வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பள்ளிக்கரணையில் பயங்கரம்; மனைவி மீது சந்தேகத்தால் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, October 14, 2018

பள்ளிக்கரணையில் பயங்கரம்; மனைவி மீது சந்தேகத்தால் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்


பள்ளிக்கரணையில் மனைவி மீதுள்ள சந்தேகத்தால் மனைவியிடம் சண்டையிட்ட கணவன் அவரது கழுத்தை அறுத்துக்கொன்றுவிட்டு சரணடைந்தார்.

பள்ளிக்கரணை, பாரதிதாசன் தெருவில் வசிப்பவர், கிருஷ்ணமூர்த்தி (35) இவருக்கு மகாலட்சுமி (32) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி வேளச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். மனைவியின் நடத்தையில் கிருஷ்ணமூர்த்திக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.

குடும்பத்தை நடத்த இரண்டு பேர் சம்பாதித்தால்தான் முடியும் என்பதால் மகாலட்சுமி வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் சந்தேகப்புத்தியால் கிருஷ்ணமூர்த்தி மனைவி மகாலட்சுமியை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறி வந்துள்ளார். இதை ஏற்க மறுத்த மகாலட்சுமி தொடர்ந்து வேலைக்குச் சென்று வந்துள்ளார். ஏற்கனவே சந்தேக புத்தியுள்ள கிருஷ்ணமூர்த்தி மனைவியுடன் இதைக்காரணம் காட்டி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு தொழில் நடத்த மகாலட்சுமி உதவியுள்ளார்.


இதை அறிந்த கிருஷ்ணமூர்த்தி அதை வைத்து மனைவியிடம் கடுமையாக சண்டையிட்டுள்ளார். பின்னர் மகாலட்சுமி தூங்கியுள்ளார். ஆனால் ஆத்திரத்திலும், சந்தேகத்திலுமிருந்த கிருஷ்ணமூர்த்தியால் தூங்க முடியவில்லை. அடுப்படிக்கு சென்ற அவர் அங்கிருந்த காய்கறி அறுக்கும் கத்தியை எடுத்துவந்து தூங்கிக்கொண்டிருந்த மனைவி மகாலட்சுமியின் கழுத்தில் குத்தியும் அறுத்தும் கொலைசெய்துள்ளார்.


மகாலட்சுமி உயிரிழந்ததும் கத்தியுடன் பள்ளிக்கரணை காவல் நிலையம் சென்ற அவர் சரணடைந்தார். இதையடுத்து, உடனடியாக கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்கு வந்த பள்ளிக்கரணை போலீஸார் உயிரிழந்த மகாலட்சுமியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தேகபுத்தியால் மனைவியை கொன்ற கணவனால் இரண்டு பிள்ளைகள் அனாதைகளாக்கப்பட்டது அப்பகுதியில் உள்ள மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment