வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் கொண்டாடும் வினோத தசரா விழா
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, October 19, 2018

மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் கொண்டாடும் வினோத தசரா விழாமகாராஷ்டிரா மாநிலத்தில் தசரா விழாவை முன்னிட்டு மனைவிகளால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சூர்ப்பனகையின் உருவ பொம்மையை எரித்து கொண்டாடினர்.
தசரா விழா என்பது ஒவ்வொரு ஆண்டும் ராவணனின் உருவ பொம்மையை எரித்து கொண்டாடப்படும் விழா ஆகும். ராமருக்கும், ராவணனுக்கும் ஏற்பட்ட போரின் நினைவாய் இந்த விழா கொண்டாடப்படுகிறது. (தொடர்ச்சி கீழே...)  இதையும் படிக்கலாமே !!!

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாட்னி பிதிட் புருஷ் சங்கத்னா என்ற அமைப்பானது மனைவிமார்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஆண்கள் இணைந்து உருவாக்கிய அமைப்பு ஆகும். இந்த அமைப்பு வருடந்தோறும் ராவணன் உருவ பொம்மைக்கு பதிலாக சூர்ப்பனகையின் உருவ பொம்மையை எரித்து தசரா கொண்டாடி வருகின்றனர்.இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் பரத் புலாரே பேசுகையில், இந்தியாவில் உள்ள அனைத்து சட்டங்களும் பெண்களுக்கு ஆதரவாகவும், ஆண்களுக்கு எதிராகவும் இருப்பதாகவும், அதனை பலரும் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இந்த கொடுமையை கண்டிப்பதன் ஒரு பகுதியாகவே சூர்ப்பனகையின் உருவபொம்மையை எரித்து தசரா கொண்டாடப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment