கிளில் வந்து பதவி ஏற்றுக்கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் முறைப்படி தங்கள் அலுவலகம் சென்று பொறுப்பேற்று வருகின்றனர்.


அந்த வகையில் இன்று ஹர்ஷவர்தன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


டெல்லியில் உள்ள தனது அலுவலகத்துக்கு சைக்கிளில்  அவர் சென்றார்.


கோப்பில் கையெழுத்திட்டு தனது பணியைத் தொடங்கிய ஹர்ஷவர்தனுக்கு, துறை சார்ந்த அதிகாரிகள், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பெண்ணை தாக்கும் பாஜக ஏம்.எல்.ஏ. வைரலாகும் வீடியோ

அகமதாபாத் நகர  நரோடா தொகுதியை சேர்ந்த  பாஜக எம்.எல்.ஏ. பால்ராம் தவாணி  ஒரு பெண்ணை தாக்கும் வீடியோ  சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் பாரதீய ஜனதா அலுவலகத்திற்கு வெளியே நடந்து உள்ளது.



சம்பந்தப்பட்ட பெண் தண்ணீர் பற்றாக்குறை பற்றி புகார் கூற வந்து உள்ளார். அப்போது அந்த பெண்ணை எம்.எல்.ஏ. தாக்கி உதைத்தார்.

 வீடியோவில் கீழே தள்ளிவிடப்படும் பெண்னை ஒரு கும்பல் தாக்குகிறது. அந்த பெண்ணை உதைக்கிறார்கள். 

எனினும் பின்னர், பால்ராம் தவாணி எம்.எல்.ஏ. அந்த பெண்ணிடம் வருத்தம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்து உள்ள பலராம் தவாணியின் சகோதரர் கிஷோர் தவாணி  தாக்கியவர்கள் குறித்து குற்றம்சாட்டினார்.

Saturday, June 01, 2019

துப்பட்டா அணிந்தால் மட்டும்?.. அரசு ஊழியர்களுக்கு திடீர் ஆடைக் கட்டுப்பாடு..

புடவை ஓகே.. சுடிதாரும் ஓகே.. ஆனால் துப்பட்டா போட மறக்காதீங்க.. என்று அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏன் இந்த திடீர் உத்தரவு என்றுதான் தெரியவில்லை. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஒரு திடீர் உத்தரவை பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், "சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய உடைகளை மட்டுமே பெண் ஊழியர்கள் அணிய வேண்டும். சேலை தவிர மற்ற உடைகளை உடுத்தும்போது துப்பட்டா அணிவது அவசியம். உடைகளின் நிறம் மெல்லிய வண்ணமாக இருக்க வேண்டும்.

மெல்லிய வண்ணம்  

ஆண் பணியாளர்கள் அனைவரும் பேண்ட், சட்டை அணிய வேண்டும். டிசர்ட் அணியக் கூடாது. நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆஜராகும்போது முழு நீள ஸ்லீவ் கொண்ட கோட், டை அணிய வேண்டும். அந்த ஆடைகள் மெல்லிய வண்ணத்தில் இருக்க வேண்டும். அடர் வண்ண உடைகளை அணியக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.


காரணங்கள்  

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கொஞ்ச நாளாகவே நாகரீக உடை என்று சில அரைகுறை ஆடைகளை அணிந்து வருகிறார்களாம். இதனால் தேவையில்லாத பிரச்சனைகள் வருகிறதாம், நிறைய விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளதாம். இது சம்பந்தமாக அரசு உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்ததால், இப்படி ஒரு ஆடை கட்டுப்பாடு என்று காரணம் சொல்லப்படுகிறது.
வரவேற்பு  

தமிழக பெண்களுக்கென்று உள்ள பாரம்பரியத்தை பேணி காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அதை கருத்தில் கொண்டு அலுவலகத்துக்கு வரும் பெண்கள் துப்பட்டா அணிந்து வரவேண்டும் என்ற அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கதே.


சிறுமிகள் 

புதருக்குள் தூக்கி சென்று கற்பழித்து எரித்து கொன்ற ஹாசினி, கோயிலுக்குள் சிதைத்து கொன்ற ஆசிபா, தலை கொய்து எறியப்பட்ட சேலம் சிறுமி, துடிக்க துடிக்க சீரழித்த அயனாவரம் சிறுமி சம்பவங்கள் நடந்த போதெல்லாம் வராத ஆடைக் கட்டுப்பாடு இப்போது வந்துள்ளது என்ற கேள்வியை மக்கள் கேட்கிறார்கள்.


பாதிப்பு இல்லையா?  

அதேசமயம், அரசு ஊழியர்கள் மட்டும் டீசன்ட் உடைகளை அணிந்தால் போதுமா? தேவையில்லாத பிரச்சனைகள் அவர்களுக்கு மட்டும் வரவில்லையே.. அரைகுறை ஆடை அணியும் மற்ற துறை பெண்கள், மாணவிகளுக்கும்தான் வந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் சுடிதார், சேலை அணிந்த பெண்களுக்கும் சமுதாய பாதிப்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது.


சுதந்திரம்  

அரசு ஊழியர்களுக்கான இந்த ஆடைக் கட்டுப்பாடு வினோதமாக இருக்கிறது. இது தேவையில்லாத சலசலப்புகளையே ஏற்படுத்தும் என்று பொதுவான கருத்து எழுந்துள்ளது. இது எல்லாவற்றையும் விட ஒருவர் எதை சாப்பிட வேண்டும், எதை உடுத்த வேண்டும் என்பது அவரவர் சுதந்திரமாகும். காந்தியடிகள் தலைமையில் லட்சோபம் லட்சம் இந்தியர்கள் ரத்தம் சிந்தி வாங்கிக் கொடுத்த சுதந்திரமும் கூட. இதையும் அனைவரும் மனதில் வைத்துக் கொள்ளுதல் நலம்.


பாஜக மாநிலம் 

நடந்து முடிந்த தேர்தலில் பெண் தேர்தல் அதிகாரிகள் ரீனா, யோகேஸ்வரி இவர்களை எல்லாருக்கும் நினைவிருக்கும். விதவிதமாக உடை அணிந்து ட்ரெண்டிங் ஆனவர்கள். அரசு அதிகாரிகள்தான்.. ஆனால் இவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு எதையும் அந்த மாநில அரசு விதிக்கவில்லையே.. இத்தனைக்கும் அது பாஜக ஆட்சி நடந்து வரும் மாநிலம்.


சுயஒழுக்கம்  

அதனால் கட்டுப்பாடுகள், எங்கு, எதற்கு, யாருக்கு என்பதெல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறது. எப்படி இருந்தாலும் சரி, எந்த மாநிலமாக இருந்தாலும், எவ்வளவு ஆடை கட்டுப்பாடுகள் விதித்தாலும் சரி.. "சுய ஒழுக்கம்" என்பதை தாண்டி வேறு எதுவும் சிறந்த பாதுகாப்பு பெண்களுக்கு இருந்து விட முடியாது!

டிக்டாக் செயலியால் விபரீதம், இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற கணவர் கைது

கோவையை அடுத்த அறிவொளிநகர் பகுதியைசேர்ந்தவர் கனகராஜ் (வயது 35),கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (28). இவர் கோவை அருகேஉள்ள தனியார்என்ஜினீயரிங் கல்லூரியில்ஊழியராக பணிபுரிந்துவந்தார்.


 இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.குடும்பத்தகராறுகாரணமாக கனகராஜ்மற்றும் நந்தினிஆகியோர் கடந்த2ஆண்டுகளாக பிரிந்துவா
கடந்த சில மாதங்களாக நந்தினி செல்போனில்டிக்டாக்செயலிக்கு அடிமையாகி அதனை பயன்படுத்திஅதிகளவில்வீடியோக்களைபதிவேற்றம்செய்துவந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் கனகராஜ்செல்போனில்நந்தினியை தொடர்புகொண்டுடிக்டாக்செயலி வீடியோக்களைபதிவேற்றம்செய்ய வேண்டாம் என்றும், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறும்கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து பேச அவர் நந்தினியை செல்போனில்தொடர்பு கொள்ளமுயற்சி செய்தார். அப்போது நீண்ட நேரம்அழைப்பு பிசியாகஇருந்ததால் நேற்று மதியம் கனகராஜ் மது குடித்துவிட்டு, நந்தினிவேலை செய்யும்கல்லூரிக்கு சென்றுஅவருடன் வாக்குவாதத்தில்ஈடுபட்டதாக தெரிகிறது

 அப்போது ஆத்திரமடைந்த கனகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினியின் தலை மற்றும் உடலில்சரமாரியாக குத்திஉள்ளார். இதில் படுகாயம் அடைந்தஅவரை சகஊழியர்கள்மீட்டு கோவைஅரசுஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம்குறித்து தகவல்அறிந்த மதுக்கரைசப்-இன்ஸ்பெக்டர் மனோஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

 பின்னர்கனகராஜை கைதுசெய்தனர்.
செல்போனில்டிக்டாக்செயலி பயன்படுத்தியதால் வந்த தகராறில் கணவனேமனைவியை கொலைசெய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Thursday, May 30, 2019

வீட்டில் பதுக்கி வைத்திருந்தரூ.3 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்

காரைக்காலில் நாகை நெடுஞ்சாலையில் ஹைவே நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, உணவு கலப்பட தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நகராட்சி ஆணையர் சுபாஷ், உணவு கலப்பட தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு நேற்று திடீரென்று சென்று அதிரடி சோதனை செய்தனர்.

 அப்போது வீட்டின் வாசல், படுக்கை அறை, கழிவறையில் மூட்டை, மூட்டையாக போதை பொருள் (கூல் லிப், ஹான்ஸ், பிளாக் சிகரெட்) பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்தவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில் சிங்காரவேலு என்பவருக்கு சொந்தமான வீட்டை நிரவி பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் ரவி (வயது 47) என்பவர் வாடகைக்கு எடுத்து மனைவி, மகள், மாமியார் என குடும்பத்தோடு வசித்து வருவது தெரியவந்தது.
திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட போதை பொருட்களை, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், பொறையாறு, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகம் செய்து வந்ததும், அண்மை காலமாக அதிகாரிகள் கெடுபிடி காரணமாக போதை பொருளை வினியோகிக்காமல் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
வாடகை வீட்டில் மூட்டை மூட்டையாக போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதல்: மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க வந்த தந்தை பலி

சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த குமார்(வயது 46) ஓட்டினார்.


 நேற்று அதிகாலை ஜெயங்கொண்டம்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் மாவட்டம் காரைக் குறிச்சி அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.


அந்த சாலையின் வளைவில் சரக்கு லாரி ஒன்று நின்று கொண்டிருந்ததை அரசு பஸ் டிரைவர் கவனிக்காததால் எதிர்பாராதவிதமாக பஸ், சரக்கு லாரியின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் ஒரு பகுதி முழுவதும் சேதம் அடைந்தது.


இதில் பஸ்சில் முன்புற சீட்டில் அமர்ந்து பயணம் செய்த சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்த ரகுபதி(67) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் பஸ்சில் இருந்த ரகுபதியின் மனைவி விஜய குமாரி(62), மகள் லாவண்யா(32), மூத்த மகளின் மகள் மவுலிகா(15), திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் ஹரிகரன்(12), குமரவேல் மகள் மகேஸ்வரி(22), வடுகநாதன் மகன் பாலாஜி(8), மகள் ஷாலினி (3), வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் சுப்பிரமணியன் மனைவி அமுதா (45), தஞ்சை வண்டிக்காரத்தெரு ரமேஷ் மனைவி ராஜேஸ்வரி(36), திருவையாறு செல்வராஜ் மகன் யுவராஜ் (34), கபிஸ்தலம் நடராஜ் (55), பாபநாசம் கணேசன் மகன் மாரிமுத்து (24), அரசு பஸ் கண்டக்டர் அய்யம்பேட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன்(58) உள்பட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சுகளில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விஜயகுமாரி உள்பட 4 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


 பஸ் மோதியதில் சரக்கு லாரியின் டீசல் டேங்க் உடைந்து, அதிலிருந்து டீசல் வெளியேறியதால் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அதனை சரி செய்தனர்.

விபத்தில் பலியான ரகுபதிக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சாந்தி, 2-வது மகள் ரம்யா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இளைய மகள் லாவண்யா திருமணம் ஆகாதவர்.


 இவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சியை தஞ்சாவூரில் உள்ள 2-வது மகள் ரம்யா வீட்டில் நடத்த முடிவு செய்து இருந்தனர். அதற்காக ரகுபதி குடும்பத்துடன் புறப்பட்டு வந்தபோது விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சிதம்பரம் வய்யூர் பெரியத்தெருவை சேர்ந்த அரசன் மகன் சீனிவாசன் (35), அரசு பஸ் டிரைவர் குமார் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை - பினராயி விஜயன்

தேர்தல் தோல்வியால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லைஎன்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.

கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி பெற்றது. ஏனைய 19 தொகுதிகளையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தோல்விக்கு சபரிமலை பிரச்சினையே முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
 சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு தீவிரமாக அமல்படுத்தியது.

இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டத்தின் வெளிப்பாடுதான் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் கேரள சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றியும், சபரிமலை பிரச்சினை குறித்தும் முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு பெண்களுக்கான உரிமையை பெற்று தருவதில் ஒருபோதும் பின்வாங்காது.

 நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி வாய்ப்பை இழந்ததால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெறப் போவதில்லை. அரசு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது அரசின் முடிவல்ல. சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு. அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அந்த கடமையைதான் கேரள அரசு செய்தது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால் கோர்ட்டை அவமதித்த வழக்கை சந்திக்க நேரிடும்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தோல்வியை சந்தித்ததை சிலர் கொண்டாடுகிறார்கள். அவர்கள் இப்போது வேண்டுமானால் சிரிக்கலாம். அந்த சிரிப்பு தற்காலிகமானதே. விரைவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மீண்டு எழும்.

பெண்களுக்காகவும், மக்களுக்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொடர்ந்து பாடுபடும்.

பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிப்பு- கைதான பட்டதாரி வாலிபர் குறித்து பரபரப்பு தகவல்

போலி பேஸ்புக் மூலம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்த பட்டதாரி வாலிஉளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் மகேந்திர வர்மன் (30). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

இதனால் விரக்தியில் இருந்த அவர் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என எண்ணினார். இதற்காக பிரபல இந்தி பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பெயரில் போலி முகநூல் தொடங்கினார்.

அவரது இசை ஆல்பங்கள் மற்றும் அவரது அழகான புகைப்படங்களை போலி முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

இதற்கு நிறைய இளம் பெண்களிடம் இருந்து லைக் கிடைத்தது. அவர்களிடம் முகநூல் நண்பராக பழக வருமாறு மகேந்திர வர்மன் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பார்த்த இளம்பெண்கள் அர்மான் மாலிக் தான் அழைப்பு விடுக்கிறார் என கருதி முகநூல் நண்பர்களானார்கள்.

பின்னர் அந்த இளம்பெண்களின் செல்போன் எண்ணை பெற்று மகேந்திர வர்மன் வாட்ஸ்அப் மூலம் பழக தொடங்கினார். அப்போது இந்தி படத்தில் பாட வாய்ப்பு வாங்கி தருவதாகவும், படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் கூறினார்.

மேலும் தங்களது படத்தை அனுப்புமாறும் கூறினார். சினிமாவில் பாட வாய்ப்பு கிடைக்கும் என நம்பிய இளம்பெண்கள் தங்களது அழகிய புகைப்படங்களை அனுப்பி வைத்தனர்.

அதனை ஆபாசமாக மார்பிங் செய்து இளம்பெண்களை மகேந்திர வர்மன் மிரட்ட தொடங்கினார். குறிப்பிட்ட ஒரு தொகையை கேட்டு அதனை தராவிட்டால் ஆபாசமாக சித்தரித்த படத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்கள் பலர் மகேந்திர வர்மன் கேட்ட தொகையை அவர் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தினர்.

இது போன்று 15-க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் மகேந்திர வர்மன் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் பணம் பறித்தது தெரிய வந்தது.இவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.


இந்த நிலையில் கோவை சூலூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் மகேந்திர வர்மன் பணம் கேட்டுள்ளார். பணத்தை தராவிட்டால் மார்பிங் செய்த படத்தை முகநூலில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி இருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தனது உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

இதனை தொடர்ந்து மகேந்திர வர்மனை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். அந்த இளம்பெண்ணை மகேந்திர வர்மனிடம் நைசாக பேசி பணம் தருவதாக கூறி கோவைக்கு வருமாறு அழைப்பு விடுமாறு போலீசார் கூறினார்கள்.

அதன் படி அந்த இளம்பெண்ணும் பேசி மகேந்திர வர்மனை கோவை லட்சுமி மில் சிக்னல் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.


 இளம்பெண் அழைப்பு ஏற்று கோவை வந்த மகேந்திர வர்மனை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா தேவி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.கைதான மகேந்திர வர்மனிடம் கையடக்க கணினி ( டேப் )இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.


 அதை ஆய்வு செய்த போது அவருடன் தொடர்பு வைத்து இருந்த இளம்பெண்களின் விவரங்கள் இருந்தது.

மேலும் அழகான பெண்ணை ஆபாசமாக சித்தரித்து மார்பிங் செய்து வைக்கப்பட்டு இருந்த புகைப்படமும் இருந்தது. அதில் 15-க்கும் மேற்பட்ட பெண்களின் படம் இடம் பெற்றிருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக மகேந்திர வர்மன் பெண்களிடம் பேசி பணத்தை பறித்தது தெரிய வந்தது.

கையடக்க கணினியை தடய அறிவியல் சோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட மகேந்திர வர்மன் போலீசாரிடம் கூறியதாவது-

ஆசிரியர் பயிற்சி படித்து முடித்து வேலை கிடைக்காததால் வருமானம் இன்றி தவித்து வந்தேன். அப்போது தான் இணைய தளம் வழியாக இந்தி பின்னணி பாடகர் அர்மான் மாலிக் குறித்து தெரிந்து கொண்டேன்.

அவரது பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கலாம் என திட்டம் தீட்டி அதன் படி முகநூல் பதிவு தொடங்கினேன். எனக்கு ஆங்கிலம் சரளமாக பேச வரும்.

இந்த முகநூலில் இணைந்த பெண்களிடம் நான் சரளமாக ஆங்கிலத்தில் பேசி அவர்களை எனது வலையில் விழ வைத்தேன்.

அழகான பெண்கள் புகைப்படத்தை மட்டும் தேர்ந்தெடுத்து அதனை மார்பிங் செய்து இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி பணம் பறித்தேன். 15 -க்கும் மேற்பட்ட பெண்களிடம் ரூ. 50 லட்சம் வரை பறித்துள்ளேன்.



கைது செய்யப்பட்ட மகேந்திர வர்மன் மீது தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு, கொலை மிரட்டல், பெண்களை களங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.