வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன் அருள் பற்றி பலரும் அறியாத சில உண்மைகள்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 05, 2018

'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன் அருள் பற்றி பலரும் அறியாத சில உண்மைகள்!


நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சரவணா நாடார் என்பவருக்கு பிறந்த மூன்று மகன்களில் ஒருவர் தான் செல்வரத்தினம். இவரது சகோதரர்கள் யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினம். இந்த மூவரில் இளையவரான செல்வரத்தினம் அவர்கள் தான் முதன் முதலில் சென்னை வந்தவர். சென்னை வந்து தனது அயராத உழைப்பால் வியாபாரத்தில் வெற்றிப்பெற்று, தனது சகோதரர்களையும் உடன் சேர்த்துக் கொண்டார் செல்வரத்தினம் அவர்கள்...

காபி விற்றார்... 
 சென்னை சென்ற புதிதில் செல்வரத்தினம் அவர்கள் செய்த தொழில், தெரு தெருவாக சென்று காபி விற்றது. நாள்பட தனது அயராத உழைப்பால் சிறிய கடை ஒன்றை துவங்கி மெல்ல, மெல்ல தொழில் வெற்றி கண்டார் செல்வரத்தினம் அவர்கள். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
சகோதரர்கள்... 
தான் வியாபாரத்தில் உயர்ந்தவுடன் அவர் செய்து முதல் காரியம் தனது சகோதரர்களை குடும்பத்துடன் சென்னைக்கு அழைத்து வந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டது.


சாம்ராஜ்ஜியம்!
 சரவணா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் கிளைகள் பல வளர்ந்தன. தன்கள் கால் வைத்த துணிக்கடை, நகைக்கடை, எலக்ட்ரானிக்ஸ் என எல்லா தொழிலும் வெற்றிக் கண்டனர் ரத்தினம் சகோதரர்கள்.


இறப்பு! 
 பக்கவாதம் காரணத்தால் செல்வரத்தினம் அவர்கள் மரணமடைந்தார். இவர் இறந்த பிறகு, பிள்ளைகளுக்குள் பிரிவு வந்தது. யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினம் அவர்களுடைய பிள்ளைகள் நடத்துவது தான் சரவணா ஸ்டோர்ஸ்.


சரவணன் அருள்!
 செல்வரத்தினம் அவருடைய மகன் சரவணன் அருள் தனது தங்கை கணவருடன் இணைந்து நடத்தி வரும் கடைகள் சரவணா செல்வரத்தினம் ஆகும். இதை இவர் நாடு முழுக்க பல முன்னணி நகரங்களில் கிளைகள் பரப்பி பெரிதாக்க பெரும் முயற்சி செய்து வருகிறார். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.


நடிப்பு! 
 இவர் தனது கடைக்கு தானே விளம்பரத்தில் நடிப்பது பற்றி பல கருத்துகள் எழுந்து வருகின்றனர். முதலில் தமன்னா, ஹன்சிகாவுடன் நடித்ததற்கு பலரும் இவரை கேலி, கிண்டல் செய்தனர். இப்போது இவர் குழந்தைகளுடன் சம்மர் ஆஃபர் விளம்பரத்தில் நடித்துள்ளார்.


குடும்பம்! 
இவருக்கு திருமணாகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருக்கு திருமணமும் முடிந்துவிட்டது.


முருகன்!
 சமீபத்தில் தான் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வேல் ஒன்றை காணிக்கை செலுத்தி வந்தார் சரவணன் அருள்.


நயன்தார புரளி! 
 இதற்கு இடையே யாரோ, நயன்தாராவுடன் சரவணன் அருள் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என கொளுத்திப் போட, அந்த புரளி காட்டுதீ போல பரவியது. ஆனால், அப்படி ஒரு எண்ணம் தனக்கு இல்லை என சரவணன் அருள் அவர்கள் பதில் அளித்துள்ளார்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment