வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2019-06-30
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, July 07, 2019

இலங்கையில் 25 வருடங்களாக பிச்சை எடுக்கும் 65 வயது பெண்ணொருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? 3 ஆடம்பர வீடுகள்,வங்கியில் கணக்கில் பல இலட்சம் ரூபா பணம் | Run World Media

இலங்கையில் 25 வருடங்களாக யாசகம் பெற்ற பெண்ணொருவரின் சொத்து மதிப்பு தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது. கம்பஹா நகரிலுள்ள ரயில் நிலையங்களில் 25 வருடங்களாக யாசகம் பெற்று வந்த பெண்ணுக்கு பல்வேறு சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

65 வயது பெண்ணுக்கு சொந்தமாக 3 வீடுகள் உள்ளதாகவும், அவரது வங்கிக் கணக்கில் பல இலட்சம் ரூபா பணம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த யாசகம் பெறும் பெண் ரயில்வே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இந்த விடயங்கள் தெரிய வந்துள்ளது.


யாசகம் பெறுவது தனது மகள்களுக்கும் தெரியும் என்றும், அவரது மருமகன்கள் நல்ல வேலைகளில் இருப்பதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார். வயோதிப பெண் கைது செய்யப்பட்ட நிலையில் மகள்களில் ஒருவர் வந்து அவரை பார்த்துச் சென்றதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.


கம்பஹா மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் யாசம் பெறும் அவர், நாள் ஒன்றுக்கு சுமார் 4000 ரூபாவும் மாதத்திற்கு 150,000 ரூபா பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 25 வருடங்களாக யாசகம் பெற்ற பணத்தில் 3 வீடுகளையும் கட்டியதாகத் தெரிவித்துள்ளார். அவற்றில் 2 வீடுகளை அவரது மகள்களுக்கு வழங்கியுள்ளதாகவும் மூன்றாவது வீட்டை வாடகைக்கு விட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அத்துடன் அவரது வங்கிக் கணக்கில் ஐந்து இலட்சம் ரூபா பணம் இருப்பதும், தெரியவந்துள்ளது.


23 வருஷத்துக்குமுன் ஆபரேஷனில் கத்தரிக்கோலை வயிற்றுக்குள் மறந்து வைத்த டாக்டர்... இப்ப எடுத்துருக்காங | Run World Media

ரஷ்யாவில் வடக்கு ஆஸ்டியா என்ற பகுதியில் எஸீட்டா கோபீவா என்ற பெண்ணுக்கு அடிவயிற்றில் அடிக்கடி வலி வந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து அவர் மருத்துவர்களிடம் சிகி்ச்சை பெற்றார். முடிவில் என்ன நடந்தது தெரியுமா?





23 வருஷத்துக்குமுன் ஆபரேஷனில் கத்தரிக்கோலை வயிற்றுக்குள் மறந்து வைத்த டாக்டர்... இப்ப எடுத்துருக்காங்க... அந்த கொடுமையைப் பற்றித் தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம்.


23 ஆண்டுகள் வேதனை 
 எலீட்டா கோபீவாவுக்கு 1996 ஆம் ஆண்டு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து அவ்வப்போது அவருக்கு அடிவயிற்றில் ஏற்பட்டது. வலி வரும்போதெல்லாம் எலீட்டா மருத்துவர்களிடம் செல்வார்.


அவர்களும் வலி நிவாரணி மருந்துகளை அளிப்பர். அப்போதைக்கு வலி குறையுமே தவிர முற்றிலும் நிற்காது. மீண்டும் வலி வரும். எலீட்டா மருத்துவமனைக்குச் செல்வார். அவர் வாழ்க்கையில் இது வாடிக்கையாகி விட்டது.



ஈரலில் பிரச்னையா?
ஈரலில் நோய் ஏற்பட்டுள்ளதால் எலீட்டாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்திருக்கலாம் என்ற நோக்கிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தரும் மருந்துகள் வலியை மரத்துப்போகச் செய்கின்றன; குணப்படுத்தவில்லை என்று எலீட்டா தெரிவித்தார். இறுதியாக ஒரு மருத்துவர் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுக்குமாறு பரிந்துரைத்தார்.



அதிர்ச்சியளித்த எக்ஸ்ரே 
 எலீட்டாவுக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்த சிறப்பு மருத்துவருக்கு தன் கண்களையே நம்ப இயலவில்லை. எலீட்டாவின் வயிற்றுக்குள் கத்தரி ஒன்று இருந்தது. எக்ஸ்ரே எடுக்கும் அறைக்குள் எலீட்டா கத்தரிகோலை தவறுதலாக எடுத்துச் சென்றிருக்கூடும் என்று நினைத்தார். ஆனால், உண்மையில் வயிற்றினுள்ளேதான் கத்தரி இருந்தது.




யார் வைத்தது?
வயிற்றினுள் கத்தரிகோல் எப்படி வந்திருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கேட்டபோது எலீ்ட்டாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. தனக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று கூறினார்.



அப்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கத்தரியை மறந்துபோய் எலீட்டாவின் வயிற்றுக்குள் வைத்துவிட்டது தெரிய வந்தது. 23 ஆண்டுகள் தேவையில்லாமல் வேதனைப்பட்டதற்கு எலீட்டாவுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் சம்மந்தபட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


மருத்துவர்களின் மறதி 
 இது குறித்து செய்யப்பட்ட ஓர் ஆய்வில் 30 அறுவை சிகிச்சைக்கு 1 என்ற விகிதத்தில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், அறுவை சிகிச்சை உபகரணத்தையோ, கையுறையையோ நோயாளியின் உடலினுள் தவறுதலாய் விட்டு விடுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதையெல்லாமா மறப்பீங்க டாக்டர்?




Saturday, July 06, 2019

பெற்றோர்களே உஷார்! குழந்தைகள் மற்றும் இளைஞர்களைச் சீரழிக்கும் டிஜிட்டல் போதை பழக்கம்! | Run World Media

போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களைப் பற்றி நமக்குத் தெரியும். இன்னும் பலருக்கும் அதிலிருந்து எப்படி வர வேண்டும் என்பதற்கான வழிகளும் தெரியும்.



ஆனால் தற்பொழுது இளைஞர்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படும் டிஜிட்டல் போதை பழக்கத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்த டிஜிட்டல் போதை பழக்கத்திலிருந்து எப்படி உங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று தெரியுமா?


மிகவும் ஆபத்தான டிஜிட்டல் போதை பழக்கம் 
 குடிபோதை பழக்கத்திற்கு அடிமையாகுவதைக் காட்டிலும், டிஜிட்டல் போதை பழக்கத்திற்கு அடிமையாகுவதை மிகவும் ஆபத்தானது என்கின்றனர் மனநல மருத்துவர்கள். இடைவிடாது, தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன் அல்லது கேட்ஜெட்களை பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் தான் இந்த டிஜிட்டல் போதை பழக்கம் உண்டாவதாக அறிக்கையின் முடிவுகள் தெரிவிக்கின்றது.




மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஆபத்து 
 டிஜிட்டல் போதை பழக்கத்திற்குப் பாதிக்கப்பட்டவர்களால், டிஜிட்டல் கேட்ஜெட்கள் இல்லாமல் சில மணி நேரங்கள் கூட இருக்க முடியாதாம். பாதிக்கப்பட்ட இவர்கள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிகம் பாதிப்படைந்து ஆபத்தான நிலைகளுக்குத் தள்ளப்படுகின்றனர் என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


தற்கொலைக்குத் தூண்டப்படுவது 
 இளைஞர் முதல் குழந்தைகள் வரை மனமுடைந்து தற்கொலை செய்வது, தற்கொலைக்குத் தூண்டப்படுவது, கோபமடைந்து கொலை செய்வது போன்ற பிரச்சனைகள் அனைத்தும் இந்த பழக்கத்தினால் தான் உண்டாகிறது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.



டிஜிட்டல் போதையினால் உண்டான மரணங்கள் 
 உதாரணத்திற்குச் சென்ற வாரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு தாய்யான 24 வயது பெண், டிக் டாக் செயலியைப் பயன்படுத்த வேண்டாம் என்று கணவன் கண்டித்ததற்குத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை நாம் அறிவோம், அதேபோல் 16 வயது இளைஞர் ஒருவர் தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி கேமை விளையாடி மாரடைப்பு வந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பற்றியும் நாம் அறிவோம்.



அளவுக்கு மீறினால் எல்லாமே நஞ்சு 
 தான் இது போன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம், டிஜிட்டல் கேட்ஜெட்களுக்கு அடிமை ஆகுவது தான். பொழுதுபோக்கிற்காக சில நிமிடங்கள் பயன்படுத்தி விளையாட வேண்டிய பழக்கத்தை, பல மணி நேரம் தொடர்ச்சியாக விளையாடி அதற்கு அடிமையாகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.


பெரிதும் பாதிக்கப்படும் குழந்தைகள் 
அதிக அளவில் மனநல ரீதியாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இந்த பழக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த டிஜிட்டல் போதை பழக்கத்திலிருந்து நம் குழந்தைகளை வெளியில் கொண்டு வருவதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது என்ன என்றால்? முதலில் அதனை கண்டறிவது தான் என்கின்றனர் மருத்துவர்கள்.



டிஜிட்டல் போதைக்கு அடிமையாகி உள்ளவரை எப்படிக் கண்டறிவது? 
முதலில் இவர்கள் டிஜிட்டல் கேட்ஜெட்கள் இல்லாமல் எங்கும் செல்ல மாட்டார்கள், குளிக்கச் சென்றால் கூட இவர்களுடன் இவர்களின் கேட்ஜெட்கள் பின்தொடரும்.
   ஒரு நாளில் குறைந்தது 4 மணி நேரம் கூட இவர்களால் ஸ்மார்ட்போன் மற்றும் கேட்ஜெட்கள் இல்லாமல் இருக்க முடியாது.
 அவர்களின் வழக்கமான வேலைகளைக் கூடச் செய்ய மறுப்பார்கள். - சரியான தூக்கமில்லாமல் ராக்கோழியாக இருப்பார்கள்.


 கேட்ஜெட்களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று அன்பாகச் சொன்னால் கூட எரிச்சல் மற்றும் கோபம் கொள்வார்கள்.
 பெற்றோருக்குத் தெரியாமல் அல்லது பொய் சொல்லி கேட்ஜெட்களை பயன்படுத்துவார்கள்.
அவர்களின் அன்றாட வேலைகளைப் புறக்கணிப்பார்கள்.
  பெற்றோர், நண்பர்கள் என யாரிடமும் நெருங்கிப் பழகமாட்டார்கள். 
மனச்சோர்வு, பதட்டம், வெறித்தனமான அறிகுறிகள், தூக்கமின்மை, எரிச்சல் மற்றும் கவனம் குறைவு போன்ற அறிகுறிகள் இவர்களிடத்தில் காணப்படும்.


டிஜிட்டல் போதை பழக்கத்திலிருந்து இவர்களை எப்படி மீட்பது?
  முதலில் பெற்றோர்கள் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் பெற்றோர்களே நீண்ட நேரம் ஸ்மார்ட்போன் மற்றும் கேட்ஜெட்களை பயன்படுத்துகின்றனர். குழந்தைகளின் நலனிற்காக அப்படி இல்லாமல் இருக்க வேண்டும்.
  குழந்தைகளுடன் அன்பாகப் பேசி, அவர்களுக்கு எடுத்துச் சொல்லி வேறு பொழுதுபோக்கிற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும்.


  வெளியில் சென்று விளையாட ஊக்குவிக்க வேண்டும்.
  நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வெளியில் சென்று வர வேண்டும்.
 குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது தொடர்ச்சியாக 4 மணி நேரம் கேட்ஜெட்கள் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். இம்முறையை டிஜிட்டல் டீடாக்ஸ்(digital detox) என்பார்கள்.




தாமதிக்க வேண்டாம்! 
 இந்த முறைகளைப் பின்பற்றி டிஜிட்டல் போதை பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகள் மற்றும் இளைஞர்களை மீட்டுக் கொண்டுவர இயலும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 
அதேபோல் நீங்கள் அன்பாகக் கூறியும், கண்டித்தும் உங்கள் குழந்தைகள் உங்களிடம் பொய் சொல்லி அல்லது உங்களுக்குத் தெரியாமல் தொடர்ச்சியாக டிஜிட்டல் கேட்ஜெட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், தாமதிக்காமல் நல்ல மருத்துவரை அணுகி ஆபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுங்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.



Friday, July 05, 2019

செல்போனில் பேசியபடியே சாப்பிட்ட போதுதொண்டையில் புரோட்டா சிக்கி புதுமாப்பிள்ளை சாவு | Run World Media

புதுச்சேரி லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பாரதி நகர் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 35). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி சண்முக சுந்தரி. திருநெல்வேலியை சேர்ந்தவர். சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் களுக்கு திருமணமானது.





 இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முகசுந்தரி தனது தாய் வீட்டிற்கு சென்று வி்ட்டார். இதனால் புருஷோத்தமன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.




நேற்று முன்தினம் இரவு புருஷோத்தமன் ஓட்டலில் இருந்து புரோட்டா வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் தனது மனைவியிடம் செல்போனில் பேசியபடியே அதை சாப்பிட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது தொண்டையில் புரோட்டா சிக்கியது. இதனால் தொடர்ந்து பேச முடியாமல் புருஷோத்தமனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே எதிர்முனையில் பேசிய அவரது மனைவி செல்போன் இணைப்பை துண்டித்து விட்டு மீண்டும் அழைத்தார். ஆனால் புருஷோத்தமனால் செல்போனை எடுத்து பேச முடியவில்லை.



இதனால் ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்று சுதாரித்த சண்முகசுந்தரி இது தொடர்பாக முத்தியால்பேட்டையில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக புருஷோத்தமனின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது வீடு உள்புறமாக பூட்டி கிடந்ததை பார்த்ததும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.




அங்கு புருஷோத்தமன் மயங்கி கிடந்தார். அவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், புருஷோத்தமன் செல்போனில் பேசிய படியே சாப்பிட்டதால் புரோட்டா தொண்டையில் சிக்கி மூச்சு திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.



இது குறித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


பெண் குளிப்பதை பேனா கேமரா மூலம் படம் பிடித்து.. 55 வயதில் சிக்கிய அறநிலையத்துறை இணை ஆணையர்! | Run World Media

பெண் குளிக்கிறதை கேமரா மூலமாக வீடியோ எடுத்திருக்கிறார் மிஸ்டர் பச்சையப்பன்.. வயசு 55.. செய்யும் தொழில் இந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்! யாரா இருந்தால் என்ன, கேடு கெட்ட செயலை செய்ததால் பச்சையப்பனை தூக்கி உள்ளே வைத்துவிட்டது போலீஸ்! மதுரை, தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர்தான் இந்த பச்சையப்பன்.


இந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர். கடந்த ஜுன் 28ம் தேதி, சதுரகிரி மலைக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இந்த பணியில் திண்டுக்கல் இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி ஈடுபட்டிருந்தார். பச்சையப்பனும் அங்கு பணி நிமித்தமாக சென்றார்.


பேனா 
 அப்போது கோயில் பகுதியில் உள்ள பாத்ரூமில் அந்த பெண் அதிகாரி குளிக்க சென்றிருக்கிறார். அப்போது பாத்ரூமில் ஆணியில் ஒரு பேன்ட் தொங்கி இருந்திருக்கிறது. அந்த பேன்ட்டில் சொருகி இருந்த ஒரு பேனா ரெட் கலரில் எரிந்திருக்கிறது.




குளியல் காட்சிகள்
 இதனால் சந்தேகமடைந்த அந்த பெண், பேனாவை எடுத்து பார்த்தால், அது பேனா இல்லை, பென் கேமரா என்பதும், அவ்வளவு நேரமாக குளித்த காட்சி எல்லாம் அதற்குள் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது. இதைவிர வேறு சில ஆபாச வீடியோவும் அதில் இருந்ததாம்.


அது மட்டுமில்லை.. அந்த பேன்ட் பச்சையப்பனுடையது என்றும் தெரியவந்தது. உடனடியாக சாப்டூர் போலீசிலேயே பெண் புகார் தந்தார். போலீசாரும் பச்சையப்பன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.




காஸ்ட்லி காமிரா 
இந்நிலையில், விடிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பச்சையப்பனை போலீசார் அதிரடியாக கைது செய்து எஸ்பி ஆபீசில் வைத்து விசாரணையை ஆரம்பித்தனர். அந்த பென் கேமரா.. ரொம்ப காஸ்ட்லியாம். அதில் எது ரெக்கார்ட் ஆனாலும், செல்போனில் லைவ்-ஆக பார்க்க முடியுமாம். இதையெல்லாம் கேள்விப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை அதிர்ச்சியில் உள்ளது.




தீவிர விசாரணை 
 கைதான பச்சையப்பன் சாதாரண ஆள் கிடையாது. சவுடார்பட்டியில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சியம்மன் கோயிலில் பழமையான ஐம்பொன் சிலைகள் கடத்தலில் தொடர்பு உள்ளவராம்.


 இதே சதுரகிரி கோயில் உண்டியல் வருமானத்தை எண்ணும்போது பணத்தில் கையாடலும் செய்துள்ளாராம். போன வருஷம் தன் பிறந்த நாளுக்கு அதிகாரிகளை கட்டாயப்படுத்தி வரவழைத்து காஸ்ட்லி கிப்ட் கேட்டும் வாங்கி இருக்கிறாராம். இவ்வளவு ஆட்டம் போட்ட பச்சையப்பன் இன்று களி தின்று, கம்பி எண்ண போகிறார்!




Tandoori Tea போட்டு திருச்சியை கலங்கடிக்கும் BE மெக்கானிக்கல் பட்டதாரி..! | Run World Media

திருச்சி, புத்தூர் நால் ரோடு பகுதியில் அரேபியன் தந்தூர் சாய் (Tandoori Tea) என ஒரு டீ கடை போட்டிருக்கிறார் நம், மெக்கானிக்கல் இன்ஜினியர் முகம்மது அஸ்லாம்.


 "என்னைய்யா இன்ஜினியரிங் படிச்சிட்டு டீ கடை போட்டிருக்க, போய் ஆகற வேலையைப் பாரு" எனச் சொல்லியவர்களை எல்லாம் அசால்டாக புறம் தள்ளிவிட்டு டீ கடை போட்டு பல ஜீனியர்களுக்கு பார்ட் டைம் வேலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
 "படிச்ச படிப்புக்கு வேலை கிடச்சிருக்காது போல, அதான் டீ கடை போட்டிருக்காரு" என இவரை ஏளனம் பேச வேண்டாம். இவர் திருச்சி BHEL-ல் தற்காலிக வேலை பார்த்துவிட்டு, எதையாவது செய்ய வேண்டும் எனச் சொல்லி வெளியே வந்தவர்.



திருச்சியில் முதன் முறையாக 
 பிசினஸ் என்றாலே எதையாவது புதிதாக செய்ய வேண்டும் என்கிற ஐடியா இருக்கும். ஆனால் என்ன செய்வது என தெரியாது. நம் அஸ்லாமுக்கு தெரிந்திருந்தது.


 வட இந்தியாவில் கொடூரமாக டிரெண்டாகிக் கொண்டிருக்கும் Tandoori Tea-ஐ கையில் எடுத்தார். சென்னையில் இந்த ஸ்மோக்கி சுவை Tandoori Tea கிடைக்கிறது. திருச்சியில் யாராவது இந்த Tandoori Tea-ஐப் போட்டிருக்கிறார்களா எனப் பார்த்தால் "அட நாம தான் மொதல்ல" என புத்தூர் நால்ரோடு பகுதியில் கடை போட்டுவிட்டார்


இரண்டு மாதம் தான் 


இவர் கிறிஸ்து பிறப்பு முன் எல்லாம் கடை போடவில்லை. கடை போட்டு வெறும் 66 நாட்கள் தான் ஆகிறது. 01 ஏப்ரல் 2019-ல் தான் கடைக்கு பூஜை போட்டு முதல் Tandoori Tea போட்டிருக்கிறார்.


இந்த இரண்டு மாதத்திலேயே பயங்கரமான ரீச் கிடைக்க, பிசினஸும் நன்றாக வளர்ந்திருக்கிறதாம். முதலில் தயங்கிய பெற்றோர்கள் 60 நாட்களில் கடை நடத்திய திறனைப் பார்த்து "என்னங்க பையன் பொழச்சிக்குவான் போலருக்கே..!" என கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்களாம். அதற்கு அஸ்லாமும் "அதான் நல்ல பேர் வாங்கிட்டோம்ல, அதான் நம்மள கண்டுக்குறதில்ல" என கண் அடிக்கிறார்.


நண்பர்கள் 
கடையில் எப்போதுமே ஒரு கலகல யூத் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. காலேஜில் சீனியராக இருந்த அஸ்லம் கடையில், பார்ட் டைம் பார்க்கும் ஜீனியர்களும் அதிகம் உண்டு. வெறும் 10 ரூபாய்க்கு ஒரு கப் Tandoori Tea கொடுத்தே என்னால் இரண்டு மாதம் கடையை நடத்த முடிந்திருக்கிறது.


வேலை பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் சம்பளம் கொடுக்க முடிந்திருக்கிறது, இன்னும் விரிவாக்கம் செய்யப் போகிறேன் என உற்சாகம் பீரிட பெருமைப் படுகிறார் அஸ்லாம். ஆனால் லாப நஷ்டங்களைப் பற்றிப் பேசவில்லை. ஆக இவரால் ஒரு டீ கடையை நடத்தி தன் வாழ்க்கையை நடத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.


மெல்லிய சிரிப்பு
ஸ்ஸ்..ப்ப்ப்... தலைவா டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கே... இந்த டீய எப்புடி பண்றாய்ங்க..? என முதல் முறை ஸ்மோக்கி சுவை கொண்ட Tandoori Tea குடிக்கும் பலரும் கேள்வி கேட்பதுண்டு. ஆனால் அஸ்லாம் அதற்கு பதில் சொல்லாமல் செய்து காட்டுகிறார். ஆக நாம் இணையத்தில் இந்த Tandoori Tea ரெசிப்பியை தேடிப் பிடித்திருக்கிறோம்.



மண் குவளை 
 2019-ல் இருந்து தான் இந்த Tandoori Tea வட இந்தியாவில் பெரிய அளவில் பரவி வருகிறது. ஆனால் தென்னிந்தியாவுக்கு இப்போது தான் எட்டிப் பார்க்கத் தொடங்கி இருக்கிறது. இந்த Tandoori Tea-ன் சுவைக்கு குடிக்கும் டீயை விட, மண் குவளை ரொம்ப முக்கியம். அந்த மண் குவளையால் தான் டீயின் டேஸ்ட் வேறு லெவலைத் தொடுகிறது.


ரெகுலர் டீ 
தயாரிப்பு மறு பக்கம் டீ போட்டுக் கொண்டிருப்பார்கள். பிரியாணியை எப்படி நூற்றுக்கணக்கான வழியில் தயாரிக்க முடியுமோ அப்படி டீ போடுவதற்கும் பல ரெசிப்பிகள் இருக்கின்றன. பொதுவாக ஒரு பக்கம் தண்ணீரில் டீத் தூள் போட்டு கொதிக்க வைத்து டீக்கான டிகாஷனை தயாரிப்பார்கள். மறு பக்கம் பாலை கொதிக்க வைப்பார்கள். பால் உடன் சர்க்கரை டீ டிகாஷன் சேர்த்தால் டீ ரெடி..... ஆனால் நம் Tandoori Tea-யை அப்படிப் போடுவதில்லை.






பொருட்கள் 
 Tandoori Tea-க்கு மிக ஏலக்காய் பொடி முதல் கரம் மசாலா வரை பலவற்றையும் சேர்க்கிறார்கள். பொதுவாக இணையத்தில் கிடைக்கும் செய்திகளில் மசாலா டீக்கு போடுவது போல ஏலக்காய், கிராம்பு, சுக்கு அல்லது இஞ்சி, பட்டை என லிஸ்ட் நீள்கிறது. இவைகளை எல்லாம் அவர்களுக்கு உரிய ரகசிய அளவுகளில் நன்றாக வறுத்து பொடியாக்கி வைத்துக் கொள்கிறார்கள்.


டீ தயாரிப்பு 
 டீக்கு தேவையான விகிதத்தில் தண்ணீரை பாலுடன் ஏற்கனவே சேர்த்து விடுகிறார்கள். இப்போது பாலை கொதிக்க வைக்கும் போதே, மேலே சொன்ன பொடியை சேர்த்து விடுகிறார்கள். அதனால் பாலில் சுவையும் மணமும் நிறைந்து விடுகிறது. அதன் பின் பாலிலேயே டீத் தூள் மற்றும் சர்க்கரை போட்டு கொதிக்க வைத்து அடுத்த சில மணி நேரங்களுக்குத் தேவையான டீயை தயாரித்து கேனில் சேமித்து வைத்துக் கொள்கிறார்கள்.


Tandoori Tea 
இப்போது கஸ்டமர் வந்து Tandoori Tea கேட்டால், இந்த தங்க நிறத்தில் ஜொலிக்கும் மண் குவளையை எடுக்கிறார்கள். கேனில் சேமித்து வைத்திருக்கும் டீயை இந்த ஜொலிக்கும் மண் குவளையில் ஊற்ற டீ மீண்டும் துள்ளிக் குதிக்கிறது.


ஆகையால் வெப்பத்தில் ஜொலிக்கும் இந்த மண் குவளையை ஒரு பெரிய பாத்திரத்தில் வைத்து டீயை ஊற்றுகிறார்கள். எனவே வெப்பத்தில் ஜொலிக்கும் மண் குவளையின் முழு வெப்பத்தையும், டீ மீண்டும் எடுத்துக் கொள்கிறது. ஒரு கட்டத்தில் ஜொலிக்கும் மண் குவளையின் சூடு குறைந்து விடுகிறது. மண் குவளையின் ஸ்மோக்கி சுவை நிறைந்த அந்த தந்தூர் டீயின் ஆவி பறக்கிறது. ஸ்பெஷல் Tandoori Tea ரெடி.


சுவை 
ஏற்கனவே ஏலக்காய், க்ராம்பு, பட்டை, சுக்கு எல்லாம் போட்டு சுவை ஏத்தப் பட்டு வைத்திருக்கும் டீயை மீண்டும் மண் பாணையில் சுட வைப்பதால், ஏதோ ஒரு இனம் புரியாத சுவை கூடுகிறது. மண் பாண்டங்களில் சமைத்த உணவுகளை சுவை பார்க்காத 90-ஸ் கிட்ஸ்களுக்கு இந்த Tandoori Tea வேறு ஒரு புது பரவசத்தைக் கொடுக்கிறது. இவ்வளவு பெரிய பிராசஸ் கொண்ட டீயை வெறும் 10 ரூபாய்க்கு அஸ்லாம் கண் முன் போட்டுக் கொடுத்தால் குடிக்காமல் என்ன செய்வோம்..?



வேறு என்ன..?


நம் அஸ்லாமின் அரேபியன் தந்தூர் சாய் கடையில்... பச்சை மிளகாய் போட்ட குல்கி சர்பத், குல்கி பூஸ்ட், குல்கி ரோஸ்மில்ஸ் என வித்தியாசமான ஐட்டங்களாக அள்ளி விடுகிறார். அதோடு "இன்ஜினியரிங் படித்த விஐபி-க்களுக்கு வேலை இல்லையா... வாங்க சார்... வந்து கடைய போடுங்க பாத்துக்குவோம்" என உளமாற அழைக்கிறார். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அஸ்லாம்.



உருவானது ரோகினி ஆர்மி...! அரசுக்கு எதிரான போஸ்டரால் பரபரப்பு... | Run World Media

சேலம் மாவட்ட ஆட்சியராக திருமதி. ரோகினி அவர்கள் கடந்த 28 அன்று சேலம் மாவட்டத்தில் முதல் பெண் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று அனைத்து தரப்பு மக்களின் பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டார்.




சேலத்தின் முதல் பெண் கலெக்டரான ரோகினி  எடப்பாடி இட்ட வேலைகளை பக்காவாக செய்து வந்தார். ஆனால் மக்களவை மற்றும் இடைத் தேர்தல் நடந்த நேரத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக அவர் நேர்மையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.தேர்தல் பிரசாரத்துக்காக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சேலம் வந்தபோது கோட்டை மைதானத்தில் இருந்தபோது எடப்பாடி வீடு இருக்கும் நெடுஞ்சாலை நகர் வரைக்கும் இரு புறமும் அதிமுக, கூட்டணிக் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
அது தேர்தல் விதிமுறை என்று சொல்லி அகற்ற ரோகினி கலெக்டர் உத்தரவிட்டார்.


தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையின் போது, கலெக்டர் ரோகினி. விதிகளை கடுமையாக அமல்படுத்தினார். இதே போல் தேர்தல் முடிவுக்குப் பின் இரண்டடுக்கு பாலம் துவக்க விழாவில் சேலம் திமுக எம்.பி. பார்த்திபனை முறைப்படி அழைக்க வேண்டும் என்பதில் ரோகினி கறாராக இருந்தார்.
இப்படி தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக செயல்பட்டு வருவதாக அங்குள்ள நிர்வாகிகள் போட்டுக் கொடுத்தாக சொல்லப்படுகிறது. பள்ளி மாணவர்கள் முதல் வயதான தள்ளாடும் முதியவர்கள் வரை  பிரச்னைக்கு தீர்வு கண்டு சேலம் மாவட்ட மக்களின் நன்மதிப்பைப் பெற்று அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கின்ற வகையில்  பணிகள் தொய்வின்றி செயல்பட்ட ரோகினியை அதிரடியாக  தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைக் கல்லூரி பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ரோகினி பணியிட மாற்றம் செய்தியை கேட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது மக்களின் முகத்தில் ஒரு சோகம் தென்பட்டது.  மேலும், இந்தப்பணியிட மாற்றத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அகில பாரத இந்து மகாசபா சார்பில் சேலம் மாநகர் முழுவதும் தமிழக அரசை கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஓடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் "தமிழக அரசே தமிழக அரசே... நேர்மையாக செயல்பட்ட திறமையான சேலம் மாவட்ட பெண் ஆட்சித்தலைவர் ரோகிணி அவர்கள் பணி இடமாற்றம் செய்ததை கண்டிக்கிறோம். மீண்டும் ரோகினி அவர்களை ஆட்சித்தலைவராக பணியமர்த்த வேண்டும் இப்படிக்கு அகில பாரத இந்து மகாசபா" என தமிழக அரசை கண்டித்து வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்த இந்த கண்டன போஸ்டர்கள் சேலம் மாநகரம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Thursday, July 04, 2019

இயர்போனுடன் டூவீலர் ஓட்டினால் அபராதம்... எவ்வளவு என தெரிந்தால் இனி இசை மழையில் நனைய மாட்டீர்கள் | Run World Media

டூவீலர்களில் பயணம் செய்யும்போது இயர்போன் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.




இந்திய சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது அதிகபட்ச கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் அனைத்து போக்குவரத்து விதிமுறைகளும் மிக சரியாக கடைபிடித்தாலும் கூட, கூடுதல் கவனத்துடன் இருக்காவிட்டால், விபத்தில் சிக்கி கொள்வதற்கான அபாயம் உள்ளது. ஏனெனில் இங்கு மற்ற வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பார்கள் என கூற முடியாது.



வாகனங்களை இயக்கும்போது லேன் மாறுவதற்கு என விதிமுறைகள் (Lane Rules) உள்ளன. ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் இங்கு அதனை கடைபிடிப்பது கிடையாது. அப்படி ஒன்று இருப்பதே பலருக்கும் தெரியாது என்றும் கூட சொல்லலாம். எனவே திடீர் திடீரென லேன் மாறி மற்ற வாகன ஓட்டிகளுக்கும் சிலர் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர்.



இந்தியாவை பொறுத்தவரை இரு சக்கர வாகன ஓட்டிகள் பலருக்கும் இயர்போன்கள் (Earphones) மூலமாக பாடல்களை ரசித்து கேட்டு கொண்டே பயணிக்கும் வழக்கம் உள்ளது. பாடல்கள் கேட்பதற்கு மட்டுமின்றி, வாகனம் ஓட்டி கொண்டிருக்கும்போது செல்போனில் பேசவும் பலர் இயர்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இது மிகவும் அபாயகரமானது. இதன் காரணமாக சுற்றுப்புறத்தில் எழும் சப்தங்கள் உங்களுக்கு கேட்காமல் போய் விடலாம். குறிப்பாக மற்ற வாகன ஓட்டிகள் ஹாரனை ஒலித்தால், அது உங்களுக்கு கேட்காமல் போய் விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது மற்ற வாகன ஓட்டிகளுடன் உங்களுக்கு வீண் தகராறையும் ஏற்படுத்தி விடும்.



அத்துடன் வாகனம் ஓட்டும்போது நீங்கள் இசை மழையில் நனைந்து கொண்டிருந்தால், உங்கள் கவனம் திசை திரும்பி விபத்து நேர்வதற்கான அபாயமும் உள்ளது. இந்த சூழலில் இயர்போன்களில் பாடல்களை கேட்டு கொண்டு இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.


இதன்படி இயர்போன்கள் மூலமாக பேசி கொண்டோ அல்லது பாடல்களை கேட்டு கொண்டோ இரு சக்கர வாகனங்களை இயக்குபவர்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக மாநிலம் பெங்களூர் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இதற்கென புதிய அறிவிப்பு ஒன்றை பெங்களூர் போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ளனர்.



இதுகுறித்து பெங்களூர் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. பெங்களூர் போக்குவரத்து காவல் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், ''இயர்போன்கள் வாகன ஓட்டிகளின் காதுகளை அடைத்து விடும். இதனால் விபத்து நேர்வதற்கான அபாயம் உள்ளது. வாகனம் ஓட்டும்போது இயர்போன் மூலமாக பேசுவது, பாடல்கள் கேட்பது என இரண்டுமே விதிமீறல்தான்'' என்றார்.



போலீசார் கண்காணித்து கொண்டிருக்கையில் மட்டும் இயர்போன்கள் இல்லாமல் இருந்தால் போதும் என நினைத்து விட வேண்டாம். போலீசார் இல்லாவிட்டாலும் கூட அந்தந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வாகன ஓட்டிகளை கண்காணிக்கும். இதன் மூலமாக வாகனம் ஓட்டும்போது இயர்போன்களை பயன்படுத்துபவர்களை கண்டறிய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன் இதனை மீறுபவர்களுக்கு இ-சலான் அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெங்களூர் போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி மஹாராஷ்டிரா மாநிலம் புனே போக்குவரத்து போலீசாரும், இயர்போன்களை பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருகின்றனர்.



எலியில் இருந்து எச்.ஐ.வி கிருமியை முற்றிலும் அகற்றி அமெரிக்க பல்கலைக்கழகம் சாதனை | Run World Media

உயிர்க்கொல்லி கிருமியாக அறியப்படும் எச்.ஐ.வி. கிருமியை அழிக்கும்  மருந்தை கண்டறிய, உலகம் முழுவதும் பல ஆராய்சிகள் நடந்து வரும் நிலையில், அதற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

மனித உயிருக்கு எமனாக வரும் இந்த அபாயகரமான நோய் முதன் முதலில் 1981-ம் ஆண்டில் (டிசம்பர்) கண்டறியப்பட்டது. 1983-ல் பாரிஸ் நாட்டை சேர்ந்த லுக் மாண்டேக்னியர் என்ற ஆய்வாளரும் மற்றும் அமெரிக்காவில் உள்ள ராபர்ட் கேலோ என்ற ஆய்வாளரும் எய்ட்ஸ் நோய்க்குரிய வைரசினை தனித்தனியாகக் கண்டறிந்தனர். 

 1986-ல் இந்த வைரசுக்கு மனிதன் முயன்று பெற்ற நோய் என்றும் எதிர்ப்பாற்றல் தேய்வு என்றும் பெயரிட்டனர்.

எச்.ஐ.வி (Human Immunodeficiency Virus) எனும் உயிர்க்கொல்லி கிருமி பாலியல் உறவு, ரத்தப்பறிமாற்றம் போன்றவற்றால் மனிதர்களுக்கு இடையே பரவுகிறது.


 எச்.ஐ.வி தொற்று கிருமிகள் உள்ளவர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடல் உறவு கொண்டால் அவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றி விடுகிறது. 80 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ் நோய் வர இதுவே காரணமாகும். 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான் எய்ட்ஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எய்ட்ஸ் கிருமியின் அணுகுமுறை சாதாரண நோய்க் கிருமிகளிலிருந்து மாறுபடுகிறது, எச்.ஐ.வி கிருமி உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களை முதலில் தாக்குகிறது. பின்னர், நாட்கள் செல்லச்செல்ல ஜீன்களில் கிருமியானது கலந்துவிடுகிறது.


அந்த வைரஸ் நேரடியாக தற்காப்பு வெள்ளை அணுக்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தை தடுத்து நோய் எதிர்ப்பு ஆற்றலை முற்றிலுமாகச் சீர்குலைப்பதுதான் அதன் தீவிரப் பண்பாகும். இது எப்படிஎன்றால் நமது நாட்டை காக்கும் காவலர்களை முற்றிலுமாக அழித்து விட்டால் நிலைமை என்ன ஆகும். 

மக்கள் பாதுகாப்பை இழந்து விட்ட நிலையில் யார் வேண்டுமானாலும் என்ன தீங்கு வேண்டுமானாலும் செய்து நம்மை அழித்து விடமுடியும். எய்ட்ஸ் கிருமிகள் நமது நோய் எதிர்ப்புச் சக்தியை முற்றிலும் அழித்து விட்ட நிலையில் ஒரு சாதாரணக் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் கூட நமது உயிரை பலிவாங்கி விடும்.

எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த தற்போது வரை மருந்துகள் கண்டறியப்படவில்லை. உலகம் முழுவதும் பல ஆராய்ச்சியாளர்கள் இதற்காக கடுமையாக முயன்று வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில், எலியில் இருந்து எச்.ஐ.வி கிருமியை அகற்றி அமெரிக்காவின் நெப்ரஸ்கா பல்கலைக்கழக மருத்துவ மைய ஆராய்ச்சியாளர்கள் சாதித்துள்ளனர்.

எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்ட ஒரு எலியை சோதனைக்குள்ளாக்கி புதிதாக கண்டறியப்பட்ட மருந்தை அதற்கு செலுத்தி, எலியின் ஜீன்-களில் இருந்து எச்.ஐ.வி கிருமியை அகற்றியுள்ளனர். எச்.ஐ.விக்கான தீர்வு கிடைப்பதில் இது முதல் வெற்றி என்று கூறப்படுகிறது.
தற்போது, எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்கள் ஏ.ஆர்.டி எனும் கூட்டு மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்கின்றனர். இந்த சிகிச்சை முழுவதும் நோய்த்தொற்றில் இருந்து காப்பாற்றாது என்றாலும், பாதிக்கப்பட்டவர்களில் வாழ்நாளை நீட்டித்து அவர்கள் இயல்பாக வாழ வழி செய்கிறது.

தற்போது, எலிகள் மீதான சோதனையை CRISPR-Cas9 என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜீன்களை மாற்றி அமைப்பது இந்த சோதனையின் முக்கிய அம்சமாகும்.


ஒயின் பாட்டிலில் மகாத்மா காந்தியின் படம்..... கொந்தளித்த இந்தியர்கள் விவரம் உள்ளே | Run World Media

மது பாட்டிலில் மகாத்மா காந்தி படத்தை வெளியிட்ட இஸ்ரேல் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. வெளிநாட்டு பொருட்களில் இந்து கடவுள், இந்திய தலைவர்கள் அவ்வப்போது அவமதிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.





இந்தநிலையில், இஸ்ரேலின், 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டைச் சேர்ந்த மல்கா பீர் நிறுவனம், மகாத்மா காந்தியின் படத்துடன் கூடிய, மது வகையை அறிமுகம் செய்துள்ளது. ஒயின் பாட்டிலில் மகாத்மா காந்தி படத்தை அச்சிட்டுள்ளது.


 அதில் கலர் டிசர்ட், ஓவர் கோட் அணிந்து, கூலிங் கிளாசுடன் இருப்பது போல காந்தியின் படம் உள்ளது.இந்தப் பிரச்னையை மாநிலங்களவையில் எழுப்பிய, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங், ''இஸ்ரேலை சேர்ந்த மதுபான நிறுவனம், தான் தயாரித்த மது பாட்டில்களில் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை பொறித்துள்ளது.




இதன் மூலம் தேசத் தந்தையான அவரை அவமானப்படுத்தி விட்டது.எனவே, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மது பாட்டிலில் உள்ள காந்தியின் உருவப்படத்தை உடனே நீக்கச் செய்ய வேண்டும் என்றார்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி, வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கருக்கு, துணை குடியரசுத் தலைவர், வெங்கையா நாயுடு கூறினார். இது தொடர்பாக, இஸ்ரேல் அரசை இந்திய தூதரகம் அணுகி முறையிட்டது.  அதைத் தொடர்ந்து, மல்கா பீர் நிறுவனம், இந்திய அரசிடமும், இந்திய மக்களிடமும் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அதன் மேலாளர் கிளாட் ட்ரார் கூறியுள்ளார்.




மகாத்மா காந்தியை பெரிதும் மதிப்பதாகவும், அவரது படத்துடன் கூடிய மது பாட்டில்களை, சந்தையில் இருந்து திரும்பப்பெற நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மதுப்பழக்கத்தை கடுமையாக எதிர்த்தவர் மகாத்மா காந்தி.

 எனவே தான், ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. இந்தநிலையில், ஆசியாவின் மிகப்பெரிய மதுபானக் கடை, கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தை ஒட்டியுள்ள காந்தி சிலை அருகே அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.




ஒரு நத்தையால் ஜப்பானில் 26 இரயில்கள் நிறுத்தம்... அப்படி என்ன நடந்தது? | Run World Media

இது உண்மையிலேயே வினோதமான சம்பவம்தான். ஜப்பானில் நடந்த இந்தச் சம்பவம் பலரையும் யோசிக்க வைத்திருக்கிறது.



ஜப்பானில் பெரும்பாலும் அதிவேகமாக ஓடக்கூடிய புல்லட் ரயில்கள்தான் இயங்கப்படுகின்றன. அப்படிப்பட்ட புல்லட் ரயிலையே ஒரு நத்தை நிறுத்தியிருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா?



கடந்த மாதம் 30-ம் தேதி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரயிலில் பயணித்த 12,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்ல முடியாமல் தவித்துள்ளனர். இரயில் வழித்தடத்திலேயே நின்றதால் அடுத்தடுத்து வரவிருந்த 26 ரயில்களின் சேவையும் முடக்கப்பட்டது. 

பின்னர் பழுது சரிசெய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன. அதற்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நேற்றுதான் ஜப்பான் ரயில் சேவை நிறுவனமான ஜே.ஆர் குஷு( JR Kyushu) அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளது.



இரயில் வழித்தடத்தில் மின்சார பாதிப்பு ஏற்பட்டதற்கு ஏதேனும் கருவி பழுதடைந்திருக்கும் என்றுதான் நினைத்தோம். பழுது பார்த்தபோது கருவிகள் அனைத்தும் சரியான முறையிலேயே இயங்கின. பின் மேலும் ஆராய்ந்ததில் இரயில் பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கான காரணம்; எலெக்ட்ரானிக் கருவியில் சிக்கியிருந்த இறந்த நத்தை என்பது பின்புதான் தெரிந்தது என்று ஜே.ஆர் குஷுரயில்வே நிறுவனம் கூறியுள்ளது. இதுபோன்ற சம்பவம் மிகவும் அரிதானது என்றும் குறிப்பிட்டுள்ளது.


மேலும் இதுபோன்ற சம்பவம் தொடராமல் கவனிக்கப்படும் என்றும் தெற்கு ஜப்பான் இரயில் நிறுவனம் கூறியுள்ளது.