வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2020-01-05
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, January 13, 2020

திருப்புட்குழி விபத்தில் மேஸ்திரி பலி - Thirupputkuzhi Accident News

காஞ்சிபுரம் அடுத்த, பாலுசெட்டிசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 49 கட்டட மேஸ்திரி நேற்று முன்தினம் இரவு, ஹீரோ இருசக்கர வாகனத்தில் திருப்புட்குழிக்கு சென்றார்.




அப்போது, வேலுாரில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி சென்ற அரசு பஸ், அவர் மீது மோதியது. இந்த விபத்தில், ஏழுமலை பலத்த காயம் அடைந்தார். பின், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, இரவு, 10:00 மணிக்கு இறந்தார். இது குறித்து, பாலுசெட்டிசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Thursday, January 09, 2020

அச்சச்சோ ரேஷன் கடையில் காய்ந்து கிடக்கும் பொங்கல் கரும்புகள் | Pongal Prices are damaged in Fairprice Shop Goodown

செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்புக்கு வழங்க உள்ள கரும்புகள், பண்டகசாலையில் காய்கின்றன.




தமிழக அரசு, கூட்டுறவு ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது. தொகுப்பில், கரும்பு, உலர் திராட்சை உள்ளிட்டவை தரப்படுகின்றன.


செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடைகளில் கரும்புகள் வழங்க, செங்கல்பட்டு கூட்டுறவு பண்டக சாலை கிடங்கில், இருப்பு வைக்கப்பட்டுள்ளன.


பல நாட்களுக்கு முன்பே, வெளி மாவட்டங்களில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட கரும்புகள், ஒரே இடத்தில் பல நாட்களாக கிடப்பதால், தற்போது, காய்ந்து கருகுகின்றன.குடும்ப அட்டைதாரர்களுக்கு, காய்ந்த கரும்புகள் வழங்கப்படுமா அல்லது புதிதாக கரும்புகள் வரவழைத்து தரப்படுமா என்பது, கேள்வியாக இருக்கிறது.