வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வெள்ளபுத்தூரில் வி.சி.க. சார்பில் 260 நபர்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் | VCK Party Giving Corona Relief at Vellaputhur

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, May 14, 2020

வெள்ளபுத்தூரில் வி.சி.க. சார்பில் 260 நபர்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம் | VCK Party Giving Corona Relief at Vellaputhur


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், வெள்ளபுத்தூர் ஊராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உத்தரவிற்கிணங்க செங்கை மாவட்ட செயலாளர் சூ..ஆதவன் தலைமையில் ஆதரவற்ற விதவை பெண்கள் 60 நபர்களுக்கு 5 கிலோ அரிசியும், இருளர் பழங்குடியினர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என 200 நபர்களுக்கு மதியம் உணவும் 11.05.2020 அன்று வழங்கப்பட்டது.
வெள்ளப்புத்தூர் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ப.விஜயகுமார் ஏற்பாட்டில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஏ.கே.தயாநிதி, தமிழினி, அதே சேகர், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய செயலாளர் முகிலன், தனுபார்த்தசாரதி, மங்களம் வாசுதேவன், சித்தாமூர் விஜி, தம்பிவளவன் ஆகியோர்கள் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment