Run World Media: 05/30/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, May 30, 2019

வீட்டில் பதுக்கி வைத்திருந்தரூ.3 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்

காரைக்காலில் நாகை நெடுஞ்சாலையில் ஹைவே நகர் உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, உணவு கலப்பட தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நகராட்சி ஆணையர் சுபாஷ், உணவு கலப்பட தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு நேற்று திடீரென்று சென்று அதிரடி சோதனை செய்தனர்.

 அப்போது வீட்டின் வாசல், படுக்கை அறை, கழிவறையில் மூட்டை, மூட்டையாக போதை பொருள் (கூல் லிப், ஹான்ஸ், பிளாக் சிகரெட்) பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்தவரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில் சிங்காரவேலு என்பவருக்கு சொந்தமான வீட்டை நிரவி பகுதியை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் ரவி (வயது 47) என்பவர் வாடகைக்கு எடுத்து மனைவி, மகள், மாமியார் என குடும்பத்தோடு வசித்து வருவது தெரியவந்தது.
திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட போதை பொருட்களை, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், பொறையாறு, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வினியோகம் செய்து வந்ததும், அண்மை காலமாக அதிகாரிகள் கெடுபிடி காரணமாக போதை பொருளை வினியோகிக்காமல் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
வாடகை வீட்டில் மூட்டை மூட்டையாக போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதல்: மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க வந்த தந்தை பலி

சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சை தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்த குமார்(வயது 46) ஓட்டினார்.


 நேற்று அதிகாலை ஜெயங்கொண்டம்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் மாவட்டம் காரைக் குறிச்சி அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.


அந்த சாலையின் வளைவில் சரக்கு லாரி ஒன்று நின்று கொண்டிருந்ததை அரசு பஸ் டிரைவர் கவனிக்காததால் எதிர்பாராதவிதமாக பஸ், சரக்கு லாரியின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் ஒரு பகுதி முழுவதும் சேதம் அடைந்தது.


இதில் பஸ்சில் முன்புற சீட்டில் அமர்ந்து பயணம் செய்த சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்த ரகுபதி(67) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் பஸ்சில் இருந்த ரகுபதியின் மனைவி விஜய குமாரி(62), மகள் லாவண்யா(32), மூத்த மகளின் மகள் மவுலிகா(15), திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் ஹரிகரன்(12), குமரவேல் மகள் மகேஸ்வரி(22), வடுகநாதன் மகன் பாலாஜி(8), மகள் ஷாலினி (3), வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் சுப்பிரமணியன் மனைவி அமுதா (45), தஞ்சை வண்டிக்காரத்தெரு ரமேஷ் மனைவி ராஜேஸ்வரி(36), திருவையாறு செல்வராஜ் மகன் யுவராஜ் (34), கபிஸ்தலம் நடராஜ் (55), பாபநாசம் கணேசன் மகன் மாரிமுத்து (24), அரசு பஸ் கண்டக்டர் அய்யம்பேட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணன்(58) உள்பட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சுகளில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விஜயகுமாரி உள்பட 4 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


 பஸ் மோதியதில் சரக்கு லாரியின் டீசல் டேங்க் உடைந்து, அதிலிருந்து டீசல் வெளியேறியதால் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அதனை சரி செய்தனர்.

விபத்தில் பலியான ரகுபதிக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சாந்தி, 2-வது மகள் ரம்யா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இளைய மகள் லாவண்யா திருமணம் ஆகாதவர்.


 இவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சியை தஞ்சாவூரில் உள்ள 2-வது மகள் ரம்யா வீட்டில் நடத்த முடிவு செய்து இருந்தனர். அதற்காக ரகுபதி குடும்பத்துடன் புறப்பட்டு வந்தபோது விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சிதம்பரம் வய்யூர் பெரியத்தெருவை சேர்ந்த அரசன் மகன் சீனிவாசன் (35), அரசு பஸ் டிரைவர் குமார் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை - பினராயி விஜயன்

தேர்தல் தோல்வியால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லைஎன்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.

கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி பெற்றது. ஏனைய 19 தொகுதிகளையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தோல்விக்கு சபரிமலை பிரச்சினையே முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
 சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு தீவிரமாக அமல்படுத்தியது.

இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டத்தின் வெளிப்பாடுதான் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் கேரள சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றியும், சபரிமலை பிரச்சினை குறித்தும் முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு பெண்களுக்கான உரிமையை பெற்று தருவதில் ஒருபோதும் பின்வாங்காது.

 நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி வாய்ப்பை இழந்ததால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெறப் போவதில்லை. அரசு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது அரசின் முடிவல்ல. சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு. அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அந்த கடமையைதான் கேரள அரசு செய்தது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால் கோர்ட்டை அவமதித்த வழக்கை சந்திக்க நேரிடும்.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தோல்வியை சந்தித்ததை சிலர் கொண்டாடுகிறார்கள். அவர்கள் இப்போது வேண்டுமானால் சிரிக்கலாம். அந்த சிரிப்பு தற்காலிகமானதே. விரைவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மீண்டு எழும்.

பெண்களுக்காகவும், மக்களுக்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொடர்ந்து பாடுபடும்.

பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிப்பு- கைதான பட்டதாரி வாலிபர் குறித்து பரபரப்பு தகவல்

போலி பேஸ்புக் மூலம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறித்த பட்டதாரி வாலிஉளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் மகேந்திர வர்மன் (30). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

இதனால் விரக்தியில் இருந்த அவர் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என எண்ணினார். இதற்காக பிரபல இந்தி பின்னணி பாடகர் அர்மான் மாலிக் பெயரில் போலி முகநூல் தொடங்கினார்.

அவரது இசை ஆல்பங்கள் மற்றும் அவரது அழகான புகைப்படங்களை போலி முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.

இதற்கு நிறைய இளம் பெண்களிடம் இருந்து லைக் கிடைத்தது. அவர்களிடம் முகநூல் நண்பராக பழக வருமாறு மகேந்திர வர்மன் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பார்த்த இளம்பெண்கள் அர்மான் மாலிக் தான் அழைப்பு விடுக்கிறார் என கருதி முகநூல் நண்பர்களானார்கள்.

பின்னர் அந்த இளம்பெண்களின் செல்போன் எண்ணை பெற்று மகேந்திர வர்மன் வாட்ஸ்அப் மூலம் பழக தொடங்கினார். அப்போது இந்தி படத்தில் பாட வாய்ப்பு வாங்கி தருவதாகவும், படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் கூறினார்.

மேலும் தங்களது படத்தை அனுப்புமாறும் கூறினார். சினிமாவில் பாட வாய்ப்பு கிடைக்கும் என நம்பிய இளம்பெண்கள் தங்களது அழகிய புகைப்படங்களை அனுப்பி வைத்தனர்.

அதனை ஆபாசமாக மார்பிங் செய்து இளம்பெண்களை மகேந்திர வர்மன் மிரட்ட தொடங்கினார். குறிப்பிட்ட ஒரு தொகையை கேட்டு அதனை தராவிட்டால் ஆபாசமாக சித்தரித்த படத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்கள் பலர் மகேந்திர வர்மன் கேட்ட தொகையை அவர் அனுப்பிய வங்கி கணக்கில் செலுத்தினர்.

இது போன்று 15-க்கும் மேற்பட்ட இளம்பெண்களிடம் மகேந்திர வர்மன் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் பணம் பறித்தது தெரிய வந்தது.இவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.


இந்த நிலையில் கோவை சூலூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் மகேந்திர வர்மன் பணம் கேட்டுள்ளார். பணத்தை தராவிட்டால் மார்பிங் செய்த படத்தை முகநூலில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி இருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் தனது உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

இதனை தொடர்ந்து மகேந்திர வர்மனை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள். அந்த இளம்பெண்ணை மகேந்திர வர்மனிடம் நைசாக பேசி பணம் தருவதாக கூறி கோவைக்கு வருமாறு அழைப்பு விடுமாறு போலீசார் கூறினார்கள்.

அதன் படி அந்த இளம்பெண்ணும் பேசி மகேந்திர வர்மனை கோவை லட்சுமி மில் சிக்னல் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.


 இளம்பெண் அழைப்பு ஏற்று கோவை வந்த மகேந்திர வர்மனை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா தேவி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.கைதான மகேந்திர வர்மனிடம் கையடக்க கணினி ( டேப் )இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.


 அதை ஆய்வு செய்த போது அவருடன் தொடர்பு வைத்து இருந்த இளம்பெண்களின் விவரங்கள் இருந்தது.

மேலும் அழகான பெண்ணை ஆபாசமாக சித்தரித்து மார்பிங் செய்து வைக்கப்பட்டு இருந்த புகைப்படமும் இருந்தது. அதில் 15-க்கும் மேற்பட்ட பெண்களின் படம் இடம் பெற்றிருந்தது. கடந்த 3 ஆண்டுகளாக மகேந்திர வர்மன் பெண்களிடம் பேசி பணத்தை பறித்தது தெரிய வந்தது.

கையடக்க கணினியை தடய அறிவியல் சோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட மகேந்திர வர்மன் போலீசாரிடம் கூறியதாவது-

ஆசிரியர் பயிற்சி படித்து முடித்து வேலை கிடைக்காததால் வருமானம் இன்றி தவித்து வந்தேன். அப்போது தான் இணைய தளம் வழியாக இந்தி பின்னணி பாடகர் அர்மான் மாலிக் குறித்து தெரிந்து கொண்டேன்.

அவரது பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பெண்களை ஏமாற்றி பணம் பறிக்கலாம் என திட்டம் தீட்டி அதன் படி முகநூல் பதிவு தொடங்கினேன். எனக்கு ஆங்கிலம் சரளமாக பேச வரும்.

இந்த முகநூலில் இணைந்த பெண்களிடம் நான் சரளமாக ஆங்கிலத்தில் பேசி அவர்களை எனது வலையில் விழ வைத்தேன்.

அழகான பெண்கள் புகைப்படத்தை மட்டும் தேர்ந்தெடுத்து அதனை மார்பிங் செய்து இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி பணம் பறித்தேன். 15 -க்கும் மேற்பட்ட பெண்களிடம் ரூ. 50 லட்சம் வரை பறித்துள்ளேன்.கைது செய்யப்பட்ட மகேந்திர வர்மன் மீது தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு, கொலை மிரட்டல், பெண்களை களங்கப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காற்றை வைத்து குடிநீர் தயாரிக்கும் ரமேஷ்: சென்னையில் சாதனை.!

இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது, குறிப்பாக தமிழகத்தில் உள்ள சில பொறியாளர் தொடர்ந்து புதுப்புது சாதனங்களை மக்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கி  கொண்டே தான் இருக்கின்றனர்.


அதன்படி சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பொறியாளர் சுரேஷ் என்பவர் ஒரு புதிய முயற்சியை செயல்படுத்தி சாதனைப் படைத்துள்ளார். ஓய்வு பெற்ற பொறியாளர் சுரேஷை அனைவரும் சோலர் சுரேஷ் என்று அழைக்கின்றனர். 

ஏனென்றால் அவரது வீடு முழுவதும் சோலார் சிஸ்டத்தை பயன்படுத்தி தான் மினசாரத்தை பெற்று வருகிறார். முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பள்ளி புத்தகத்தில் படித்தது என்ன?
 பின்பு சுரேஷ் கூறியது என்னவென்றால் 25ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தினேன் அப்போது யாருக்கும் அதுதொடர்பாக பெரிய விழிப்புணர்வு இல்லை என்றும் பள்ளிப் புத்தகத்தில் படித்தது போல, கூழாங்கல், நிலக்கரி, மணல் கொண்டு தண்ணீரைச் சுத்திகரித்து பயன்படுத்துகிறேன் என்று தெரிவித்தார்.

நீரை பிரித்தெடுக்கும் கருவி 
குறிப்பாக மழைநீரை கிணற்றில் சேகரிக்கிறேன், இதனால் இன்று வரையிலும் எனது வீட்டில் தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை என்று அவர் கூறனார்.

 பின்பு அவர் ஆச்சர்யப்படும்படி ஒன்று கூறினார், அது என்னவென்றால் என்னிடம் போர்வெல்,கிணற்றில் தண்ணீர் உள்ளது, அத்துடன் காற்றிலிருந்து நீரை பிரித்தெடுக்கும் கருவியை செய்துள்ளேன்,அதிலும் தண்ணீர் இருக்கிறது என்று அவர் கூறினார்.

அசத்தலான மின்சாரம் உற்பத்தி

பொறுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கிறேன், அதன்மூலம் தற்போது 3கிலோ வாட் மின்சாரம் தயாரித்து வைத்துள்ளேன்.

 அதில் இரண்டு ஏசிகள்,வாஷிங் மிஷன், மிக்ஸி மோட்டார் பம்ப், மின் விசிறி, டிவி, மின் விளக்குகள், கம்ப்யூட்டர் என வீட்டில் உள்ள அனைத்து பொருட்களை பயன்படுத்துகின்றேன் என்றார்.

மாதம் செலவு என்ன தெரியுமா? 
இந்த சோலார் உபயோகிப்பதால் 8வருடங்களாக எங்கள் வீட்டில் தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்கு தட்டுபாடு இல்லை, இதற்கு 2மாதத்திற்கு ரூ.500தான் செலவாகிறது என்று ரமேஷ் கூறினார்.

Read more at: https://tamil.gizbot.com/social-media/chennai-engineer-created-a-super-machine-that-can-create-drinking-water-from-air/articlecontent-pf157740-022006.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include

நீட் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) எழுதியவர்கள், தங்களது ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தவறான சுயவிவரங்களைக் குறிப்பிட்டிருந்தால் அவற்றை மே 31-ஆம் தேதிக்குள் திருத்திக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெயர், தாயார் பெயர், பிறந்த தேதி, பாலினம், பிரிவு உள்ளிட்டவற்றில் திருத்தம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.


 வேறு தகவல்களை மாற்ற முடியாது என தெரிவித்துள்ளது.


 நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5-ஆம் தேதியன்று வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக சுயவிவரங்களைச் சரிபார்த்து திருத்திக் கொள்வதற்காக இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக என்டிஏ விளக்கமளித்துள்ளது.


Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்