Run World Media: 06/15/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, June 15, 2019

விடிய விடிய சாலையிலேயே படுத்துறங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.. ஏன் தெரியுமா?

கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாஜகவினர் கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு முழுவதும் சாலையில் படுத்துறங்கி போராட்டத்தில்
ஈடுபட்டனர்.

 கர்நாடகாவில் கடந்த நடைபெற்ற தேர்தலில் பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதனால் எடியூரப்பா அம்மாநில முதல்வராக பதவியேற்றார்.

 ஆனால் குறைந்த இடங்களை பெற்ற காங்கிரஸ் கட்சியும் மஜதவும் கூட்டணி சேர்ந்ததால் கர்நாடகாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த 17வது மக்களவை தேர்தல்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது.


பாஜக போராட்டம்
 இதையடுத்து அங்கு ஆட்சியில் உள்ள மஜத - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியின் திட்டங்களுக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.


நிலம் விற்க எதிர்ப்பு
 கர்நாடக மாநில அரசு சந்தூர் என்ற இடத்தில் 3 ஆயிரத்து 600 ஏக்கர் நிலத்தை ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய நடவடிக்கைளை மேற்கொண்டது. இதில் முறைகேடு இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.


பெங்களூருவில் போராட்டம்
இதுதொடர்பாக பெங்களூருவில் இரவு - பகல் என போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பெங்களூருவில் பாஜகவினர் நேற்று போராட்டத்தை தொடங்கினர்.


சாலையில் படுத்து தூங்கிய எடியூரப்பா
இதற்காக சாலையில் அமைக்கப்பட்ட பந்தலில் பகல் நேரத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து இரவு நேரத்தில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த அந்தப் பந்தலிலேயே எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினர் படுத்து உறங்கி போராட்டத்தை தொடர்ந்தனர். 

நவீன டாட்டூக்களும் - ஏற்படும் விளைவுகளும்

உடலை சுவராக்கி மனதிற்கு பிடித்த சித்திரங்களை வண்ணங்களோடு பதியும் ‘டாட்டூஸ்’ இப்போது ஆண், பெண்கள் இடையே ரொம்பவே பிரபலம். டாட்டூக்கள் பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

டாட்டூவில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று நிரந்தரமானது. இன்னொன்று தற்காலிகமானது. டெம்ரவரி டாட்டூஸ் ஒரு வாரத்தில் அழிந்துவிடும். பெர்மனென்ட் டாட்டூஸ் என்பது நம் வாழ்நாள் முழுவதும் கூடவே வரும். உடல் புதைக்கப்பட்டு மக்கினாலும் நம் எலும்பில் டாட்டூவின் பதிவு இருப்பதற்கான ஆதாரங்களும் உண்டு. முன்பு பச்சை குத்துவதுபோல ஒரே நிறம் இப்போது இல்லை. டெக்னாலஜி ரொம்பவே இப்போது வளர்ந்துவிட்டது. எலக்ட்ரானிக் மற்றும் ஸ்மார்ட் மை டெக்னாலஜி தொழில்நுட்ப உதவியோடு காட்ரிஜ் ஊசி போன்ற கருவியில் ரசாயன மை நிரப்பி, மின்சாரம் மூலம் சூடேற்றி அப்படியே உடலில் விரும்பிய இடத்தில் வரைவதே டாட்டூஸ்.


 இதைப் பல வடிவங்களில் பல  வண்ணங்களில் மனதிற்கு பிடித்த மாதிரி போட்டுக்கொள்ளலாம். ஆனால் என்ன, நாம் போட்டுக்கொள்வது பெர்மனென்ட் டாட்டூ என முடிவானால், நிறைய யோசித்து முடிவு செய்துவிட்டு வாருங்கள்.


ஏனெனில் நிரந்தர டாட்டூவை அழிக்க வழியே இல்லை. அது வாழ்நாள் அடையாளம். நிழலாய்த் தொடரும்.தற்காலிக டாட்டூஸால் வலிகள் ஏற்படுவதில்லை.தற்காலிக டாட்டூஸ்கள் அழகுக்காக வண்ணக் கலவைகளால் வரையப்படுபவை. அல்லது ஸ்டிக்கர் வடிவில் நமது சருமத்தின் மேலே ஒட்டிக்கொள்பவை. இவை நிரந்தரமற்றது.


தானாய் அழியத் தொடங்கிவிடும். சிலர் காதலில் இருக்கும்போது அந்தக்  காதல் நிலைக்குமோ நிலைக்காதோ, அவசரப்பட்டு, அன்பின் வெளிப்பாடாய் தங்கள் இதயத்திலும், மறைவான இடங்களிலும், சிலர்  வெளியில் தெரிய கைகளிலும் பிடித்தமானவர்களின் பெயரை டாட்டூவாகக் குத்திக்கொள்வார்கள்.


காதல் கைகூடாத நிலையில், வேறொருவருடன் திருமணம் முடிவான நிலையில், போட்டுக்கொண்ட நிரந்தர டாட்டூவை அழிக்கச்சொல்லி வருவார்கள்.

அப்போது லேசர் சிகிச்சை மூலம் டாட்டூவை அகற்ற முடியும். அதுவும் முழுமையாக அகற்ற முடியும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. சில அடர் வண்ண நிற டாட்டூவை நீக்க பல முறை லேசர் செய்ய வேண்டிய நிலையும் ஏற்படும்.


ஏனெனில் வண்ணங்களில் நிறைய ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால், அழிப்பது கடினமாக இருக்கும். டாட்டூவை நீக்கும்போது உண்டாகும் வலி போடும்போது இருக்கும் வலியைவிட பன்மடங்காக இருக்கும். தொழில் முறையில் இதற்கு ஒரு வழிதான் உண்டு.


அதாவது ஏற்கனவே போடப்பட்ட டாட்டூவை மறைத்து அதன் மேல் வேறொரு வடிவத்தைக் கொண்டு வருவது. ஆனால் அது இன்னும் கூடுதலான வலியையும், செலவையும், நேர விரயத்தையும் ஏற்படுத்தும்.

விலை மலிவான தரமற்ற வண்ணங்கள், காயில்கள், ஊசிகளைப் பயன்படுத்துவது, ஒருவருக்குப் பயன்படுத்திய அசுத்தமான ஊசியை மற்றொருவருக்குப் பயன்படுத்துவது போன்ற செயல்களால் நோய் தொற்று ஏற்படலாம். சரியான  பயிற்சி இன்றி டாட்டூஸ் போடும்போது டாட்டூஸ் சருமத்தோடு ஒட்டிய தோற்றத்தை தராமல், தோலின்மேல் துருத்திக்கொண்டு நிற்கும்.

டாட்டூஸின் விளைவுகள்

* டாட்டூஸ் நிரந்தரமாகப் போடும்போது கட்டாயம் வலியும், போட்ட இடத்தில் அரிப்பும் இருக்கும். வலி நீங்க சிலருக்கு பத்து நாட்களும் சிலருக்கு அதற்கு மேலும் ஆகலாம்.

* சிலருக்கு வண்ணங்களில் உள்ள ரசாயனங்களால் ஒவ்வாமை ஏற்படும். விளைவு சருமப் பாதிப்பு உண்டாகலாம்.

* உடல்நலம் பாதிக்கவும் வாய்ப்புண்டு.

* டாட்டூ ஸ்டிக்கரில் உள்ள பசையும் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும்.

* மருதாணி இடுவதுகூட தற்காலிக டாட்டூஸ்தான். வண்ணம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்  மருதாணியில் பி.பி.டி. என்ற ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது சருமத்தில்  ஒவ்வாமையை உண்டாக்கும்.


அநியாயம்... கணவர் கண் முன்பாக மனைவியைத் தாக்கி தாலி உள்பட 12 பவுன் நகை பறிப்பு

புதுச்சேரியில் கணவர் கண் முன்பாகவே 3 பேர் கொண்ட கும்பல் மனைவியின் தாலிக் கொடி உள்பட 12 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்களை அதிர வைத்துள்ளன. புதுச்சேரி முல்லை நகரை சேர்ந்தவர் விநாயகம். பைனாசிரியர் தொழில் செய்து வரும் இவர் தனது மனைவி பிரேமாவுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு இரவில் வீடுவெளியே
திரும்பினார்.
      

அப்போது வீட்டில் அருகே மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த விநாயகம் அவர்களைக் கவனித்தபடி நின்றிருந்தார். அப்போது அந்த 3 பேரில் இருவர் பைக்கிலேயே இருக்க ஒருவர் மட்டும் இறங்கி விநாயகத்திடம் நெருங்கினார். 

 பின்னர் திடீரென பிரேமாவின் கழுத்தில் கிடந்த நகைகளை அப்படியே கொத்தாகப் பிடித்து இழுத்தார். அதிர்ச்சி அடைந்த பிரேமா தனது கழுத்தில் கிடந்த தாலியை இறுகிப் பற்றியபடி கூச்சலிட்டார். அலறினார்.

தாயின் அலறல் சத்தம் கேட்டு பிரேமாவின் மகன் வீட்டிற்கு வெளியே ஓடி வந்தார். விநாயகமும் அவரது மகனும் திருடர்களிடம் மோதினர். ஆனால் 3 பேரும் சேர்ந்து விநாயகம், மகனை கடுமையாகத் தாக்கி விட்டு நகைகளுடன் ஓடி விட்டனர்.

 12 பவுன் நகைகளும் பறி போய் விட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மிகத் துணிகரமாக திருடர்கள் செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தற்போது இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் திருடர்கள் தாக்குவதும், அவர்களுடன் விநாயகம், மகன் போராடுவதும் திருடர்கள் தப்பி ஓடுவதும் பதிவாகியுள்ளது.


சென்னையில் மூடப்படும் ஹோட்டல்கள்.. அய்யோ சாப்பாட்டுக்கு என்ன செய்வோம்? பீதியில் இளைஞர்கள்!

சென்னையில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஹோட்டல்கள் தொடர்ந்து மூடப்படுவதால் இளைஞர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து ஒன் இந்தியா தமிழ் செய்தித்தளம் தொடர்ந்து செய்திகளை பதிவிட்டு வருகிறது. 


 தண்ணீர் இன்றி தமிழக மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது. சென்னையில் கோடை நாட்களில் தண்ணீர் பற்றாக்குறை என்பது வாடிக்கையான ஒன்றுதான். இருந்தாலும் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் தற்போது கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது.


குடங்களுடன் அலையும் மக்கள்
 சென்னையின் எந்த பகுதிக்கு எப்போது சென்றாலும் தெருக்கு தெரு மக்கள் கைகளில் குடங்களுடன் இருப்பதை பார்க்கமுடிகிறது. இதேபோல் ஆண்களும் தங்களின் இருசக்கர வாகனங்களில் குடத்தை கட்டி தொங்கவிட்டப்படி செல்வதை காணமுடிகிறது.


குதிரை கொம்பாகிவிட்டது 
ஒரு குடும்பத்திற்கு சமைக்க, பாத்திரம் கழுவ என அத்தியாவசிய தேவைக்கான தண்ணீர் கிடைப்பதே குதிரை கொம்பாகிவிட்டது. இந்நிலையில் ஹோட்டல்களின் நிலைமையை சொல்லி தெரிய வேண்டியதில்லை.


விலை கொடுத்து வாங்கும் நிலை
சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டுவரும் ஆனந்தா ஹோட்டலில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் மதிய உணவை நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளனர். குடிநீர் முதல் பாத்திரங்களை கழுவுவது வரை அனைத்திற்கும் ஹோட்டல் நிர்வாகம் தண்ணீரை லாரிகளில் விலை கொடுத்தே வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த ஹோட்டலின் ஊழியர் நாராயணன் கூறியுள்ளார்.


ஹோட்டல் ஊழியர் நாராயணன் 
தற்போது தனியார் லாரிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் இன்றி மதிய சாப்பாடு தயாரிக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் குடிநீருக்கு கூட காசு கொடுத்து தண்ணீர் கேன்களை வாங்கி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

 தண்ணீர் பற்றாக்குறையால் கேரியர் சாப்பாட்டு முறையை நிறுத்தியிருப்பதாக கூறிய அவர் தண்ணீர் பிரச்சனையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


இளைஞர் கருத்து 
 இதனிடையே ஹோட்டலுக்கு சாப்பிட வந்த இளைஞர் ஒருவர் தண்ணீர் பிரச்சனையால் மதிய சாப்பாடு நிறுத்தப்படுவதாக வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். 

அலுவலகம் அருகில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டால் சாப்பாட்டுக்கு சிரமம் ஏற்படும் என கூறியுள்ள அவர் அரசு உடனடியாக தலையிட்டு ஹோட்டல்களின் பிரச்சனையை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


பொதுமக்கள் கருத்து
இதேபோல் அப்பகுதியில் உள்ள திருவள்ளூர் சாலை பகுதி மக்களும் தண்ணீர் இன்றி அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஒரு நாள் விட்டு ஒருநாள் லாரிகளில் வழங்கப்பட்ட தண்ணீர் தற்போது 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுவதாக கூறினார். பொதுமக்கள் ஓரளவுக்கு சமாளித்தாலும் இந்த தண்ணீரை வைத்து உணவகங்கள் சமாளிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

எனக்கு கிடைக்காத நீ வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது - தங்கை முறை பெண்ணை கொன்ற கொடூரன்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார் ஒரு இளைஞர். எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற மனநிலையே இதுபோன்ற ஒருதலைக்காதல் சம்பவங்கள் கொலையில் முடிய காரணமாக அமைகின்றன. 


கொலையாளியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்ததில் பலத்த காயங்களுடன் அவரும் சிகிச்சை பெற்று வருகிறார். ஒருதலைக்காதலுக்கு பலியான பெண்ணின் பெயர் மலர்விழி மீரா என்பதாகும். திருச்சி தென்னூர் அண்ணாநகர் புதுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் என்பவரின் மகளாவார். 

இவர் திருச்சியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். அய்யப்பன் புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர். தற்போது கட்சியில் தேர்தல் பணிக்கு மாநில பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார்.

 பாலமுரளி கார்த்தி என்பவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னையில் வசித்து வரும் அவர் தாயைப் பார்ப்பதற்காக திருச்சிக்கு வருவராம். அப்போது மீராவின் மேல் காதல் ஏற்பட்டுள்ளது. முரளியின் தங்கை முறைதான் மீரா.


கத்திக்குத்து 
மலர்விழி மீரா நேற்று மாலை கல்லூரி முடிந்து பஸ்சில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள தண்ணீர்தொட்டி அருகே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் மலர்விழி மீராவிடம் மறித்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் மலர்விழி மீராவை சரமாரியாக குத்தினார்.

கத்திக்குத்தில் மரணம்
 கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த மீரா. ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து கீழே சாய்ந்தார். இதனை கண்டு அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்து ஓடி சென்று மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பொதுமக்கள் அடி
கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய அந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அந்த வாலிபரும் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த தில்லை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அரசு மருத்துவமனையிலும் அந்த வாலிபரை விடாமல் பொதுமக்கள் துரத்தி சென்று தாக்கினர். இதில் அவர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார.

ஒருதலைக்காதல்
விசாரணையில் கத்தியால் குத்திய வாலிபர், அதே பகுதியை சேர்ந்த பாலமுரளி என்பதும், கொலையான மலர்விழி மீராவுக்கு அண்ணன் முறை உறவினர் என்பதும், முரளிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. திருமணத்திற்கு முன்பிருந்தே மலர் விழிமீராவை ஒருதலையாக காதலித்து வந்தாரம் முரளி, சகோதரி முறையான தன்னை காதலிப்பது தவறு என்று அவர் கண்டித்துள்ளார். திருமணமான பின்னரும் முரளியின் தொந்தரவு அதிகரித்தது. ஆனால் மலர்விழி மீராவோ மறுப்பு தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

காமவெறியில் கொலை 
 சென்னையில் வேலை பார்த்து வரும் முரளிக்கு மலர்விழி மீரா மீதான மோகம் அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. ஆனாலும் மீரா அதை சட்டை செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த முரளி, எனக்கு கிடைக்காத நீ வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று மீராவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். இந்த கொலை சம்பவம் குறித்து தில்லை நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

ஒருதலைக்காதல் கொலைகள்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாநகர போலீஸ் துணை கமிஷனர் நிஷா மற்றும், உதவி கமிஷனர்கள் ராமச்சந்திரன் , மணிகண்டன் மற்றும் போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலையான மாணவியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

போலீஸ் விசாரணை
காம வெறி தலைக்கு ஏறினால் தங்கை முறை பெண் கூட கண்ணுக்கு தெரியாமல் போய்விடுமா என்ன. கலி முத்தினால் பச்சிளம் பிஞ்சுகள் கூட காமவெறியன்களிடம் இருந்து தப்ப முடிவதில்லை. மகளை கூட பலாத்காரம் செய்யும் அப்பாக்கள் இருக்கின்றனர். எங்களுக்கு எங்குதான் பாதுகாப்பு கிடைக்குமே என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கதறி வருகின்றனர். திருச்சியில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பயங்கரம் காதலியை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டிய காதலன்: தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி | விசாரணையில் திடீர் திருப்பம்

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை ரயில் நிலையத்தில் ஓடஓட காதலன் அரிவாளால் வெட்டிய சம்பவம் சேத்துப்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. காதலனும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் அந்த ரயில் நிலையம் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் நேற்று இரவு 7.50 மணிக்கு இளம் பெண் ஒருவர் மின்சார ரயிலில் ஏறுவதற்காக சேத்துப்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்தார். 

அப்போது வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து இளம் பெண்ணை வழிமறித்து பேச முயன்றார். அந்த இளம் பெண் அந்த வாலிபரை திட்டியபடி ரயில் நிலையத்திற்குள் வேகமாக வந்து கொண்டிருந்தார். அப்போதும் வாலிபர் விடாமல் இளம் பெண்ணின் கையை பிடித்து நிற்கும்படி வாக்குவாதம் செய்தார்.


ஒரு கட்டத்தில் அந்த இளம் பெண் வழிமறித்த வாலிபரை கடுமையாக திட்டியபடி மின்சார ரயில் ஏற நடைபாதைக்கு வந்தார். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். இளம்பெண் பயணிகள் கூட்டத்தில் வரும்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த வாலிபர் தான் கொண்டு வந்த அரிவாளை எடுத்து இளம் பெண்ணிண் இடது பக்க தாடை மற்றும் இடது பக்க கையில் ஓங்கி வெட்டினார். 

இதை சற்றும் எதிர்பார்க்காத இளம் பெண் ரத்த வெள்ளத்தில் அலறியபடி ஓட முயன்றார். அப்போதும் அந்த வாலிபர் ஆத்திரம் தீராமல், இளம் பெண்ணின் முகத்தில் ஓங்கி வெட்டினார். இதை நேரில் பார்த்த பயணிகள் நாலாபுறமும் சிதறி அங்கும் இங்கும் ஓடினர். இதனால் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

பயணிகள் அலறி ஓடுவதை பார்த்து அச்சமடைந்த அந்த வாலிபர், எதிரே வந்த மின்சார ரயில் முன்பு பாய்ந்துதற்கொலைக்கு முயன்றார். அவர் குதிப்பதற்கு முன்பு ரயில் சென்றதால் தலையில் மட்டும் காயங்களுடன் நடைபாதையிலேயே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அரிவாளால் வெட்டுப்பட்ட இளம்பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.


உடனே அருகில் இருந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். எழும்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கிடையே பொதுமக்கள் அளித்த தகவலின்படி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய இளம் பெண்ணை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
அதேபோல், இளம் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரையும் ரயில்வே போலீசார் மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


சம்பவம் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வெட்டப்பட்டவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வீரமணி என்பவரின் மகள் தேன்மொழி(25). 
பட்டப்படிப்பு முடிந்த அவர் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஈகா திரையரங்கம் எதிரே உள்ள தமிழ்நாடு கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இவர் எழும்பூர் வீராசாமி தெருவில் உள்ள பிரபல பெண்கள் விடுதியில் தங்கி வேலை செய்து வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. 
அரிவாளால் வெட்டிய வாலிபர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுரேந்தர்(26). ஒரே ஊர் என்பதால் தேன்மொழியுடன் சுரேந்தர் நட்பு முறையில் பழகி வந்துள்ளார். பின்னர் நாளடைவில் தேன்மொழி மீது சுரேந்தருக்கு காதல் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் தேன்மொழியிடம் கூறியுள்ளார். முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் சுரேந்தர் காதலை அவர் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.


இருவரின் காதல் விவகாரம் குறித்து தேன்மொழியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் தேன்மொழியை அவரது ெபற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. அதேநேரம் தேன்மொழியை பார்க்க அடிக்கடி சுரேந்தர் அவர் வேலை செய்யும் இடத்திற்கு வந்துள்ளார். இதனால் தேன்மொழியுடன் வேலை செய்யும் ஊழியர்கள் சுரேந்தரை கண்டித்துள்ளனர். காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வந்ததால் ஒரு கட்டத்தில் தேன்மொழி தனது காதலனிடம் இருந்து விலக ஆரம்பித்தார். 
சுரேந்தர் பல முறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. இதனால் தேன்மொழி மீது சுரேந்தர் கடும் ஆத்திரத்தில் இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தேன்மொழியை சுரேந்தர் சந்தித்து பேசியுள்ளார். அப்போது தேன்மொழி உனக்கும் எனக்கும் சரிப்பட்டு வராது என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் சுரேந்தர், தேன்மொழியை கொலை செய்ய முடிவு செய்தார்.

தேன்மொழி நேற்று இரவு பணி முடிந்து பெண்கள் விடுதிக்கு செல்ல மின்சார ரயிலில் ஏற வந்த போது சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதைப் போல சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html

http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்