வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Chengalpattu Taluk News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Chengalpattu Taluk News. Show all posts
Showing posts with label Chengalpattu Taluk News. Show all posts

Saturday, July 04, 2020

அச்சிறுபாக்கத்தில் காவல் ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம் | Acharapakkam | Vil Ambu News

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம்  பேரூராட்சி சமுதாய கூடத்தில் 03.07.2020 அன்று மாலை 5 மணிக்கு பேரூராட்சியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர்  மற்றும்  குடியிருப்போர் சங்கத்தினர்களோடு ஆலோசனை கூட்டமானது அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் தலைமையில்  நடைபெற்றது.
இதில், அச்சிறுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுரேஷ் முன்னிலை வகித்து கொரோனா வைரஸிலிருந்து தம்மையும், சமுதாயத்தையும் பாதுகாப்பது குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். இதில் காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், அச்சிறுபாக்கம் ஆரம்ப சுகாதார ஆய்வாளர் கன்னியப்பன், பேரூராட்சி  பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த தருணத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனவும், எக்காரணத்தைக் கொண்டும் கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் அரசாங்கத்தின் அறிவுரைகளை மீறக்கூடாது எனவும் காவல் ஆய்வாளர் சரவணன் கேட்டுக் கொண்டார்.


இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கையுறைகள், முகக்கவசம்  மற்றும்  கிருமிநாசினி ஆகியவை வழங்கப்பட்டது.
 
இதில் அனைத்து வியாபாரிகளும் கடைமுன்பு கோடு போடுவது, கடைதிறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரத்தை நிர்ணயம் செய்வது, முகக்கவசம் அணியவில்லையென்றால் பொருட்கள் கிடையாது என்று பொதுமக்களுக்கு கூறவேண்டும் எனவும் சமூக இடைவெளியுடன் வரிசையில் நிற்க வைத்து வியாபாரம் செய்யவேண்டும் போன்ற உறுதிமொழிகள் ஆலோசனை கூட்டத்தில் மூலமாக எடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 


 


Thursday, April 30, 2020

விஜய் மக்கள் இயக்கம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய மற்றும் நகர இளைஞரணி சார்பில் வரையப்பட்ட கொரோனா ஓவியம் | Corona drawing by Vijay Makkal iyakkam Thirukazhukundram

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வைரஸின் உருவத்தை விஜய் மக்கள் இயக்கம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய மற்றும் நகர இளைஞரணி சார்பில் ஓவியமாக வரைந்து அதில் விழித்திரு தனித்திரு வீட்டிலிரு எனும் வாசகத்தை வரைந்து உள்ளனர்.



கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், தேவையற்று வாகனங்களில் சுற்றும் பொதுமக்கள் கொரோனா வைரஸின் தீவிரத்தை உணரவேண்டும் என்ற நோக்கத்திலும் விஜய் மக்கள் இயக்க திருக்கழுக்குன்றம் ஒன்றிய,நகர  இளைஞரணி பொறுப்பாளர்கள் இந்த ஓவியம் வரையப்பட்டதாக கூறினர். மேலும், இந்த செயலுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Thursday, March 26, 2020

அச்சிறுபாக்கம் பி.டி.ஓ அதிரடி பணியிட மாற்றம் | காரணம் என்ன..? | Acharapakkam BDOTransfer News | Vil Ambu

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி பணிகளை கவனித்து வந்தவர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெரோம் ஆனந்த்.




இவர் சில முறைகேடுகள் செய்த ஊராட்சி செயலர்களுக்கு சலுகைகள் வழங்கியதாகவும்,  ஊராட்சி நிதியில் பணம் இருந்தும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனவும் தெரிகிறது.

தற்போதைய காலகட்டத்தில் துப்புரவு பணியாளர்களின் ஆதரவு இல்லாமால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியமில்லாத விஷயம். ஆனால் துப்புரவு பணியாளர்களின் ஊதிய விஷயத்தில் அலட்சியம் காட்டியதனாலேயே  அதிரடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.


தற்போது வட்டார வளர்ச்சி அலுவலராக முத்துக்குமரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே, மறைமலைநகர் பயிற்சி அலுவலகத்தில் பணிபுரிந்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, February 19, 2020

இனி டோல்கேட்டுகளில் நோ பிஸினஸ் | Small Buisness are not allowed here after at any toll plazza | Run World Media

சுங்கச் சாவடிகள் என்றாலே நினைவுக்கு வருவது நேர விரயம் மற்றும் பண விரயம் தான். ஆனால் தற்போது Fastag செயல்முறைக்கு வந்தபின்னர் நேர விரயம் என்பது ஓரளவிற்கு கட்டுக்குள் உள்ளது.



ஆனால், இதற்கும் அப்பாற்பட்டு நமக்கு நினைவில் வருவது என்னவெனில் டோல்கேட் அருகிலே உள்ள சிறு கடைகளும், கையேந்தி வியாபாரிகளும் தான்.


ஓடும் வாகனங்களில் ஏறி, இறங்கி இவர்கள் தங்களுடைய வயிற்றுப்பிழைப்பிற்காகவே சில அபாயகரமான வேலைகளைச் செய்கின்றனர்.

சில சமயங்களில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவதன் காரணமாக அருகே வரும் வாகனங்களை கவனிக்காமல் இவர்களுக்கு விபத்து ஏற்பட்டு பலத்த காயமோ அல்லது சில சமயங்களில் உயிர்போகும் நிலையோ கூட ஏற்படுகிறது. மேலும் சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் இதே நிலையே.


இதனால் சுங்கச்சாவடி அருகே உள்ள வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வியாபாரம் செய்வதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் விதமாக சுங்கச்சாவடி அருகே வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அப்படி இந்த தடையை மீறுவோர் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த எச்சரிக்கையினையடுத்து செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் அவர்கள் அச்சிறுப்பாக்கத்தை அடுத்த ஆத்தூர் சுங்கச் சாவடியருகே உள்ள சிறு வியாபாரிகளுக்கு துண்டுபிரச்சுரம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.




என்னதான் இதுபோன்ற சிறுவியாபாரிகளின் பிழைப்பு கெட்டாலும், இந்த வியாபாரிகளின் உயிர், இவர்களின் குடும்பத்தின் நிலை மற்றும் வாகன ஓட்டிகளின் குடும்பம் நிலையை யோசிக்கும் பட்சத்தில் இதுபோன்ற சில எச்சரிக்கைகள் வரவேற்கத்தக்கதே என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

Thursday, January 09, 2020

அச்சச்சோ ரேஷன் கடையில் காய்ந்து கிடக்கும் பொங்கல் கரும்புகள் | Pongal Prices are damaged in Fairprice Shop Goodown

செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு தொகுப்புக்கு வழங்க உள்ள கரும்புகள், பண்டகசாலையில் காய்கின்றன.




தமிழக அரசு, கூட்டுறவு ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது. தொகுப்பில், கரும்பு, உலர் திராட்சை உள்ளிட்டவை தரப்படுகின்றன.


செங்கல்பட்டு மாவட்ட ரேஷன் கடைகளில் கரும்புகள் வழங்க, செங்கல்பட்டு கூட்டுறவு பண்டக சாலை கிடங்கில், இருப்பு வைக்கப்பட்டுள்ளன.


பல நாட்களுக்கு முன்பே, வெளி மாவட்டங்களில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட கரும்புகள், ஒரே இடத்தில் பல நாட்களாக கிடப்பதால், தற்போது, காய்ந்து கருகுகின்றன.குடும்ப அட்டைதாரர்களுக்கு, காய்ந்த கரும்புகள் வழங்கப்படுமா அல்லது புதிதாக கரும்புகள் வரவழைத்து தரப்படுமா என்பது, கேள்வியாக இருக்கிறது.