வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இந்த உணவுகளை காலையில் சாப்பிட்டால் நாள் முழுக்க தூங்கி கிட்டே இருப்பிங்க...!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, November 01, 2018

இந்த உணவுகளை காலையில் சாப்பிட்டால் நாள் முழுக்க தூங்கி கிட்டே இருப்பிங்க...!இந்த வாழ்க்கை எதற்காக என்று கேட்டால், பெரும்பாலானோரின் பதில் "நல்லா சாப்பிடுவதற்காகவே" என்று பதில் கூறுவார்கள். சாப்பிடுவது எந்த வகையிலும் தவறாகாது. ஆனால், நாம் சாப்பிடுகின்ற உணவு சரியான உணவுதானா..? என்பதை உணர்ந்து சாப்பிட்டாலே போதும். குறிப்பாக நாம் சாப்பிடுகின்ற காலை உணவு மற்ற உணவுகளை விட முக்கியமானது.


காலை நேரத்தில் நாம் உண்ணும் உணவே அன்றைய நாளை எப்படிப்பட்ட நாளாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யும். நீங்கள் சாப்பிட கூடிய இந்த உணவுகள், நாள் முழுக்க உங்களை தூங்க வைத்து கொண்டே இருக்கும். அவை என்னென்ன உணவுகள் என்பதை இனி அறிவோம்.

சோறா..? தூக்கமா..?
 பலருக்கு அடிக்கடி தூக்கம் வந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்யும் போதும், பள்ளியில் பாடத்தை கவனிக்கும் போதும் பயங்கரமாக தூக்கம் வரும். இந்த நிலையில் நம்மால் எதுவுமே செய்ய இயலாது. நாள் முழுக்க நீங்கள் தூங்கு மூஞ்சியாக இருக்க, காலையில் நீங்கள் சாப்பிட்ட உணவுகளே முக்கிய காரணமாகும். (தொடர்ச்சி கீழே...)
 

இதையும் படிக்கலாமே !!!


தூக்கத்திற்கு காரணம் இவர்தான்..!
 உங்களுக்கு முரட்டு தூக்கம் வருவதற்கு காரணமாக இருப்பது உணவில் உள்ள Tryptophan என்கிற அமினோ அமிலம் தான். இந்த அமிலங்கள் உள்ள உணவை நீங்கள் சாப்பிட்டால் செரடோனின் என்கிற ஹார்மோன் மெலடோனினாக மாறி ஆழ்ந்த தூக்க நிலையை உங்களுக்கு தரும்.


வாழை பழம் வேண்டாமே..!
 பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் இதில் இருந்தாலும் இவற்றை காலையில் சாப்பிட்டால் மூளையை தூங்க வைத்து விடும். ஏனெனில், இதில் உள்ளஅதிக படியான tryptophan என்கிற அமினோ அமிலம் நாள் முழுக்க தூக்க நிலையை தந்து விடும்.காலையிலே ஓட்ஸா..?
 காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவது அருமையான உணவு பழக்கமாகும். ஆனால், ஓட்ஸ் சாப்பிட்டால் மெலடோனின் ஹார்மோனை சுரக்க செய்யும். இதனால் மூளையை தாலாட்டு பாடி ஆழ்ந்த தூக்கத்தை இவை தரும். எனவே, காலை உணவாக ஓட்ஸ் எடுத்து கொள்வதை தவிர்த்து விடுங்கள்.


பால் பொருட்கள் எப்படி..?
  நம்மில் பலருக்கு காலையில் எழுந்தவுடன் பால் சம்பந்தமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது பிடிக்கும். ஆனால், இது நாள் முழுக்க தூங்கும் நிலையை உங்களுக்கு தரும். குறிப்பாக ஜீஸ், பன்னீர் போன்ற பால் பொருட்களை சாப்பிட்டால் அதிகமாக தூக்கத்தை தர கூடும்.
CC

பாதாம்
 பாதாமில் tryptophan அமினோ அமிலம் அதிகமாக உள்ளது. எனவே, காலையில் இதனை எடுத்து கொண்டால் தூக்கத்தை ஏற்படுத்துகின்ற ஹார்மோனை தூண்டி தூக்கத்தை தரும். மேலும், தசைகளையும் ஓய்வு நிலைக்கு இது தள்ளி விடும்.


வெள்ளை அரிசி
 நாம் தினமும் காலையிலே வெள்ளை அரிசியை உணவாக சாப்பிட்டால் அவ்வளவுதான். இதில் கார்போஹைட்ரெட் அதிகமாக இருப்பதால் தூங்கும் நிலையை நமது மூளைக்கு ஏற்படுத்தும். மேலும், இவை அதிகமான தூக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.எண்ணெய் பொருட்கள்
 குறிப்பாக எண்ணெய்யில் பொறித்த அல்லது வறுத்த உணவுகளை காலையிலே சாப்பிட்டால் விளைவு உங்களுக்கு மோசமாக இருக்கும். அலுவலகமோ அல்லது பள்ளிக்கூடமோ செல்பவர்கள் எண்ணெய்யை அதிகமாக பயன்படுத்திய உணவுகளை தவிர்த்து விடுங்கள். இல்லையேல் தூக்கம் உங்களுக்கு சொக்கும்.


செரிஸ்
 நம் எல்லோருக்கும் செரி பழங்களை அதிகம் பிடிக்கும். செரி பழங்கள் சாப்பிடுவதற்கு சுவையாக உள்ளது என்பதால் காலை நேரத்தில் உண்டு விடாதீர்கள். பிறகு பயங்கர தூக்கத்தை இந்த பழங்கள் தந்து விடும். இதனை ஜுஸாக குடித்தாலும் இந்த பாதிப்பு ஏற்படும்.சீமை சாமந்தி டீ
 இந்த டீ அதிக ஆரோக்கியம் உள்ளது என்றாலும், இதனால் விளைவுகள் சற்றே அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அதாவது, காலை நேரத்தில் இந்த டீயை குடித்தால் நாள் முழுவதும் அதிக தூக்கம் கொண்டதாக மாற கூடும்.பூசணி விதைகள் 
ஜின்க் மற்றும் மெக்னீசியம் அதிகமாக உள்ள இந்த பூசணி விதையில் தூங்க வைக்க கூடிய தன்மையும் அதிகம் உள்ளது. எனவே, காலை உணவில் பூசணி விதைகளை சேர்த்து கொள்ளாதீர்கள். 
 மேற்சொன்ன உணவுகளை காலை வேளையில் சாப்பிடாமல் இருந்தால், தூக்க கலக்கம் இல்லாமல் சுறுசுறுப்பாக நாள் முழுக்க வேலை செய்யலாம்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment