வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 17, 2018

7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்



பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 



பாகிஸ்தானில்  பஞ்சாப் மாகாணம், கசூர் மாவட்டத்தில் கடந்த  ஜனவரி மாதம், ஜைனப் அன்சாரி  (வயது 7) என்ற சிறுமி திடீரென மாயமானாள். சிறுமி மாயமானது பற்றி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்த போது, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். உடற்கூறு ஆய்வில்,  அந்தச் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. (தொடர்ச்சி கீழே...)


இதையும் படிக்கலாமே !!!



இது கசூர் மக்களுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும், சிறுமி ஜைனப்பின் பெற்றோர் சவுதி அரேபியாவில் இருந்து நேற்று முன்தினம் ஊர் திரும்பினார்கள். அதைத் தொடர்ந்து சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவத்தில் நீதி வழங்கக்கோரி உள்ளூர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அங்குள்ள போலீஸ் நிலையத்தையும், துணை கமிஷனர் அலுவலகத்தையும் முற்றுகையிட சென்றனர்.


அவர்களின் போராட்டத்தில் கலவரம் மூண்டது. போலீஸ் நிலையத்தின் மீது மக்கள் தாக்குதல் நடத்தினர். துணை கமிஷனர் அலுவலகத்தை சூறையாட முயன்றனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.போராட்டத்தில் கலவரம் மூண்டது. அப்போது நட ந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக  இம்ரான் அலி (வயது 24) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஆட்கடத்தல்,  பாலியல் பலாத்காரம், கொலை, பயங்கரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று லாகூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இம்ரான் அலி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிமன்றம், 3 மரண தண்டனை விதித்து  தீர்ப்பு அளித்தது. 


இன்று அதிகாலை குற்றவாளி இம்ரான் அலிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. லாகூர் கோட் லோக்பாத் சிறைசாலையில் இந்த தண்டனை நிறைவேற்றபட்டது.  இந்த தண்டனையின் போது  மாஜிஸ்திரேட் அதில் சர்வார் மற்றும் ஜைனப்பின் தந்தை முகமது அமீனும்  இருந்தனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment