வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சாலையில் கணவருடன் தூங்கிய பார்வையற்ற பெண் பலாத்காரம் செய்து கொலை.. சென்னையில் பயங்கரம்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, October 13, 2018

சாலையில் கணவருடன் தூங்கிய பார்வையற்ற பெண் பலாத்காரம் செய்து கொலை.. சென்னையில் பயங்கரம்!வண்டலூரில் கணவருடன் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த பார்வையற்ற பெண் கடத்தி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றவரை தேடி வருகின்றனர்.

 சென்னை வண்டலூர் மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கி வசித்து வருபவர் மணிகண்டன். 32 வயதான இவர் பேப்பர் பொறுக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. 28 வயதான விஜயலட்சுமியின் சொந்த ஊர் கடலூர். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்காக இன்டர்வியூவுக்கு சென்றபோது விபத்தில் ஒரு கண் பறிபோனது.
(தொடர்ச்சிகீழே...)
இதையும் படிக்கலாமே !!!
காதல் திருமணம்
 இதனை தொடர்ந்து பொத்தேரியில் உள்ள மருத்துவமனையில் விஜயலட்சுமி சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அட்டண்டராக வேலை பார்த்த பொத்தேரியை சேர்ந்த மணிகண்டனுக்கும், விஜயலட்சுமிக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் கடந்த 5 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
பிளாட்பாரத்தில்.. இந்த திருமணத்தால் மணிகண்டனின் வேலையும் பறி போனது. விஜயலட்சுமி, மணிகண்டன் இருவரது பெற்றோரும் வீட்டில் சேர்க்காததால் வறுமையில் இருந்த தம்பதியினர் வண்டலூர் மேம்பாலத்தில் தங்கி பேப்பர் பொறுக்கும் பணியில் ஈடுபட்டனர்.


போதை நபர்
 நேற்று முன்தினம் இருவரும் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஃபுல் மப்பில் வந்த நபர் விஜயலட்சுமியின் கையைப்பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துள்ளார்.


முட்புதருக்குள் கடத்தல்
 இதனால் அதிர்ச்சியடைந்த விஜலட்சுமி அலறி கூச்சலிட்டடார். சத்தம் கேட்டு மணிகண்டன் திடுக்கிட்டு எழுந்து அந்த மர்ம நபரைதடுத்தார். உடனே, அந்த போதை ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி, விஜயலட்சுமியை ஒரு முட்புதருக்குள் கடத்தி சென்றார்.


மனைவியை தேடிய கணவன்
 நள்ளிரவு நேரத்தில் யாருமே இல்லாததால், அந்த மர்ம நபரை நெருங்க மணிகண்டன் பயந்து அப்பகுதியை சுற்றிச்சுற்றி வந்துள்ளார். வெகு நேரத்திற்கு பின், அதிகாலை அந்த நபர் தனது மனைவியை அழைத்து சென்ற இடத்தை நோக்கி மணிகண்டன் சென்றார்.


உயிருக்கு போராடிய மனைவி..
 அப்போது, முட்புதருக்குள் நிர்வாணமாக ரத்த போக்குடன் விஜயலட்சுமி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன், விஜயலட்சுமி மீது சேலையை போற்றி மேம்பாலம் பகுதிக்கு தூக்கி வந்தார்.


பிரேத பரிசோதனை
 சிறிது நேரத்தில் ரத்தப்போக்கு அதிகமானதால் விஜயலட்சுமி துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பெரும் அதிர்ச்சி 
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பார்வையற்ற பெண் என்றும் பாராமல் கதற கதற பலாத்காரம் செய்து கொன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment