வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இந்த வயசிலேயேவா?: வாரிசு நடிகையை பார்த்து சிரிக்கும் இயக்குனர்கள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, November 02, 2018

இந்த வயசிலேயேவா?: வாரிசு நடிகையை பார்த்து சிரிக்கும் இயக்குனர்கள்



வாரிசு நடிகையை பற்றி தான் கோடம்பாக்கத்தில் பேச்சாக கிடக்கிறது. வாரிசு நடிகையை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. அதில் பெரும்பாலானவை பெரிய நடிகர்களின் படங்கள். அம்மணி இதுவரை நடித்துள்ள படங்களில் பெரும்பாலானற்றின் ஹீரோக்கள் சீனியர்கள். இந்நிலையில் வாரிசு நடிகை ஒரு முடிவு செய்துள்ளார்.

பிரேக் 
 வாரிசு நடிகை நடிப்புக்கு குட்டி பிரேக் விட்டு வெளிநாட்டிற்கு சென்று ஓய்வு எடுக்கப் போகிறாராம். தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளாராம். இது குறித்து தான் கோலிவுட்டில் ஆளாளுக்கு விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலிடத்தை பிடிக்க ஆசைப்படும் நேரத்தில் பிரேக் எடுக்கிறார். (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
இயக்குனர்கள் 
 நடிகையின் முடிவால் தயாரிப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெளிநாட்டுக்கு சென்று ஓய்வு எடுக்கும் அளவுக்கு அப்படி என்ன கடுமையாக உழைத்தாராம் என்று சில இயக்குனர்கள் நடிகையை பற்றி பேசி சிரிக்கிறார்களாம். தொடர்ந்து படங்களில் நடித்துள்ள போதிலும் அவர் நடிப்பை பற்றி ரசிகர்கள் பெரிதாக பேசுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அழகு
 நடிகையின் வயது கம்மி தான் என்றாலும் தற்போதே ஆன்ட்டி போன்று தெரிகிறார். சீனியர் ஹீரோக்களுக்கு பக்கத்தில் அமர்ந்தால் அவர்களை விட வயதானவர் போன்று தெரிகிறார் என்ற விமர்சனம் எழுந்தது. ஒரு வேளை அழகை மேம்படுத்த வெளிநாட்டிற்கு செல்கிறாரோ?. இருக்கலாம், அதில் தப்பு இல்லையே.


நடிப்பு 
 நடிகை தான் உயர்ந்த நடிகருடன் நடித்த படம் வெளியான பிறகு சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்த திட்டமிட்டார். ஆனால் அந்த படத்தை பார்த்தவர்கள் அனைவரும் மற்றொரு நடிகையின் நடிப்பை தான் புகழ்ந்தார்கள். வழக்கம் போன்று வாரிசு நடிகையின் நடிப்பை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment