வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வீட்டை தூய்மையாக வைக்க கரீனா கபூர் யோசனை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 01, 2018

வீட்டை தூய்மையாக வைக்க கரீனா கபூர் யோசனைபிரபல இந்தி நடிகை கரீனா கபூர். இவர் வீட்டை மாசு இல்லாமல் தூய்மையாக வைப்பது குறித்து கூறியதாவது:

 
‘‘நான் சுற்றுப்புறங்களையும், சுற்றுச்சூழலையும் அறிவேன். ஒரு தாயாக இருப்பதால், தினசரி வாழ்வில் சுற்றியுள்ள தூசு மற்றும் காற்று மாசுகளில் இருந்து தூய்மையாக வீட்டை வைத்திருப்பதிலும் கவனமாக இருக்கிறேன். என் குடும்பத்திற்கான ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிக்கிறேன். உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறேன். (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!


வெளிப்புற காற்றில் மாசு அதிகம் உள்ளது. எனவே வீட்டுக்குள்ளேயே காற்றை சுத்திகரித்து தூய்மைப்படுத்தும் கருவி பொருத்தி இருக்கிறேன். உடற்பயிற்சியும், ஆரோக்கியமும் நமக்கு மிகவும் முக்கியம். தூக்கமும் அவசியம். தூங்கும்போது கிருமிகள், தூசி மற்றும் துகள்கள் மூச்சுகாற்று வழியாக உடலுக்குள் செல்லலாம். எனவே வீட்டில் காற்று சுத்தமாக இருப்பது அவசியம்.நிம்மதியான தூக்கத்தை விட ஆரோக்கியமான தூக்கம் சிறந்தது. ஆரோக்கியமான தூக்கத்துக்கு பிறகுதான் சுறுசுறுப்பு கிடைக்கும். சுத்தமான காற்றை நான் சுவாசிப்பதற்கு காற்று சுத்திகரிப்பு கருவி எனக்கு உதவுகிறது. இதன் மூலம் வெளியே அசுத்தமான காற்று இருந்தாலும் வீட்டில் சுத்தமான காற்று இருக்கிறது. உடற்பயிற்சியையும் வீட்டுக்குள்ளேயே செய்கிறேன். சுத்தமான காற்று இயற்கையுடன் என்னை நெருங்க வைக்கிறது. யோகா செய்யும்போது சுத்தமான காற்றை உள் இழுக்க வேண்டும்.’’  இவ்வாறு கரீனா கபூர் கூறினார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsNo comments:

Post a Comment