வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து எம்.என்.சி. பெண்ணை பலாத்காரம் செய்த 2 சகாக்கள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து எம்.என்.சி. பெண்ணை பலாத்காரம் செய்த 2 சகாக்கள்டெல்லியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்ணை உடன் பணிபுரியும் இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேற்கு டெல்லியின் துவாரகா பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பிர்ஜு(25), வினோத் குமார்(31). அவர்கள் சனிக்கிழமை பணி முடிந்து வீட்டிற்கு காரில் கிளம்பினார்கள்.


அப்போது உடன் பணிபுரியும் பெண் ஒருவருக்கு லிஃப்ட் கொடுத்துள்ளனர். காரில் ஏறிய அந்த பெண்ணுக்கு அவர்கள் குளிர்பானம் கொடுத்துள்ளனர். மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்ட குளிர்பானத்தை குடித்த அந்த பெண் மயங்கிவிட்டார்.(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

அவர் மயங்கிய பிறகு அவரை தங்கள் வீட்டிற்கு தூக்கிச் சென்று பிர்ஜுவும், வினோத்தும் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன் பிறகு அந்த பெண்ணை வசந்த் கஞ்ச் பகுதிக்கு அருகே விட்டுவிட்டனர்.
அந்த பெண் எப்படியோ தனது வீட்டை அடைந்தார். தனக்கு நடந்த கொடுமை பற்றி குடும்பத்தாரிடம் தெரிவித்தார். பிர்ஜு மற்றும் வினோத் மீது நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து பிர்ஜு மற்றும் வினோத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment