வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [விபத்து] இராமாபுரம் எலப்பாக்கம் சாலையில் தொடர் விபத்து | கல்குவாரி லாரிகளால் சாலையில் ஏற்படும் தொடர் பள்ளம் | தூங்குகிறாரா ஆர்.டி.ஓ (R.T.O)..? | Anaikunnam Quarry Lorry Issue | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 10, 2020

[விபத்து] இராமாபுரம் எலப்பாக்கம் சாலையில் தொடர் விபத்து | கல்குவாரி லாரிகளால் சாலையில் ஏற்படும் தொடர் பள்ளம் | தூங்குகிறாரா ஆர்.டி.ஓ (R.T.O)..? | Anaikunnam Quarry Lorry Issue | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், இராமாபுரம் அருகே நேற்று (09.12.2020) இரவு சென்டிவாக்கத்தைச் சார்ந்த துரை என்பவர் சாலையில் இருந்த மிகப் பெரிய பள்ளத்தில் இரு சக்கர வாகனத்தினை ஏற்றி இறக்கி கட்டுப்பாடின்றி சுமார் 10 மீட்டர் தூரத்திற்குமேல் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். இதுகுறித்து உடனடியாக செங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.


பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதே பள்ளத்தில் இதுவரை 5 விபத்துக்கள் நடைபெற்றுள்ளதாகவும், எலப்பாக்கம் முதல் இராமாபுரம் வரை உள்ள சுமார் 6 கி.மீ. சாலையில் சுமார் 10 இடங்களில் இதுபோன்ற அதிக ஆழமான பள்ளங்கள் உள்ளதாகவும், இந்த பள்ளங்களுக்கான காரணங்கள் அனைத்தும் ஆனைக்குன்னம் கல்குவாரி லாரிகள்தான் எனவும் சுற்று வட்டார கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


இதனையடுத்து நேற்று இரவு அந்த வழியே வந்த கல் குவாரிக்கு செயல்பட்டு வரும் 7 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டு சாலையில் மறியல் நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் கல் குவாரியிலிருந்து வருகை புரிந்த ஊழியர்களிடம் முறையிடப்பட்டது.


பின்னர், சாலையினை இரண்டு தினங்களுக்குள் சீரமைத்து தருவதாக கல் குவாரி ஊழியர்கள் உறுதியளித்தபின்னர் மறியல் கைவிடப்பட்டது. இதுவரை எலப்பாக்கம், ஆனைக்குன்னம், பின்னப்பூண்டி போன்ற இடங்களில் கல்குவாரி லாரிகளின் அராஜக ஓட்டத்தினை கண்டித்தும், கல் குவாரி லாரிகளினால் விபத்தில் சிக்கியவர்களுக்காக இழப்பீடு கோரியும் பல்வேறு ஆர்பாட்டங்கள் நடத்தியும் அரசு எந்தவித கட்டுப்பாட்டையும் மேற்கொள்ளவில்லை. சாலையோரத்தில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் மாதத்திற்கு குறைந்தது 2 முறையாவது பழுதடைந்து சாலையில் குடிநீர் வீணாக பாய்கிறது.


கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மோகல்வாடியில் கல்குவாரிக்குச் சொந்தமான லாரி ஏறியதில் கீழாமூர் பகுதியைச் சார்ந்த சக்தி என்பவரின் இடது கை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக லாரிகளின் சிறைபிடிப்புகளின்போது மதுராந்தகம் ஆர்.டி.ஓ (R.T.O) எந்த இடத்திற்கும் வருகை புரிந்து ஆய்வு செய்ததில்லை. லாரிகள் கல் குவாரியில் இருந்து வெளியே வரும்போது 2 யூனிட் சக்கை கற்களை ஏற்றி வருவதாக அனுமதி சீட்டு பெறப்படுகிறது.



ஆனால் சுமார் 3 அல்லது 4 யூனிட் வரையிலான கல் சக்கைகள் கனரக லாரிகளின் மேற்புறத்தில் பாடிக்கு மேல் சுமார் 1 முதல் 2 அடி உயரத்திற்கு ஏற்றப்பட்டு லாரியின் அருகில் செல்பவர்களுக்கு விபத்தை ஏற்படுத்தும் போக்கிலேயே செல்கிறது. மேலும் லாரிகள் காலியாக செல்லும் நேரத்தில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் போக்கில் அதிவேகமாக செல்கிறது. 

ஆனால் நமது கட்டுப்பாட்டில் உள்ள ஒருப்பகுதியில் கனரக லாரிகளினால் அடிக்கடி கடும் விபத்து மற்றும் போராட்டங்கள் நடைபெறுவதே தெரியாத அளவிற்கு மதுராந்தகம் ஆர்.டி.ஓ (R.T.O) வேலை பார்த்து வருவதாகவும், ஆர்.டி.ஓ (R.T.O) களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே கல் குவாரி லாரிகளின் அராஜகப் போக்கு கட்டுக்குள் வரும் எனவும், அளவுக்கு மீறிய பாரம் ஏற்றி வருவதாலேயே சாலைகளில் சுமார் அரை அடி வரை பள்ளம் ஏற்படுவதாகவும் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோள்…!


No comments:

Post a Comment