Run World Media: 06/21/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, June 21, 2019

நீ என்ன புடுங்கிடுவியா.. பயணியுடன் சவடால் .. பஸ் டிரைவர், கண்டக்டரின் லைசென்ஸ் "கட்"!

"நீ என்ன புடுங்கிடுவியா? நான் என்ன கவுர்மெண்ட் ஸ்டாஃப்பா? முதல்ல நீ எடுத்த வீடியோவை அனுப்புய்யா.. பேசாதே.. செய்.." என்று டிரைவர் ஒருவர் சவால் விட, கடைசியில் அந்த சவாலே அவருக்கு ஆப்பு வைத்துவிட்டது.

 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பக்கம் பண்டார வடை என்ற ஊர் உள்ளது. இங்கு செல்வதற்காக சென்னைவாசி ஒருவர் கும்பகோணம் பஸ் ஸ்டேண்டுக்கு சென்றுள்ளார். பண்டாரவடை செல்லும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்துள்ளார்.


ஸ்ரீ லஷ்மி பஸ் சர்வீஸ் என்ற ஒரு தனியார் நிறுவனத்தின் பஸ் போல தெரிகிறது. ஆனால் வழியில் உள்ள ஊரான பண்டாரவடை ஸ்டாப்பிங்கில் நிறுத்த டிரைவரும், கண்டக்டரும் தயங்கி உள்ளனர்.

 ஒரு பயணிக்காக மட்டும் பஸ்ஸை நிறுத்த அவர்களுக்கு இஷ்டம் இல்லை. இது சம்பந்தமான வாக்குவாதத்தில் கண்டக்டர் அந்த பயணியுடன் ஈடுபட்டிருந்தார். 

அந்த சமயத்தில்தான் பயணி நடக்கும் வாக்குவாதத்தை தனது செல்போனில் வீடியோ எடுக்க முற்பட்டார். அப்போதுதான் டிரைவர் உள்ளே வருகிறார். அங்கு நடக்கும் உரையாடல்தான் இது: 

டிரைவர்: 
"எடுத்துக்க.. எடுத்துக்க.. நல்லா எடுத்துக்க.. என்னை எடு.. முதல்ல கீழே இறங்கு.. "
 பயணி:
நான் ஏன் இறங்கணும்.. டிக்கெட் எடுத்திருக்கேன் டிரைவர்: போகும்போது ஏறு.. பயணி: ஏன் இறங்க சொல்றீங்க.. இந்த வண்டிதானே முதல்ல போகுது. 

அதான் ஏறி உட்கார்ந்திருக்கேன். ரீசன் சொல்லுங்க. பஸ் காலியாதானே இருக்கு. எதுக்கு என்னை இறங்க சொல்றீங்க?
 டிரைவர்: 
நீ டக்குன்னு உள்ளே ஏறி உட்கார்ந்துக்கலாமா?

 பயணி: 
என்ன ரூல்ஸ் இது? காசு தந்துதானே டிக்கெட் வாங்கி இருக்கேன். 
இந்த பஸ் பண்டாரவடைக்குதானே போகுது? 

டிரைவர்:
அதோ அந்த பஸ்கூட அங்கதான் நிறுத்துறாங்க 
 பயணி: 
அது எங்களுக்கு தேவை இல்லை, எந்த பஸ் முதல்ல போகுதோ அதிலதான் ஏற முடியும். உங்க பேர் என்ன?

 டிரைவர்: 
போட்டோ எடுத்துட்டே இல்லை.. பேர் தேவை இல்லை.
 பயணி: 
லஷ்மி டிராவல்ஸ்தானே?

 டிரைவர்: 
 இதோ பார்த்துக்கோ (காக்கி யூனிபார்மில் பொறிக்கப்பட்ட பெயரை வீடியோவில் காட்டுகிறார்) நீ என்ன புடுங்கிடுவியா? நான் என்ன கவுர்மெண்ட் ஸ்டாஃப்பா? முதல்ல நீ எடுத்த வீடியோவை அனுப்புய்யா.. பேசாதே.. செய்.. 

பயணி:  
இன்னைக்கு பாரு நீ .. இது கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட்.. இந்த டிரைவர் இப்படி பேசிட்டு இருக்கார் பாருங்க".. என்று பொதுமக்களுக்கு சொல்கிறார் இப்படி பயணி பேசியதுடன் இணையத்திலும் போட்டுவிட்டார்.
 இந்த வீடியோ வைரலாகி, கடைசியில் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், பஸ் கண்டக்டர், டிரைவர் ரெண்டு பேரையுமே அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.


கும்பகோணம் அருகே ரூ.10,000 லஞ்சம் கேட்ட சர்வேயர்... அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயி

கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில், இடிந்த வீட்டை அளப்பதற்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக சர்வேயர் கேட்டதால் அதிர்ச்சியடைந்த விவசாயி உயிரிழந்தார். 
(Surveyor who bribed Rs 10,000 near Kumbakonam ... farmer killed in shock)
 கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வேப்பத்தூர் தட்டாரத் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன் (வயது 48). இவர் தனது வீட்டை அளப்பதற்காக 3 மாதம் முன்பு பணம் கட்டி உள்ளார் இதனைத் தொடர்ந்து, இன்று சர்வேயர் மோகனாம்பாள் என்பவர் வந்துள்ளார்.வீட்டை பாதி அளந்ததும் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகத்திற்கு விவசாயியான தனசேகரனை வர சொல்லி உள்ளார். அங்கு, தனசேகர் சென்றதும் வீடு அளப்பதற்கு 10 ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

 தன்னிடம் 3, 000 ரூபாய் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார். பின்னர், உறவினர்களிடம் இருந்ததை வாங்கி, மொத்தம் ஆறாயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். 
மீதி 4,000 கேட்டதற்கு தனசேகரன் இல்லை என்று தெரிவிக்கவே அவரை சர்வேயர் திட்டியதாக தெரிகிறது. இதனால், நெஞ்சு வலியால் சுருண்ட தனசேகரன், அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். 

 அக்கம் பக்கத்தினர் தனசேகரனை மீட்டு, அருகிலுள்ள திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். தனசேகரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 இதுபற்றி, விவசாயி தனசேகரனின் மகன் சுதர்சன் திருவிடைமருதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

 இதனைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் கேட்டதால், அதிர்ச்சியில் விவசாயி உயிழந்ததாக தகவல் பரவியதால், திருவிடைமருதூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

"தயவுசெஞ்சு நீங்க போங்க.. ஒவ்வொருத்தரா வாங்க..".. தஞ்சை ஆஸ்பத்திரியைக் கலக்கும் திருநங்கைகள்

"தயவுசெஞ்சு நீங்க போங்க.. ஒவ்வொருத்தரா வாங்க.. இப்படி நிக்காதீங்க" என்ற திருநங்கைகளின் குரலை கேட்டதும் பொதுமக்கள் ஒரு செகண்ட் ஆச்சரியப்பட்டு போகின்றனர்.. ஆம்.. தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் 8 திருநங்கைகளுக்கு வேலை போட்டு கொடுத்துள்ளனர்.

 திருநங்கைகளின் மதிப்பீடுகள் தற்போதைய சமூகத்தில் உயர்ந்து காணப்பட்டு வருகின்றபோதிலும், சிலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவும், பரிதாபத்திற்குரியதாகவும், சில நேரங்களில் இழிநிலைகளுக்கு செல்பவையாகவும் கூட உள்ளன.


இந்நிலையில், தஞ்சை அரசு ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி மகப்பேறு வார்டில் காவலர் பணிக்கு முதன் முதலாக 8 திருநங்கைகளை பணியமர்த்தியுள்ளார் மருத்துவக் கல்லூரி டீன் குமுதா லிங்கராஜ்.


ராகினி, சத்யா, தர்ஷினி, மயில், பாலமுரளி, முருகானந்தம், ராஜேந்திரன், மணிவண்ணன் இவர்கள்தான் அவர்கள். ஒரு ஷிப்ட்டில் 4 பேர் என 2 ஷிப்டில் 8 பேர் வேலை பார்க்கிறார்கள்.

 திருநங்கைகள் காவலாளிகளாக முதல் முறையாக மருத்துவமனையில் பணி அமர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.


"எங்களை நிறைய பேர் சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கற சூழல் ஏற்பட்டது. ஆனால் இப்போ, இப்படி ஆஸ்பத்திரியில் வேலை தந்துள்ளது பெருமையா இருக்கு. 

அதுக்கு இந்த ஆஸ்பத்திரி டீன், சுகாதார அமைச்சருக்கு எங்கள் நன்றி. இதே போல் மற்ற துறைகளிலும் திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்" என்று இவர்கள் கூட்டாக தெரிவித்து உள்ளனர்.


சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணை தாக்கி விட்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மரணம்

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்டதை போல சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில், தேன்மொழி என்ற பெண்ணை, சுரேந்தர் என்ற வாலிபர் கடந்த 14 ந்தேதி சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோட்டை சேர்ந்த தேன்மொழிக்கு அரிவாள் வெட்டில் தாடை பகுதியில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டது. கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தையல்கள் போடப்பட்ட நிலையில் தேன்மொழி கிசிச்சை பெற்று வந்தார்.

 10 நாட்கள் வரையில் பேசக் கூடாது என்று டாக்டர்கள் அவரிடம் அறிவுறுத்தி இருந்தனர். தீவிர சிகிச்சைக்கு பின்னர் தேன்மொழி உயிர் பிழைத்துக் கொண்டார்.

தேன்மொழியின் காதலன் என்று சந்தேகிக்கப்படும் சுரேந்தர் ரெயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

 இதில் படுகாயம் அடைந்த அவருக்கு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சுயநினைவு இல்லாமல் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரிடம் விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தேன்மொழியை, சுரேந்தர் வெட்டியதற்கான காரணம் என்ன? என்பதை போலீசாரால் முழுமையாக அறிந்து கொள்ள முடிய வில்லை.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்