வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 50 முதல் 500 ரூபாய் வரை அபராதம் | Madurantakam Muncipality Commissioner Collecting Fine from without face mask persons
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, May 13, 2020

மதுராந்தகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 50 முதல் 500 ரூபாய் வரை அபராதம் | Madurantakam Muncipality Commissioner Collecting Fine from without face mask persons


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சிப் பகுதியில் உள்ள கடைகளுக்கு முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு மதுராந்தகம் நகராட்சி ஆணையர் வ.நாராயணன் தலைமையில் வந்த அதிகாரிகள் அபராதம் விதித்தனர். 
முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு 50 ரூபாய் எனவும், கடை உரிமையாளர்களுக்கு 100 ரூபாய் எனவும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு பல்பொருள் அங்காடியில் முகக்கவசம் அணியாமல் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்ததால் அந்த அங்காடிக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு தலா 2 முகக்கவசங்கள் நகராட்சி அலுவலகம் சார்பாக வழங்கப்பட்டது.
இனிவரும் காலங்களில் இந்த ஆய்வு மற்றும் அபராத விதிப்புகள் கடுமையாக கட்டாயமாக்கப்படும் எனவும், பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார். 
இந்த ஆய்வின்போது, நகராட்சி துப்புரவு அதிகாரி எஸ்.எம்.மணிகண்டன், துப்புரவு ஆய்வாளர் கே.லட்சுமிபிரியா, சுகாதாரத் துறையைச் சார்ந்த வட்டார மருத்துவ அதிகாரி பிரியா, மருத்துவ அதிகாரி சந்தானகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
 

 

 

No comments:

Post a Comment