வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஹெல்மேட் இல்லாமல் வேகமாக சைக்கிள் ஓட்டினால் ரூ. 2000 அபராதம் ! - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 08, 2018

ஹெல்மேட் இல்லாமல் வேகமாக சைக்கிள் ஓட்டினால் ரூ. 2000 அபராதம் ! - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்


சைக்கிள் ஓட்ட ஹெல்மெட் தேவை என்பது தெரியுமா? அதை விட சைக்கிளை குறிப்பிட்ட வேகத்தில் தான் ஓட்ட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கேரளாவின் கும்பாலாவில் இருக்கும் நெடுஞ்சாலை காவல்துறை அதிகாரிகள், உத்தரபிரதேசத்தை சேர்ந்த காசிம் என்பவரை பிடித்து, ரூ.2000 அபராதம் விதித்திருக்கிறார்கள். காரணம்? சைக்கிளில் அதிக வேகமாகச் சென்றதுதான். காசிமே இதில் அதிர்ச்சியாகியிருக்கிறார்.

தன்னிடம் பணம் இல்லை என காசிம் கூறியபோது, காவல்துறை அதிகாரிகள் ரூ.500-க்கான ரசீதை அவரிடம் தந்திருக்கிறார்கள். காசிம்மின் சைக்கிளில் காற்றையும் இறக்கிவிட்டிருக்கிறார்கள். காசிம்க்கு அடுத்த அதிர்ச்சி, அந்த ரசீதில் இருந்தது ஒரு பெண்ணின் ஸ்கூட்டர் எண். காசிம், நடந்த சம்பவத்தை, அந்த ரசீதுடன், சமூக வலைதளத்தில் பதிவிட்டவுடன் இது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

கும்பாலா மாவாட்ட தலைமை காவல் அதிகாரி இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் காவல் நிலைய பொறுப்பாளரே இதன் பின் இருக்கிறார் என்றும், விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Popular Posts

No comments:

Post a Comment