வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Police Harassment
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Police Harassment. Show all posts
Showing posts with label Police Harassment. Show all posts

Thursday, June 08, 2023

ஆங்கிலத்தில் அளிக்கும் புகாரை பெற மறுப்பு..! கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீசார் அடாவடி.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த சில காவல் நிலையங்களையும், சென்னை மாநகர காவல் ஆணையரக காவல் நிலையங்கள் சிலவற்றையும் இணைத்து, தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் உருவாக்கப்பட்டது. 

கூடுவாஞ்சேரி சரகத்தில், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், பீர்க்கன்காரணை, ஓட்டேரி ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, போக்கு வரத்து புலனாய்வு பிரிவு, மகளிர் காவல் நிலையம் என, தனித்தனி காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டன.

இதில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம், முதலில் சிட்லப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக, கூடுவாஞ்சேரி சரகத்திற்கு பொத்தேரி ஜி.எஸ்.டி. , சாலையோரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. 

மேற்கண்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எந்த விபத்து ஏற்பட்டாலும், இவர்களே விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த காவல் நிலையத்தில், விபத்து தொடர்பான புகார்களை தமிழில் மட்டுமே அளிக்க வேண்டும் எனவும், ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் புகார் அளித்தால், போலீசார் வாங்குவதில்லை எனவும், மக்கள் கூறுகின்றனர். இது குறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது: புறநகர் பகுதிகளான மறைமலை நகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில், ஐ. டி. , நிறுவனங்களில் பணிபுரிவோர், கல்லுாரிகளில் பயில்வோர் என, வெளிமாநிலங்களை சேர்ந்தோர் பரவலாக உள்ளனர். அதே போல, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பல மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வந்து செல்கின்றன. 

இங்கு, விபத்தில் சிக்கும் வாகனங்கள் தொடர்பாக புகார் அளிப்போர், தங்களின் மொழிகள் அல்லது ஆங்கிலத்தில் புகார் அளித்தால், காவல் நிலையத்தில் இருப்போர், புகாரை தமிழில் எழுதி தர வேண்டும் என கூறி, திருப்பி அனுப்புகின்றனர். இதனால், தமிழ் தெரியாதோர் அவதிப்படுகின்றனர். 

பிறர் உதவியுடன் தமிழில் புகார் எழுதி கொடுக்கும்போது, அவர்களுக்கு புகாரில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இந்த காவல் நிலையத்தில், ஆங்கிலத்தில் அளிக்கப்படும் புகார்களையும் பெற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


செங்கல்பட்டு மாவட்டத்தின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, December 07, 2021

செங்கல்பட்டில் அரசு பேருந்து நடத்துனரை காவலர் அடித்ததால் பரபரப்பு | பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

செங்கல்பட்டு பேருந்து நிலையத்திருந்து மகாபலிபுரம் நோக்கி செல்லும் 508 பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வரும் முருகேசன் என்பவர் இன்று காலை 10.30 மணியளவில் பேருந்தில் உள்ள பயனிகளிடம் பயனச்சீட்டு அளித்த போது அதில் சீருடை அணியாமல் அமர்ந்திருந்த அரிதாஸ் என்னும் ஆயுதப்படை காவலரிடம் பயனச்சீட்டு வாங்கும் படி கேட்டுள்ளார். 


இதற்கு அரிதாஸ் தான் போலீஸ் என்றும் பயனச்சீட்டு எடுக்க மாட்டேன் எனவும் மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து வாரண்ட் அல்லது தங்களின் காவலர் அடையாள அட்டையை காண்பிக்கும் படி நடத்துனர் முருகேசன் காவலரிடம் கேட்டதற்கு, காவலர் அரிதாஸ் தன்னிடம் வாரண்ட் ஏதும் இல்லையென்றும் மேலும் அடையாள அட்டையை காண்பிக்க மறுத்த நிலையில் நடத்துனர் முருகேசன் காவலரை பேருந்தில் இருந்து கீழே இறக்கும் படி கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் காவலர் அரிதஸ் நடத்துனர் முருகேசனை பேருந்து பயனிகள் முன்னிலையில் கன்னத்திலும், தலையிலும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து நடத்துனர் முருகேசன் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள காவலர் உதவி நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


இந்த நிலையில் தகவல் அறிந்த அரசு போக்குவரத்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர் பேருந்துகளை இயக்க மறுத்து செங்கல்பட்டு பேருந்து நிலையத்தின் எதிரேயுள்ள ஜி எஸ் டி சாலையின் குறுக்கே பேருந்துகளை நிறுத்தி பேராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ் பச்சாரே சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பேருந்துகள் இயக்கினர். 


இதனால் செங்கல்பட்டு ஜி எஸ் டி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


சமீபத்திய செய்திகள் 

Sunday, June 20, 2021

வேலியே பயிரை மேய்ந்தது என்பது இதுதான் | Thiruppur Police Cheating | Vil Ambu News

திருப்பூரில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கைதியின் டெபிட் கார்டு மூலம் 4 லட்ச ரூபாய் பணத்தை திருடிய காவலரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 


 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பகுதி சின்னகானூர். இப்பகுதியில் உள்ள இருவேறு இரும்பு உருக்காலைகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காவலரை தாக்கி விட்டு இரும்பு மற்றும் செம்பு திருடு போனது. இது தொடர்பாக அந்த உருக்காலைகளின் உரிமையாளர்கள் சேவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் இரும்பு திருடிய 8 பேரை சேவூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

 

அதில் திருடப்பட்ட இரும்பை வாங்கிய கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த இரும்பு வியாபாரி ஆனந்த் என்பவரும் அடக்கம். ஆனந்த் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே ஆனந்த் சிறை செல்வதற்கு முன்பாக அவரது ஏ.டி.எம் டெபிட் கார்டு மற்றும் பாஸ்வோர்டு ஆகியவற்றை சேவூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய ரஞ்சித் என்பவர் மிரட்டி வாங்கியுள்ளார். பின்னர் அதனைப் பயன்படுத்தி ஆனந்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 4 லட்ச ரூபாய் பணத்தை ரஞ்சித் எடுத்துள்ளார்.

 

இதனிடையே அண்மையில் ஆனந்த் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆனந்த் தனது வங்கிக் கணக்கை சரி பார்த்துள்ளார். அப்போது தனது வங்கிக் கணக்கில் இருந்த 4 லட்ச ரூபாய் பணம் குறைந்திருப்பது தெரியவந்தது. அதுகுறித்து வங்கியில் விசாரித்த போது தனது டெபிட் கார்டை பயன்படுத்தி தான் பணம் எடுத்திருப்பதும், தன்னை மிரட்டிப் பெற்ற ஏடிஎம் டெபிட் கார்டு மூலம் காவலர் ரஞ்சித் 4 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து இருப்பதும் தெரியவந்தது. காவலரே பணத்தை திருடியிருப்பதை அறிந்து, ஆனந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

இதையடுத்து பணத்தை திருடிய காவலர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆனந்த் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. சேவூர் காவல் நிலையத்தில் இருந்து ரஞ்சித், பணியிட மாறுதலில் அவிநாசி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் விசாரணையில் காவலர் ரஞ்சித் பணத்தை எடுத்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவலர் ரஞ்சித்தினை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செஷாங் சிங் உத்தரவிட்டுள்ளார். திருடனிடம் காவலரே திருடி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Monday, July 13, 2020

செத்தா சாகட்டும்..! போலீஸின் அலட்சிய பேச்சு | Police Careless speech | Vil Ambu News

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் புதுமனை பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் முகிலன் (27), ஊரடங்கை மீறி நேற்று வெளியில் வந்துள்ளார். 


போலீஸார் அவரது பைக்கைப் பறிமுதல் செய்ததால், ஆத்திரமடைந்த முகிலன் அருகில் உள்ள அக்காள் வீட்டிற்குச் சென்று மண்ணெண்ணெய் கேனை தூக்கிக் கொண்டுவந்துள்ளார்.


`போலீஸ்தான் என் சாவுக்கு காரணம்' என்று கூறி தேசிய நெடுஞ்சாலையில் நின்றபடி தீக்குளித்தார். பலத்த தீக்காயமடைந்த முகிலன் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமே சிகிச்சைக்கான செலவுகளை ஏற்க முன்வந்துள்ளது.


சம்பவம் குறித்து திருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமார், ``தீக்குளித்த இளைஞர் வந்துசெல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.

சம்பவ இடத்தில் 5 போலீஸார் இருந்துள்ளனர். போலீஸ் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார். அட்ரஸும் கொடுத்திருக்கிறார். அதன் பின்னரே பக்கத்தில் உள்ள வீட்டுக்குப் போய் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு வந்துதான் தீக்குளித்தார். 

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அந்த இளைஞரே மது போதையில் இருப்பதாகக் கூறினார். சி.எம்.சி மருத்துவர்களும் அவர் மது போதையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள்'' என்றார்.

இதனிடையே, சம்பவத்தின்போது அருகில் நின்று வேடிக்கை பார்த்ததாகக் கூறப்படும் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தைச் சேர்ந்த 5 போலீஸாரும், ஊர்க்காவல் படையினரும் திருப்பத்தூர் நகரக் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் நடந்து கொண்ட விதம் பொதுமக்களைத் கொந்தளிக்கவும் செய்திருக்கிறது.
``முகிலன் மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றும்போது அருகில் இருந்த போலீஸார் தடுக்க முன்வராதது ஏன்? கொளுத்திக் கொண்ட பிறகும் தீயை அணைத்து அவரைக் காப்பாற்றவும் முயற்சி செய்யவில்லை. தீயை அணைக்க வந்த மக்களிடமும் அச்சுறுத்தும் வகையில் பேசியிருக்கிறார்கள் காக்கிகள். `செத்தா சாகட்டும்' என்ற வார்த்தையை விட்டிருக்கிறார் சந்திரசேகர் என்ற காவலர்.

`மது போதையில் இருந்தார்' என்றால் அதுதொடர்பாக ஏன் வழக்கு பதியவில்லை? சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்பலன்ஸ் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. தனியார் ஆம்புலன்ஸ் மூலமாகத்தான் முகிலனை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்துதான் சி.எம்.சி-க்கு மாற்றப்பட்டார். தீக்குளித்த இளைஞர் முகிலனுக்கு போலீஸாரால் வேறு ஏதோ பிரச்னை நடந்திருக்கிறது. 

இந்த விவகாரத்தில் எஸ்.பி-யும் பொய் சொல்கிறார். `தற்செயலாக நடந்த விபத்து' என்று திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இது, மிகவும் கண்டிக்கத்தக்கது'' என்று கொந்தளிக்கிறார்கள், சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள்.

இந்த சம்பவத்தில், புலன் விசாரணை அதிகாரியாக மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி பிரவீன்குமாரை நியமித்திருக்கிறார் எஸ்.பி விஜயகுமார். விசாரணை நகர்வுகளை அறிய டி.எஸ்.பி பிரவீன்குமாரை போனில் தொடர்புகொண்டோம். போனை எடுத்துப் பேசிய அவர், `கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்' என்றுகூறி அழைப்பைத் துண்டித்தார்.

Thursday, June 20, 2019

பொறுக்கி போலீஸ் | ரவுடி போலீஸ் | சின்னசேலம் SI | Sinnasalem rowdy SI Shanmugam

இவரை பணிநீக்கம் செய்யும்வரை ஷேர் செய்யுங்கள்
Click to watch video



Monday, May 06, 2019

எலப்பாக்கத்தில் தலைகனம் ஏறி சர்ச்சையாக பேசிய ஊர்க்காவல் படை காவலர் - Police Unwanted Talk in Elapakkam


[இந்தப் பக்கத்தில் உள்ள அனைத்து வீடியோக்களையும் மறக்காமல் பாருங்கள்]











காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுதான் செண்டிவாக்கம் என்னும் கிராமம்

காவல்துறையினர் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வண்டிகளின் சாவிகளை பிடுங்கலாமா ? என்ற கேள்விக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விளக்...

திண்டிவனத்தில் போலீஸ் அராஜகம் - Thindivanam police harassment



Sunday, May 05, 2019

எலப்பாக்கத்தில் போலீஸ் அராஜகம் - வீடியோ உள்ளே Police Harassment in Elapakkam Palkavadi Festival



[இந்தப் பக்கத்தில் உள்ள அனைத்து வீடியோக்களையும் மறக்காமல் பாருங்கள்]
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஒரத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எலப்பாக்கம் கிராமத்தில் பால் காவடி திருவிழா நடைபெற்று வருகிறது.


பொதுமக்கள் அமைதியாக இருந்த போதிலும் போலீசார்கள் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் தேவையில்லாமல் பிரச்சனைகளை உண்டாக்கி அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.


கடந்த ஆண்டு அனைத்து இரு சக்கர வாகனங்களும் ஓரமாக நிறுத்தப்பட்டபோதிலும் வாகனங்களை கீழே தள்ளி காற்றை பிடுங்கி விட்டு தேவையில்லாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர். கிராமப்புற பகுதியில் இரவு நேரத்தில் வாகனங்களில் வீடு திரும்பும் நினைக்கும் பொது மக்களின் நிலைமை மிகவும் வருந்தத்தக்கது. இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடலாம் என ஏதாவது சட்டம் உள்ளதா..?


இந்த ஆண்டு பின்புறமாக தனியாக நிற்கும் பொதுமக்களையும் தேவையில்லாமல்  அடித்து துரத்துவது மட்டுமல்லாமல் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி பேசுகின்றனர்.


முறையாக ஞாயத்தை கேட்டாலும் "இன்னைக்கு அடங்க மாட்ட நாளைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு தானே வந்து நிற்கனும், அந்த சர்டிபிகேட் வேணும், இந்த சர்டிபிகேட் வேணும்னு" என மிரட்டி  தகாத வார்த்தைகளால் திட்டி பேசுகின்றனர்.




இந்த திருவிழாவானது ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் மிகப்பெரிய பிரசித்திபெற்ற திருவிழா என்பதால் சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் பொது மக்கள் வருகை தருகின்றனர். அப்படி மக்கள் வரும்பட்சத்தில் முன்கூட்டியே வாகனங்கள் நிறுத்துவதற்கு போலீசார் ஏதாவது வழி செய்திருக்க வேண்டும்.




ஆனால் பொதுமக்கள் கூடிய பிறகு வேண்டுமென்றே வந்து வண்டியை தள்ளுமாரும், ஓரமாக நிற்குமாறு கூறி அராஜகத்தில் இருக்கின்றனர். ஆனால் பொதுமக்கள் பின்புறத்தில் மட்டுமே நின்று கொண்டிருக்கின்றனரே தவிர முன் புறமாகவோ அல்லது உட்புறமாகவோ அமர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.



கடந்த பங்குனி உத்திரம் திருவிழா அன்று போலீசார் இல்லாத காரணத்தினால் எந்தவித பிரச்சனையும் இன்றி சுமுகமாக திருவிழா நடந்தது.


அதனை கூறியதற்கு இந்த ஊர் காவல் படை காவலர் கேள்வி எழுப்பியவரையும், கடவுளையும் எவ்வளவு பச்சையாக பேசுகிறார் என்ற வீடியோவை நீங்களே கேளுங்கள்.









காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுதான் செண்டிவாக்கம் என்னும் கிராமம்

காவல்துறையினர் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வண்டிகளின் சாவிகளை பிடுங்கலாமா ? என்ற கேள்விக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விளக்...

திண்டிவனத்தில் போலீஸ் அராஜகம் - Thindivanam police harassment

Saturday, May 04, 2019

திண்டிவனத்தில் போலீஸ் அராஜகம் - Thindivanam police harassment


Video⏬⏬⏬below 




http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_16.html

http://www.runworldmedia.com/2019/0

4/blog-post_61.html

Wednesday, January 16, 2019

கீழ்கொடுங்காலூர் காவல் துறையினரின் பலே பலே ரோந்து... முழுசா படியுங்க...



திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழ்கொடுங்காலூர் பகுதி என்பது காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்கு சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது.  இந்த பகுதியானது மேல்மருவத்தூர் - வந்தவாசி செல்லும் சாலையில் உள்ளது. இந்தப் பகுதியில் செந்தமிழ் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அருகில் வேகத்தடை (Speed Breaker) உள்ளது. 



இங்கு வேகத்தடையே இல்லை என்றாலும் வாகன ஓட்டிகள் நின்று தான் செல்ல வேண்டும் என்பதே நிதர்சன உண்மை. காரணம் என்னவெனில் கீழ்கொடுங்காலூர் காவல்துறையினரின் காவல் நிலையம் இந்த வேகத்தடை பகுதியில் தான். இங்கு தான் இவர்கள் நிலையாக தங்கி கடமை தவறாமல் ரோந்து பணியில் ஈடுபடுவது போன்று அப்பாவி வாகன ஓட்டிகளிடம் காந்தி தாத்தா புகைப்படம் கொண்ட காகிதங்களை வாங்கி பைக்குள் போடும் இடம்.



தினமும் காவலர்கள் பலே வேட்டையில் ஈடுபடுவதால் பாக்கெட்டில் பணம் கொண்டுசெல்ல மக்களிடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. திருடர்களிடமிருந்து கூட நம் பணத்தை காப்பாத்திவிடலாம் போல ஆனால்.......!!!!!!


ஒருசில வாகன ஓட்டிகள் டபுள் செலவு செய்கின்றனர். ஏன் தெரியுமா...? காஞ்சிபுரம் மாவட்டம், மேல்மருவத்தூர் காவல்நிலையத்திற்குட்பட்ட செண்டிவாக்கத்தில் ரோந்து (வசூல்) பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினரின் கையை மூடிவிட்டு, பின்னர் கீழ்கொடுங்காலூர் காவல் துறையினரின் கையையும் தழுவி கொடுக்க வேண்டும். 

இப்படி ஒரு அவல நிலை இருக்கும் காரணத்தினாலேயே வாகன ஓட்டிகள், பேருந்திலேயே சென்றுவிடலாமா என யோசிக்கும் அளவிற்கு மனமுடைந்துள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்பு பொதுமக்களின் உயிர்க்கு சேதாரம் ஏற்படக்கூடாது என்பதற்காக தான். ஆனால் அந்த தீர்ப்பானது இது போன்ற காவல் துறையினரின் பாக்கெட் நிறைவிற்கும், அதிகார அச்சுறுத்தலுக்கும் தான் வழிவகை செய்கிறது. 

எனவே, இது போன்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர்களை நவீன தொழில்நுட்பங்களை கொண்டு நீதிமன்றம் கண்கானிக்க உத்தரவிட வேண்டும். மேலும், ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் துறையினர்கள் அனைவரும் கட்டாயமாக கேமரா வைத்திருக்க வேண்டும் என தீர்ப்பு அளிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், 10 ரூபாய் பணம் அபராதமாக செலுத்தினால் கூட அந்த நிமிடமே அது Centralized Server மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வாகன ஓட்டியின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக வர வேண்டும் என்பதே தொழில்நுட்ப யோசனையாளர்களின் உச்சக்கட்ட யோசனை. 

எனவே இந்த அவல நிலைக்கு தமிழக அரசு மற்றும் நீதிமன்றம் மூலமாக முற்றுப்புள்ளி வைக்க ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பதே பொதுமக்களின் ஆதங்கம்.


Thursday, January 03, 2019

[வீடியோ] தூத்துக்குடியில் டீ மாஸ்டர் மீது போலீஸ் டீ ஊற்றி அராஜகம் - Tuticurin Police Harassment Video

29-12-18 காலை சுமார் 4மணி அளவில்  தூத்துக்குடி ரூரல் DSP முத்தமிழ் மற்றும் அவருடைய பாதுகாவலர் பொன்பாண்டி மற்றும் ஒரு காவலர்...


தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தெய்வச்செயல்புரத்தில் உள்ள ஸ்ரீ மகாலெட்சுமி அய்யங்கார் பேக்கரியில் மூன்று லெமன் டீ கேட்டுள்ளார்கள் டீ மாஸ்டர் டீயை போட்டு கொடுத்துள்ளார் அந்த டீ நல்லா இல்லை என்று  சொல்லி DSPஅந்த டீ மாஸ்டரை  கன்னத்தில்  ஓங்கி அடித்துவிட்டு தனது இடது கையிலிருந்த டீயை மார்பு மீது ஊற்றும் காட்சி...


அது மட்டும் இல்லாமல் DSP பாதுகாவலர் பொன்பாண்டி அந்த டீ மாஸ்டரை வண்டியில் ஏற்றி புதுக்கோட்டை சுங்கச்சாவடி வரைக்கும்    நி என்ன சாதி என்று கேட்டு மாறி மாறி கன்னத்தில் அடித்தும் அவதூறாக பேசியுள்ளார் பின்னர் புதுக்கோட்டை சுங்கச்சாவடியில் இறக்கிவிட்டனர். இந்த அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகள் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Sunday, December 30, 2018

செண்டிவாக்கத்தில் கலக்கல் கலெக்‌ஷன் - காவல்துறையினரைக் கண்டு பீதியில் வாகன ஓட்டிகள்



காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுதான் செண்டிவாக்கம் என்னும் கிராமம். இந்த பகுதியானது மேல்மருவத்தூர் - வந்தவாசி செல்லும் சாலையில் உள்ளது. இந்தப் பகுதிகளில் காவல் துறையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதே வாகன ஓட்டிகளின் ஆதங்கம்.


தினமும் காலை 10 மணியளவில் ஆஜராகும் போலீசார் மாலை 6 மணியளவில் தான் திரும்புகின்றனர். பொதுமக்களைப் பொறுத்தவரை மேல்மருவத்தூர் காவல்நிலைய கிளை என்பது செண்டிவாக்கம் தான் என்று தோன்றும் அளவிற்கு அவர்களின் நேர செலவிடல் இங்குதான் உள்ளது. சில சமயங்களில் காலை இருவேறு போலீசாரும் மதிய உணவிற்கு பிறகு இருவேறு போலீசாரும் என சுழற்சி முறையில் கலெக்‌ஷன் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இந்தப் பகுதியில் வேகத்தடை (Speed Breaker) உள்ளதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் போலீசார்.


ரூ.500/-ல் அபராதம் வசூலிக்க ஆரம்பிக்கும் இவர்கள் அந்த நபர் (வாகன ஓட்டிகள்) ரூ.50/- தான் என்னிடம் உள்ளது என்று கூறும் அளவிற்கு வரும் வரை பொறுத்து கைக்கு கிடைத்ததை வாங்கிக் கொள்கின்றனர் என்பதே வாகன ஓட்டிகளின் ஆதங்கம். 


இப்படி ஒரு அவல நிலை இருக்கும் காரணத்தினாலேயே வாகன ஓட்டிகள் வேறு வழியில் செல்லும் எண்ணம் மேலோங்குகிறது. காரணம் என்னவெனில் அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பினும் குறைந்தபட்ச தொகையாவது கொடுத்தால் தான் விடுவிக்கிறார்கள் என்பதே. 


மேலும் பலதரப்பினர் பல்வேறு அவசர காரியங்களுக்கு செல்லும் போதும், பணிக்காக செல்லும் போதும் பொதுமக்களின் நேரத்தை வீணடிக்கின்றனர்.  தற்போது பொதுமக்களின் கேள்வி என்னவென்றால் மேல்மருவத்தூர் காவல் துறையினரின் போலீஸ் பூத் பகுதி இதுதானா..? அல்லது கிளை காவல்நியைம் இதுதானா என்பதே..?  


தற்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் இருமுடி சீசன் என்பதால் கூடுதல் போலீசார் ஆட்டோக்களில் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பொதுமக்களை கட்டுப்படுத்துகிறார்களோ இல்லையோ..! தவறாமல் வாகன ஓட்டிகளிடம் கலக்கல் கலெக்‌ஷனில் ஈடுபடுகின்றனர். மேலும் எவ்வளவோ வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா என தோன்றும் அளவிற்கு இவர்களின் செயல்பாடுகள் உள்ளது. மேலும், இவர்களால் நல்ல காவல் துறை அதிகாரிகளுக்கும் அவப்பேர் தான் ஏற்படும் என்பதில் எவ்வித மறுப்புமில்லை. 


இந்த அவல நிலையால் பல்வேறு சமூக ஆதங்கங்களுடன் காவல் துறையில் புதியதாக பணியில் சேரும் காவலர்களுக்கும் கலெக்‌ஷன் பயிற்சி அளிக்கப்படுவதால் பிற்காலத்தில் இவர்களும் நச்சுவாக மாற வாய்ப்புள்ளது. எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வளர்ந்தபோதும் வாகன ஓட்டிகளின் குறைகளை கண்டறிய காவல் துறையின் இப்படிப்பட்ட சோதனைகள் தேவையற்றதே. எனவே இந்த அவல நிலைக்கு தமிழக அரசு தரப்பில் முற்றுப்புள்ளி வைக்க ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்பதே பொதுமக்களின் ஆதங்கம்.